Home /News /technology /

ஒவ்வொரு இந்தியரும் ஸ்மார்ட்போன் வாங்க சராசரியாக எவ்வளவு செலவு செய்கிறார் தெரியுமா.?

ஒவ்வொரு இந்தியரும் ஸ்மார்ட்போன் வாங்க சராசரியாக எவ்வளவு செலவு செய்கிறார் தெரியுமா.?

மாதிரி படம்

மாதிரி படம்

Smartphones | ஒட்டுமொத்த சராசரி விலையாக, இந்தியாவில் ஸ்மார்ட்போன் வாங்க கிட்டத்தட்ட ரூ. 15000 க்கு மேல் செலவு செய்கிறார்கள்.

கடந்த சில மாதங்களாக ஸ்மார்ட்போன்களின் விலை அதிகரித்த வண்ணம் இருக்கின்றன. எவ்வளவு விலை அதிகரித்தாலும் அதை வாங்கி பயன்படுத்தக்கூடிய அத்தியாவசிய பொருட்களில் ஒன்றாக ஸ்மார்ட் போன்களும் மாறிவிட்டன. எனவே, விலை அதிகரித்தாலும் அதை பொருட்படுத்தாது தங்களுக்கு தேவையான வசதிகள் மற்றும் அம்சங்கள் இருக்கும் ஸ்மார்ட் போனையே மக்கள் விரும்புகிறார்கள். அதற்கு எவ்வளவு வேண்டுமானாலும் பணம் செலவழிக்க தயாராக இருக்கிறார்கள்.

கோவிட் ஊரடங்கு காலத்தில் ஸ்மார்ட்போன் மற்றும் இணையத்தள சேவைகள் பயன்பாடு அதிகரித்த நிலையில், ஸ்மார்ட்போனின் விற்பனையும் அதிகரித்து. ஆனால், காலாண்டு அடிப்படை மற்றும் ஆண்டுக்கு ஆண்டு விற்பனையாகும் விகிதத்தில் சில சறுக்கல்களும் காணப்பட்டன.

இந்தியாவில், தொடர்ந்து நான்கு குவார்ட்டரில், ஸ்மார்ட்போன்களின் சராசரி செல்லிங் விலை அதிகரித்துள்ளது. ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையிலான மூன்று மாத கால அளவில் கிட்டத்தட்ட ரூ. 16,323 அளவுக்கு அதிகரித்துள்ளன. மேலும், இந்த விலை அதிகரிப்புக்கு ஏற்கனவே இருக்கும் மாடல்கள் மற்றும் புதிதாக அறிமுகம் செய்யப்படும் மாடல்கள் என்று இரண்டுக்குமே பொருந்துகிறது என்று ஸ்மார்ட்போன் விற்பனைப் பற்றிய புதிய அறிக்கை ஒன்று தெரிவித்தது.



மீடியாடெக் அடிப்படையிலான ஸ்மார்ட்போனின் சராசரி விற்பனை விலை என்பது ரூ. 13461 ஆகும். மொத்த விற்பனையாகும் எண்ணிக்கையில் 51% மீடியா டெக் ஸ்மார்ட்போன்களாகும். அதே நேரத்தில், குவால்காம் போன்களும் கொஞ்சம் கொஞ்சமாக சந்தையில் தனது இருப்பை அதிகரித்து வருகிறது. சமீபத்தில் 28% வரை ரெக்கவரி ஆனதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. மேலும், குவால்காம் போன்களின் சராசரி செல்லிங் விலை ரூ. 18870 ஆகும். ஒட்டுமொத்த சராசரி விலையாக, இந்தியாவில் ஸ்மார்ட்போன் வாங்க கிட்டத்தட்ட ரூ. 15000 க்கு மேல் செலவு செய்கிறார்கள்.

Also Read : ரூ.20,000 பட்ஜெட்டில் ஒரு தரமான 5ஜி போனை தேடுறீங்களா? 1 இல்ல 9 ஆப்ஷன்ஸ் இருக்கு!

ஒட்டுமொத்தமாக, இந்தியாவின் ஸ்மார்ட்போன் விற்பனை (ஷிப்மெண்ட் செய்வதன் அடிப்படையில்) தொடர்ச்சியாக மூன்றாவது குவார்ட்டராக குறைந்துள்ளது. முதல் மூன்று மாதங்களில் 37 மில்லியன் ஸ்மார்ட்போன்கள் விற்பனையானது, அதை தொடர்ந்து 5 % எண்ணிக்கை குறைந்துள்ளது.

Also Read : அதிரடி ஆஃபர்! குறைந்த விலையில் விற்கப்படும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட IPhone13..

இந்த நிதியாண்டின் தொடக்கம், கடந்த நிதியாண்டின் முதல் மூன்று மாதங்களில் பதிவான ஷிப்மெண்ட்டை விட கொஞ்சம் குறைவாகவும், மெதுவாகவும் உள்ளன என்று அறிக்கை கூறியுள்ளது. இதற்கு காரணமாக, கோவிட் தொற்றின் மூன்றாம் அலையின் பயம் என்று கூறலாம். அது மட்டுமின்றி, நாடு முழுவதும் பணவீக்கம் மற்றும், விலை குறைவான மாடல்களுக்கு அதிக டிமாண்ட் மற்றும் ஷார்ட்டேஜ் இருப்பதால், முதல் குவார்ட்டரில் விற்பனை மந்தமாக உள்ளது. மேலும், பணவீக்கத்தால் இந்தியா மட்டும் பாதிக்கப்படவில்லை, உலகம் முழுவதும் பல்வேறு துறைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால், நுகர்வோர் பயன்படுத்தும் பொருட்களின் விலை சரசரவென உயர்ந்துள்ளது.

Also Read : மொபைல் பேட்டரிகள் எதனால் தீப்பிடிக்கிறது ? 5 பொதுவான காரணங்கள் இங்கே..

மூன்று மாதங்களுக்கு விற்பனை என்ற அடிப்படையில் விற்பனை கொஞ்சம் குறைந்திருந்தாலும், ஸ்மார்ட்போன் சராசரி விற்பனை விலை அதிகரித்துள்ளது மற்றும் ஆண்டுக்கு ஆண்டு விற்பனையாகும் அடிப்படையில், 7% அதிகரித்துள்ளது என்பது குறிப்பிட்டத்தக்கது.
Published by:Selvi M
First published:

Tags: Smartphone, Technology

அடுத்த செய்தி