ஆப்பிள் நிறுவனத்தில் வேலை கிடைக்க ஹேக்கர் ஆன சிறுவன்..!

ஹேக் செய்து தன்னை ஆப்பிள் ஊழியனாகவே அடையாளப்படுத்திக் கொண்டவன் முக்கிய ஆவணங்களையும் சில அறிக்கைகளையும் எடுத்ததாகக் கூறியுள்ளான்.

Web Desk | news18
Updated: May 28, 2019, 8:35 PM IST
ஆப்பிள் நிறுவனத்தில் வேலை கிடைக்க ஹேக்கர் ஆன சிறுவன்..!
மாதிரிப்படம்
Web Desk | news18
Updated: May 28, 2019, 8:35 PM IST
ஆப்பிள் நிறுவனத்தில் வேலைக்குச் சேர தன் திறமையை நிரூபிப்பதாக நினைத்து சிறுவன் ஒருவன் ஆப்பிளின் ஒட்டுமொத்த சிஸ்டத்தையே ஹாக் செய்துள்ளான்.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருவனுக்கு உலகின் மிகப்பெரும் நிறுவனங்களுள் ஒன்றான ஆப்பிள் நிறுவனத்தில் பணியாற்ற ஆசை. இதனால், தன் திறமையை நிருபித்தால் மட்டுமே அந்த நிறுவனத்தில் பணியாற்ற முடியும் என நினைத்துள்ளான் சிறுவன்.

இதனால், ஆப்பிள் நிறுவனத்தைக் கவர்வதாக நினைத்துக்கொண்டு அந்நிறுவனத்தின் ஒட்டுமொத்த சிஸ்டத்தையே ஹேக் செய்துள்ளான். தன் நண்பன் ஒருவன் உடன் இணைந்து இதைத் தன் ’சிறப்பு அறிவியல் திறனால்’ செய்ததாக நிலைமையின் வீரியம் தெரியாமல் போலிஸாரிடம் தெரிவித்துள்ளான் அச்சிறுவன்.


ஹேக் செய்து தன்னை ஆப்பிள் ஊழியனாகவே அடையாளப்படுத்திக் கொண்டவன் முக்கிய ஆவணங்களையும் சில அறிக்கைகளையும் எடுத்ததாகக் கூறியுள்ளான். இதுகுறித்து அச்சிறுவனின் வழக்கறிஞர் கூறுகையில், “இதேபோல் ஐரோப்பியாவைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் ஆப்பிள் சிஸ்டத்தைக் ஹேக் செய்து பின்னர் அந்நிறுவனத்திலேயே பணியாற்றும் வாய்ப்பைப் பெற்றுள்ளான்.

இதைப் பார்த்து தன்னுடைய 13-ம் வயதிலேயே ஆப்பிள் சிஸ்டத்தை எனது கட்சிக்கார சிறுவன் ஹேக் செய்துள்ளான்” எனக் குறிப்பிட்டார். பெரிய சேதம் ஏதுமில்லை என ஆப்பிள் தெரிவித்த போதும் ஆஸ்திரேலிய நீதிமன்றம் அச்சிறுவனுக்கு 9 மாத நன்னடத்தை ஒப்பந்த விதிமுறையை அமல் செய்துள்ளது. அடுத்த 9 மாதத்தில் நன்னடத்தை மீறல் இருந்தால் 500 அமெரிக்க டாலர்கள் அபராதம் விதிக்கப்படும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் பார்க்க: iPhone-ஐ அதிக விலை கொடுத்து வாங்கும் நாடுகள் பட்டியலில் இந்தியாவின் இடம்?
First published: May 28, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...