Home /News /technology /

உங்கள் ஐபோன் பேட்டரியை பாதுகாக்க இந்த தவறுகளை தவிர்க்கவும்

உங்கள் ஐபோன் பேட்டரியை பாதுகாக்க இந்த தவறுகளை தவிர்க்கவும்

iPhone

iPhone

IPhone Battery Life | பேட்டரி ஆயுளை நீட்டிக்க டிஸ்ப்ளேயின் ஒளியை குறைப்பது அல்லது ஆட்டோ-ப்ரைட்னஸில் வைக்கலாம்.

    நீங்கள் பழைய ஐபோனைப் பயன்படுத்தினாலும் சரி அல்லது தற்போதுள்ள புதிய மாடல் போன்களை பயன்படுத்தினாலும் சரி. அதன் பேட்ட்டரியின் ஆயுட்காலம் உங்கள் கையில் தான் உள்ளது. இப்போது சிறுவர் முதல் முதியவர்கள் வரை அனைவரின் கைகளுக்கும் மொபைல் வந்துவிட்டது நாம் அனைவரும் அறிந்ததே. அதை நமக்கு தேவையான பல தகவல்களுக்காகவும், பல விஷயங்களை கற்றுக்கொள்வதற்காகவும் பயன்படுத்துகிறோம். இப்படி பயன்படுத்தும் போனின் பேட்டரி சேமிப்பு என்பது முக்கியமான ஒன்று தானே.

    உங்கள் போனின் பேட்டரியை நீண்ட காலத்திற்கு பயன்பாட்டில் வைத்திருப்பது என்பது மிகவும் சிக்கலான ஒன்று தான். பேட்டரி பயன்பாட்டை பொருத்துதான் நாம் உபயோகப்படுத்தும் போனின் ஆயுளும் அமையும். ஆப்பிள் ஐபோன் நிறுவனம், தனது யூசர்களுக்கு ஐபோன் பேட்டரியின் ஆயுளை அதிகரிக்கும் வகையில் சில குறிப்புக்களை வெளியிட்டுள்ளது. அதில் இந்த விதமான தவறுகளை எல்லாம் செய்ய வேண்டாம் எனவும் அதனால் வரக்கூடிய ஆபத்து பற்றியும் கூறப்பட்டுள்ளது.

    சார்ஜ் செய்யும் போது, ஐபோனை அதிக வெப்பநிலையிலிருந்து தள்ளிவைத்திருப்பது நல்லது. 35° C க்கும் அதிகமான வெப்பநிலை உங்கள் ஐபோனின் பேட்டரி திறனை நிரந்தரமாக சேதப்படுத்தும், எனவே அதிகமான வெப்பநிலையின் உங்கள் போனை வைக்க வேண்டாம் என ஆப்பிள் ஐபோன் நிறுவனம் தெரிவித்துள்ளது.

    Also Read : ஒரே நேரத்தில் 2 ஸ்மார்ட்போன்களில் சாட்டிங் - Whatsapp-ல் புதிய அறிமுகம்

    ஐபோனை 100 சதவிகிதம் முழுமையாக சார்ஜ் செய்யாதீர்கள்! அவ்வாறு செய்வது பேட்டரியை சேதப்படுத்தும் என ஆப்பிள் ஐபோன் நிறுவனம் பரிந்துரைக்கிறது. பொதுவாக நாம் எங்காவது பயணம் செய்யும் முன் நம் செல்போனை முழுமையாக சார்ஜ் செய்வோம், ஆனால் அப்படி செய்வது நல்லதல்ல.



    அதே நேரத்தில், போன் முழுவதுமாக அதாவது பூஜ்ஜியத்திற்கு வராத அளவிற்கு பார்த்துக்கொள்ளவதும் அவசியம். ஏனென்றால் இந்த நிலையில் போனின் பேட்டரி ஒரு தீவிரமான டிஸ்சார்ஜ் நிலைக்கு செல்லக்கூடும். இல்லையென்றால் இந்த நிலை பேட்டரி சேமித்து வைத்திருக்கும் திறனை முழுவதுமாக செயலிழக்க செய்யும்.

    பேட்டரி ஆயுளை நீட்டிக்க டிஸ்ப்ளேயின் ஒளியை குறைப்பது அல்லது ஆட்டோ-ப்ரைட்னஸில் வைத்து உபயோகப்படுத்துவது நல்லது. பேட்டரியின் ஆயுளை நீட்டிப்பதற்க்கு இது ஒரு எளிய வழியாகும். இதன் மூலம் வேகமாக குறையும் சார்ஜை நம்மால் குறைக்க முடியும். இதனால் போனில் குறைந்த அளவு மட்டுமே பேட்டரியின் சார்ஜ் செலவாகும் மற்றும் அதிக நேரம் போனை நம்மால் பயன்படுத்தவும் முடியும்.



    நீங்கள் மொபைலில் நெட்வொர்க் இணைப்பை பயன்படுத்துவதை குறைத்து அதற்கு மாற்றாக வைஃபை இணைப்பை பயன்படுத்துவது பேட்டரியின் திறனை அதிகப்படுத்த உதவும் என்றும் ஆப்பிள் ஐபோன் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது உங்கள் ஐபோன் பேட்டரியின் சேமிப்பு தன்மையை அதிகப்படுத்தி அதிக நாட்களுக்கு உங்கள் மொபைலை சேதத்திலிருந்து காப்பற்றுவதற்க்கு உதவுகிறது. ஆதலால் உங்கள் வைஃபையை எப்பொழுதும் ஆன் செய்து வைத்திருப்பதும் அவசியம்.

    இப்படியாக ஆப்பிள் ஐபோன் நிறுவனம் தங்கள் வாடிக்கையாளர்களின் ஐபோன் பேட்டரிகளின் திறனை சேமிக்கும் வகையில் தனது முக்கிய குறிப்புகளை வெளியிட்டுள்ளது.
    Published by:Vijay R
    First published:

    Tags: Apple iphone, IPhone

    அடுத்த செய்தி