• HOME
  • »
  • NEWS
  • »
  • technology
  • »
  • உங்கள் ஸ்மார்ட்போன் பேட்டரியின் ஆயுட்காலம் அதிகரிக்க இந்த டிப்ஸ்கள் முக்கியம்...!

உங்கள் ஸ்மார்ட்போன் பேட்டரியின் ஆயுட்காலம் அதிகரிக்க இந்த டிப்ஸ்கள் முக்கியம்...!

மாதிரி படம்

மாதிரி படம்

சார்ஜ் செய்யும் போது ஸ்மார்ட்போன் 45°C ஐ விட அதிக சூடாக இருக்கக்கூடாது. ஒருபுறம் மொபைல் சார்ஜ் ஆக மறுபுறம்  நீங்கள் கேம் அல்லது மற்ற வேலைகளை செய்வது சாத்தியம் என்றாலும், அது போன்ற செயல்கள் உங்கள் மொபைலை அதிக வெப்பமாக்கும்.

  • News18
  • Last Updated :
  • Share this:
நமது மொபைல் போனின் செயல்திறனை மேம்படுத்துவதில் போனின் பேட்டரி பெரும்பங்கு வகிக்கிறது. போனின் நீடித்த ஆயுளுக்கு தரமான பேட்டரி அவசியம். ஆனால் மொபைல் போனில் அடிக்கடி ஏற்படும் பெரியதொரு பிரச்சனைகளில் ஒன்று, அதன் பேட்டரி விரைவில் காலியாகி விடுவதே. உங்கள் ஸ்மார்ட்போன் பேட்டரியின் ஆயுட்காலம் அதிகரிக்க மொபைலை புத்திசாலித்தனமாகப் பயன்படுத்துவது முக்கியம் என்றாலும், பொதுவான சேதத்தைத் தடுக்க என்ன செய்யவேண்டும் என்பது பற்றியும் சிந்திக்க வேண்டியது அவசியம். உங்கள் பேட்டரியை முடிந்தவரை ஆக்டிவாக வைத்திருக்க உதவும் சார்ஜிங் டிப்ஸ்களை இங்கே காண்போம்.

முதலில் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்யாதீர்கள்:

பொதுவாக, ஒவ்வொரு முறையும் நீங்கள் மொபைலை சார்ஜ் செய்யும் போது உங்கள் ஸ்மார்ட்போனை 100% சார்ஜ் செய்ய வேண்டிய அவசியமில்லை. அதற்கு பதிலாக, நீங்கள் அதை 80% சார்ஜ் ஆன பின் ஆப் செய்து விடுங்கள். இதேபோல், சார்ஜ் செய்வதற்கு முன் பேட்டரி ஆயுள் மிகக் குறைவடையும் வரை காத்திருப்பதைத் தவிர்ப்பது நல்லது. பேட்டரி அளவு 30% க்கு குறைந்தவுடன், சார்ஜ் செய்வது நல்லது.

லோபேட்டரியை அனுமதிக்காதீர்கள்: 

உங்கள் மொபைலை சார்ஜ் செய்ய பேட்டரியின் ஆயுள் 5% க்கு கீழ் வரும்வரை காத்திருக்க வேண்டாம். அது முற்றிலும் தவறானது. உண்மையில், ஒரு முழு சார்ஜிங் அதாவது 0% முதல் 100% வரை சார்ஜ் செய்யவேண்டும் என்றால் உங்கள் மொபைல் சில நாட்கள் யூஸ் பண்ணாமல் இருந்தாலோ அல்லது டிஸ்பிளேவில் ஏதேனும் சிக்கல் இருந்தால் மட்டுமே இவ்வாறு செய்யவேண்டும்.

உங்கள் மொபைலை நைட் முழுதும் சார்ஜ் செய்ய வேண்டாம்:

பொதுவாக படுக்கைக்குச் செல்வதற்கு முன் உங்கள் மொபைலை  சார்ஜ் செய்வதுவிட்டு காலையில் சார்ஜ்ஜரை ஆப் செய்தால் உங்கள் மொபைல் சீக்கிரம் ரிப்பேர் ஆகிவிடும். அவசியமான நேரங்களில் உங்கள் மொபைல் வேலை செய்யாமல் போய்விட்டால் அன்றைய தினம் உங்களுக்கு மட்டுமல்லாது உங்களை சுற்றியுள்ளவர்களுக்கும் கோபத்தை ஏற்படுத்திவிடும். யாராவது அவசரமாக கால்/மெசேஜ் செய்வார்கள் ஆனால் அப்போது உங்கள் போன் சிக்கலில் இருக்கும். எனவே அதை போன்ற சிக்கலை தவிர்க்க நைட் சார்ஜிங் வேண்டாம்.

 Also read... Twitter: ட்விட்டர் உங்கள் கணக்கை லாக் செய்தால் கவலை வேண்டாம்... இதை ட்ரை பண்ணுங்க போதும்!

அதிக சூடாகாமல் பார்த்து கொள்ளுங்கள்:

சார்ஜ் செய்யும் போது ஸ்மார்ட்போன் 45°C ஐ விட அதிக சூடாக இருக்கக்கூடாது. ஒருபுறம் மொபைல் சார்ஜ் ஆக மறுபுறம்  நீங்கள் கேம் அல்லது மற்ற வேலைகளை செய்வது சாத்தியம் என்றாலும், அது போன்ற செயல்கள் உங்கள் மொபைலை அதிக வெப்பமாக்கும். ஆகவே மேற்சொன்னதை தவிர்ப்பது ஒரு சிறந்த புத்திசாலித்தனம். இதேபோல், சார்ஜ் ஆகும்போது உங்கள் மொபைலை நேரடியாக சூரிய ஒளியில் விட்டுவிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

மேற்சொன்னவற்றை நீங்கள் இப்போதே கவனிக்கவில்லை என்றால்  காலப்போக்கில் இந்த லேசான சிக்கல்கள் அதிகமாகி உங்கள் பேட்டரியை சேதப்படுத்தும் மற்றும் அதன் ஆயுட்காலத்தையே குறைக்கும். என்னதான் ஸ்மார்ட்போன்கள் இப்போது மலிவு விலைக்கு கிடைத்தாலும் அதற்காக நாம் அதை அடிக்கடி வாங்கக்கூடாது. மொபைல்போன்களை தேவைக்காக பயன்படுத்தவேண்டும்.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: