சுமார் 3 ஆயிரம் ரூபாய் விலை குறைந்தது அசூஸ் ஜென்ஃபோன் மேக்ஸ் ப்ரோ M1!

ஆக்சிஸ் வங்கி வாடிக்கையாளர்களுக்கு 5% தள்ளுபடி என அசூஸ் ஃபோன்களுக்கு ஆஃபரும் உள்ளன.

Web Desk | news18
Updated: July 20, 2019, 4:00 PM IST
சுமார் 3 ஆயிரம் ரூபாய் விலை குறைந்தது அசூஸ் ஜென்ஃபோன் மேக்ஸ் ப்ரோ M1!
அசூஸ் ஜென்ஃபோன் மேக்ஸ் ப்ரோ M1
Web Desk | news18
Updated: July 20, 2019, 4:00 PM IST
விலை குறைக்கப்பட்ட அசூஸ் ஜென்ஃபோன் மேக்ஸ் ப்ரோ M1 தற்போது இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது.

அசூஸ் நிறுவனம் தனது ஸ்மார்ட்ஃபோன்களின் இந்திய விலைப் பட்டியலை மறு சீரமைத்துள்ளது. இதன் அடிப்படையில் பல அசூஸ் ஸ்மார்ட்ஃபோன்கள் விலை குறைக்கப்பட்டு விற்பனைக்கு வந்துள்ளன. விலை குறைக்கப்பட்ட ஃபோன்கள் ஃப்ளிப்கார்ட் போன்ற ஆன்லைன் விற்பனைத் தளங்களிலும் அப்டேட் செய்யப்பட்டுள்ளன.

இதில் அசூஸ் ஜென்ஃபோன் மேக்ஸ் ப்ரோ M1 10,998 ரூபாயிலிருந்து 7,999 ரூபாய்க்கு விற்பனைக்கு வந்துள்ளது. கடந்த ஆண்டு இந்தியாவில் அறிமுகமானது அசூஸ் ஜென்ஃபோன் மேக்ஸ் ப்ரோ M1. பட்ஜெட் ரக ஃபோன் என்பதால் இதற்கு வரவேற்பும் இருந்தது.


3ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஃபோன் 7,999 ரூபாய்க்கு விற்பனைக்கு உள்ளது. 4ஜிபி ரேம்+ 64ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ரகம் 8,999 ரூபாய்க்கும் 6ஜிபி ரேம்+64 ஜிபி ஸ்டோரேஜ் ரகம் 11,999 ரூபாய்க்கும் விற்பனைக்கு உள்ளன.

500 ரூபாய் முதல் 3ஆயிரம் ரூபாய் வரையில் விலை குறைந்துள்ளன அசூஸ் ஸ்மார்ட்ஃபோன்கள். ஃப்ளிப்கார்ட் தளத்தில் எக்ஸ்சேஞ்ச் ஆஃபர், ஆக்சிஸ் வங்கி வாடிக்கையாளர்களுக்கு 5% தள்ளுபடி என அசூஸ் ஃபோன்களுக்கு ஆஃபரும் உள்ளன.

மேலும் பார்க்க: பாப்-அப் செல்ஃபி கேமிரா உடன் அறிமுகமாகிறது ஓப்போ K3..!
First published: July 20, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...