இந்த ஐபோன் மாடல்களில் இனி வாட்ஸ்அப் வேலை செய்யாது: சப்போர்ட்டை இழக்கும் சாதனங்களின் விவரம்!

வாட்ஸ் அப்

வாட்ஸ்அப் பீட்டாவின் வெர்சன் 2.21.50, அறிக்கையின்படி, iOS 9 அல்லது அதற்கு முந்தைய OS வெர்ஷன்களில் இயங்கும் சாதனங்களை வாட்ஸ்அப் செயலி இனி ஆதரிக்காது.

  • News18
  • Last Updated :
  • Share this:
பேஸ்புக்கிற்கு சொந்தமான மெசேஜிங் ஆப்பான வாட்ஸ்அப், iOS 9-ல் இயங்கும் ஐபோன்களில் வேலை செய்வதை நிறுத்தக்கூடும் என்று வாட்ஸ்அப் டிராக்கர் WABetaInfo வெளியிட்ட சமீபத்திய அறிக்கையில் தகவல் கசிந்துள்ளது. வாட்ஸ்அப் பீட்டாவின் வெர்சன் 2.21.50, அறிக்கையின்படி, iOS 9 அல்லது அதற்கு முந்தைய OS வெர்ஷன்களில் இயங்கும் சாதனங்களை வாட்ஸ்அப் செயலி இனி ஆதரிக்காது. வாட்ஸ்அப் அதன் FAQ பக்கத்தில் இந்த மாற்றம் குறித்து இதுவரை ஏந்த அப்டேட்டையும் வெளியிடவில்லை.

ஆனால் செயலியின் இந்த புதிய வெர்சன் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வரும் போது இது புதுப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் பொருள் ஐபோன் 4 மற்றும் ஐபோன் 4s ஆகிய ஸ்மார்ட்போன்கள் பிரபலமான மெசேஜிங் ஆப்க்கான ஆதரவை இழக்கும். இதையடுத்து ஐபோன் 5 மாடல்கள் இப்போது வாட்ஸ்அப்பை இயக்கக்கூடிய மிகப் பழமையான ஐபோனாக மாறும் என்றும் கூறப்படுகிறது. ஐபோன் 5 ஸ்மார்ட்போன்களை iOS 10.3 வெர்சன் வரை அப்டேட் செய்துகொள்ள முடியும்.

இதுதவிர ஆண்ட்ராய்டு போன்களைப் பொறுத்தவரை, அண்ட்ராய்டு 4.0.3 வெர்சன் அல்லது புதிய வெர்சன்களில் இயங்கும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் வாட்ஸ்அப் தற்போது சப்போர்ட் செய்கிறது. எனவே இந்த வெர்சனை கொண்ட ஆண்ட்ராய்டு போன்களில் மக்கள் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்திக் கொள்ளலாம். IOS மற்றும் Android தவிர, வாட்ஸ்அப் KaiOSலும் இயங்குகிறது. இது ஜியோ போன் மற்றும் ஜியோ போன் 2 உள்ளிட்ட பல பீச்சர்டு போன்களில் பயன்படுத்தப்படுகிறது.

மறுபுறம் ஒரு தனிப்பட்ட வளர்ச்சியில், வாட்ஸ்அப் அதன் ஆர்ச்சிவ்டு சாட்களின் (Archived Chats) மேம்பட்ட வெர்சனை வெளியிட திட்டமிட்டுள்ளதாக WABetaInfo தெரிவித்துள்ளது. இந்த அம்சத்தின் வளர்ச்சிப்பணிகளில் நிறுவனம் பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது. ஆர்ச்சிவ்டு சாட்ஸ் செல்களுக்குகென வாட்ஸ்அப் சில UI மேம்பாடுகளைத் தயாரிக்கிறது என்றும் WABetaInfo தகவல்களை வெளியிட்டுள்ளது. இது ஒரு யூசர் தங்கள் ஆர்ச்சிவ்வில் ஏதேனும் சாட்களை வைத்திருந்தால் மட்டுமே தெரியும் என்றும் கூறப்படுகிறது.

Also read... கண்டதையும் தின்று உடலை கெடுத்து கொள்ளும் குழந்தைகளை மாற்ற வந்து விட்டது புதிய கேம் ஆப்!

மேலும், ஆர்ச்சிவ்டு சாட்களில் இருந்து வரும் அனைத்து அறிவிப்புகளும் மியூட் செய்யப்படும். அதாவது ஆர்ச்சிவ்டு சாட்களில் யூசர்கள் செய்திகளைப் பெறும்போது நோட்டிபிகேஷனாக பெற மாட்டார்கள். இந்த அம்சம் தேர்வு செய்யக்கூடிய விருப்பமாக வரும் என்று வாட்ஸ்அப் வட்டாரங்கள் WABetaInfo இடம் தெரிவித்துள்ளன. சமீபத்தில் நிறுவனம் வெளியிட்ட புதுப்பிக்கப்பட்ட தனியுரிமைக் கொள்கைக்கு எதிராக வெகுஜன மக்களின் புறக்கணிப்பை எதிர்த்துப் போராடும் வாட்ஸ்அப், மே 15 முதல் நடைமுறைக்கு வரும் புதுப்பிக்கப்பட்ட கொள்கை குறித்து வாட்ஸ்அப்பை பயன்படுத்தி வரும் யூசர்களுக்கு தொடர்ந்து நினைவுபடுத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், தனது செயலின் வெர்சன் சப்போர்ட் குறித்தும் விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: