Home /News /technology /

இந்தியாவில் அறிமுகமாகும் Asus நிறுவனத்தின் Zenbook, Vivobook லேப்டாப்கள் - விலை மற்றும் சிறப்பம்சங்கள்!

இந்தியாவில் அறிமுகமாகும் Asus நிறுவனத்தின் Zenbook, Vivobook லேப்டாப்கள் - விலை மற்றும் சிறப்பம்சங்கள்!


இந்தியாவில் அறிமுகமாகும் Asus நிறுவனத்தின் லேப்டாப்கள்

இந்தியாவில் அறிமுகமாகும் Asus நிறுவனத்தின் லேப்டாப்கள்

Asus Vivobook 15 Touch மலிவானது மற்றும் இந்தியாவில் ரூ.49,990 என்ற விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    பர்சனல் கம்ப்யூட்டர் தயாரிப்பு நிறுவனமான Asus, இந்தியாவில் தனது புதிய விவோபுக் மற்றும் ஜென்புக் லேப்டாப்களை அறிமுகப்படுத்தியுள்ளது. நிறுவனம் சமீபத்தில் ஆசஸ் ஜென்புக் 14 ஃபிளிப் , விவோபுக் 15 டச் மற்றும் விவோபுக் எஸ்14 ஃபிளிப் ஆகிய 3 டிவைஸ்களை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த புதிய Asus லேப்டாப்கள் லேட்டஸ்ட் 12-வது ஜென் இன்டெல் மற்றும் AMD Ryzen CPUs, பிரமிக்க வைக்கும் டிஸ்ப்ளே, ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் பல அம்சங்களை கொண்டுள்ளது.

    விலை விவரங்கள்:

    புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள Asus-ன் 3 லேப்டாப்களில் Asus Vivobook 15 Touch மலிவானது மற்றும் இந்தியாவில் ரூ.49,990 என்ற விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ZenBook Flip 14 மாடல் லேப்டாப்பின் விலை இந்தியாவில் ரூ.99,990 முதல் துவங்குகிறது. VivoBook S14 Flip மாடலின் ஒரு வேரியன்ட் ரூ.66,990 என்ற விலையிலும், மற்றொரு வேரியன்ட் ரூ.74,990 என்ற விலையிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த 3 புதிய லேப்டாப்களும் Asus-ன் வெப்சைட், அமேசான் மற்றும் பிளிப்கார்ட் ஆகியவற்றின் மூலம் ஆன்லைனில் வாங்கக் கிடைக்கும்.

    Asus ZenBook Flip 14 லேப்டாப்பின் ஸ்பெசிஃபிகேஷன்ஸ்:

    14-இன்ச் 2K OLED டிஸ்ப்ளே, 16:10 அஸ்பேக்ட் ரேஷியோ மற்றும் 550 nits பீக் பிரைட்னஸுடன் வெளியாகி உள்ள இது மிகவும் பிரீமியம் லேப்டாப் ஆகும். இந்த லேப்டாப் ஒரு நானோ எட்ஜ் டிசைனை கொண்டுள்ளது மற்றும் இருபுறமும் வெறும் 2.9 மிமீ பெசல்கள் அடங்கிய ஸ்லிம் ப்ரொஃபைலையும் கொண்டுள்ளதாக நிறுவனம் கூறுகிறது. இந்த லேப்டாப் 12-வது ஜென் இன்டெல் கோர் i7-12700H ப்ராசஸர் மற்றும் Intel Iris Xe கிராபிக்ஸ் மூலம் இயக்கப்படுகிறது.

    இது 16GB வரை LPDDR5 (4800MHz) ரேம் மற்றும் 1TB வரை PCIe Gen 4 SSD ஸ்டோரேஜூடன் வருகிறது. இந்த லேப் 63Wh பேட்டரி யூனிட் மற்றும் 100W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் உள்ளது. இதன் எடை வெறும் 1.4 கிலோ மற்றும் 15.9 மிமீ திக்னஸ் கொண்டது. Zenbook Flip 14 மார்க்கெட்டில் கிடைக்கும் OLED டிஸ்ப்ளே கொண்ட மிக மெல்லிய லேப்டாப்களில் ஒன்று என நிறுவனம் கூறியுள்ளது.

    Also Read :பிரபல உணவு டெலிவரி நிறுவனமான Zomato இனி வேறு பெயரில்.. புதிய பெயர் இது தான்!

    VivoBook S14 Flip லேப்டாப் ஸ்பெசிஃபிகேஷன்ஸ்:

    இது 14-இன்ச் IPS டிஸ்ப்ளே மற்றும் ஃபுல்-எச்டி ரெசல்யூஷன் மற்றும் 300 nits பீக் பிரைட்னஸுடன் வருகிறது. இந்த லேப்டாப் Intel Core i5 12500H சிப் மற்றும் AMD Ryzen 5 5600H சிப் உடன் Intel மற்றும் AMD CPU ஆப்ஷன்களுடன் வருகிறது. சுவாரஸ்யமாக Asus VivoBook S14 Flip லேப்டாப்பில் 24GB வரை DDR4 ரேம் ஆப்ஷன் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த லேப் கூல் சில்வர் மற்றும் க்வைட் ப்ளூ கலர்களில் கிடைக்கிறது.

    VivoBook 15 Touch லேப்டாப்பின் ஸ்பெசிஃபிகேஷன்ஸ்:

    15.6-இன்ச் FHD டிஸ்ப்ளேவுடன் 82% ஸ்கிரீன்-டு-பாடி ரேஷியோவுடன் கூடிய ஆல்-நியூ Asus VivoBook 15 (Touch) Intel Core i5 1240P CPU மூலம் இயக்கப்படுகிறது. இந்த லேப்டாப் விண்டோஸ் 11 ஹோம் அவுட்-ஆஃப்-பாக்ஸில் இயங்குகிறது. மேலும் இது 65W ஃபாஸ்ட் சார்ஜிங்குடன் 42Wh பேட்டரி பேக்கப்பை சப்போர்ட் செய்கிறது. இந்த லேப்டாப் 16GB வரையிலான LPDDR4 ரேம் மற்றும் 512GB வரை PCIe Gen 4 SSD ஸ்டோரேஜுடன் வருகிறது.
    Published by:Janvi
    First published:

    Tags: Budget laptop, Laptop

    அடுத்த செய்தி