ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

பிரதமர் போட்டுப் பார்த்த ஜியோ கண்ணாடியில் இவ்வளவு அசத்தல் விஷயங்களா? அசரவைக்கும் அம்சங்கள்!

பிரதமர் போட்டுப் பார்த்த ஜியோ கண்ணாடியில் இவ்வளவு அசத்தல் விஷயங்களா? அசரவைக்கும் அம்சங்கள்!

ஜியோ கண்ணாடி

ஜியோ கண்ணாடி

Jio glass: பிரதமர் போட்டுப் பார்த்த ஜியோ கண்ணாடியில் அசத்தல் சிறப்பம்சஙகள் குறித்துத் தெரிந்துக்கொள்வோம்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  பிரதமர் நரேந்திர மோடி இன்று இந்தியாவில் 5ஜி சேவையைத் தொடங்கி வைத்து ஜியோ நிறுவனத்தின் 5ஜி தொழில்நுட்ப கருவியான ஜியோ கண்ணாடியைப் பயன்படுத்தி அதன் அனுப்புவதைப் பெற்றார். அந்த ஜியோ கண்ணாடியின் சிறப்பம்சங்களை இங்குப் பார்க்கலாம்.

  இந்தியாவில் இன்று 5ஜி சேவையைப் பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் 5ஜி சேவையின் அனுபவத்தை பெரும் வகையில் ஜியோ நிறுவனத்தின் 5ஜி தொழில்நுட்ப கருவிகளைப் பிரதமர் மோடி முதன் முதலில் பயன்படுத்திப் பார்த்தார். அதின் ஜியோ நிறுவனத்தின் 5ஜி ஜியோ கண்ணாடியைப் பிரதமர் உபயோகப்படுத்தி அதின் அம்சங்கள் குறித்துத் தெரிந்துகொண்டுள்ளார்.

  ஜியோ கண்ணாடி என்றால் என்ன?

  ஜியோ கண்ணாடி இந்த ஆண்டு நடைபெற்ற ரிலையன்ஸின் வருடாந்திர பொதுக் கூட்டத்தில் (AGM) முதலில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் மூலம் மெய் நிகர் இடம் (virtual space) உருவாக்கப்படும். இதில் 3D அவதார்கள், ஹாலோகிராபிக் உருவங்கள் போன்றவை மூலம் மெய் நிகரில் வேறு இடங்களில் நாம் கலந்துரையாட முடியும். மேலும் இதன் மூலம் வீடியோ கலந்துரையாடல்களிலும் பங்கு பெறமுடியும்.

  ஜியோ கண்ணாடியின் சிறப்பம்சங்கள்:

  இந்த 5ஜி கண்ணாடி 75 கிராம் அளவு எடையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மென்பொருளில் ஒரு 3D உருவம் உருவாக்கிப் பேசுபவர்கள் நேரில் இருப்பது போலவே மற்றவரிடம் கலந்துரையாடமுடியும். மேலும் அந்த 3D ஹாலோகிராமை நமக்கு ஏற்றார் போல் தனித்துவமாக வடிவமைத்துக் கொள்ளவும் முடியும்.

  ஜியோ கண்ணாடியின் பயன்பாடுகள் உபயோகத்திற்கு ஏற்றத்து போல் மாறுபடுகிறது. இ-லேர்னிங், மீடியா, பொழுதுபோக்கு, கேமிங் மற்றும் ஷாப்பிங் உள்ளிட்ட தொழில்கள் மற்றும் துறைகளில் இதனின் சேவை வேறுபடுகின்றன.

  Also Read : இன்ஸ்டாகிராம் யூஸர்களுக்கு குட்நியூஸ்... இந்த புது அப்டேட் பற்றி தெரியுமா?

  எளிமையாகச் சொல்லவேண்டும் என்றால் இந்த ஜியோ கண்ணாடி, ஸ்மார்ட்போன் மூலம் விர்ச்சுவல் உலகம் என்று சொல்லப்படும் மெய் நிகர் உலகில் உங்களை இணைக்கிறது. இதுவரை படங்களில் கிராபிக்ஸ் தொழில்நுட்பம் மூலம் பார்த்ததை இனி நிஜ உலகில் பார்த்து அனுபவிக்கலாம்.

  5ஜி தொழில்நுட்பம் மூலம் அதிவேக இணையச் சேவையை இந்தியா பெறவிருக்கிறது. தொழில்நுட்ப ரீதியில் இது மிகப் பெரிய சாதனையாக உள்ளது. இதன் மூலம் பல கோடி மக்களை இணையத்தில் இணைக்கின்றனர். நல்ல தரத்தில் அதிவேக இணையம் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்துள்ளது.

  Published by:Janvi
  First published:

  Tags: 5G technology, Jio, Reliance Jio