Home /News /technology /

‘மேக் இன் இந்தியா’ லேப்டாப்கள் தான் எங்கள் குறிக்கோள் - அசுஸ் இந்தியா திட்டவட்டம்

‘மேக் இன் இந்தியா’ லேப்டாப்கள் தான் எங்கள் குறிக்கோள் - அசுஸ் இந்தியா திட்டவட்டம்

அசுஸ் லேப்டாப்

அசுஸ் லேப்டாப்

அசுஸ் நிறுவனம் இனி இந்தியாவில் லேப்டாப் உற்பத்தி செய்ய இருப்பதாகவும், மேக் இன் இந்தியாவில் ஒரு அங்கமாகச் செயல்படப் போவதாகவும் தெரிவித்துள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
வெளிநாட்டுத் தயாரிப்புகள் எளிதாக இந்தியாவில் எங்கு இருந்தாலும் பெற முடியும் என்றாலும், இந்தியப் பொருளாதாரம் வளர, மேக் இன் இந்தியா தயாரிப்புகளை ஊக்குவிக்கும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்ற வண்ணம் உள்ளன. அசுஸ் நிறுவனம் ஏற்கனவே இந்தியாவில் லேப்டாப்களுக்கான மார்க்கெட்டில் தனக்கான பிடித்துள்ள நிலையில், சமீபத்தில் நியூஸ் 18 செய்திகளுக்கு அளித்த பேட்டியில், இனி இந்தியாவில் லேப்டாப் உற்பத்தி செய்ய இருப்பதாகவும், மேக் இன் இந்தியாவில் ஒரு அங்கமாகச் செயல்படப் போவதாகவும் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே இந்தியாவில் எச்பி, ஏஸர், லெனோவோ, டெல் என்று பல நிறுவனங்கள் போட்டிப் போட்டுக்கொண்டு சந்தையில் இயங்கி வருவதோடு தற்பொழுது சியோமி மற்றும் ரியல்மியும் இந்த போட்டியில் இணைந்துள்ளது. கணிசமானவர்கள் எச்பி, லெனோவோ மற்றும் டெல் ஆகிய மூன்று பிராண்டுகளையே விரும்புகிறார்கள் என்றாலும், அசுஸ் லேப்டாப்பை தவிர்க்க முடியாது என்ற அளவுக்குக் கணிசமான வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது.

இந்தியாவின் ‘மேக் இன் இந்தியா’ திட்டத்துக்கு அசுஸ் நிறுவனம் எவ்வாறு பங்களித்து, இந்தியத் தயாரிப்புகளை வழங்கப் போகிறது என்பது பற்றி, அசுஸ் இந்தியாவின், நுகர்வோர் கம்ப்யூட்டர் பிரிவின் தலைவர் அர்னால்ட் ஸு, பின்வருமாறு கூறியுள்ளார்.

கடந்த சில ஆண்டுகளாக, குறிப்பாக கோவிட் தொற்றுக்குப் பிறகு லேப்டாப்களின் விற்பனை குறைந்துள்ளது. அதற்கு மாற்றாக மொபைல்களின் விற்பனை அதிகரித்துள்ளது. வேலை நிமித்தம் மற்றும் கிரியேஷன்ஸ்க்காக மட்டும் தான் தற்பொழுது பர்சனல் கம்ப்யூட்டர்கள் தேவைப்படுகிறது. மற்ற அனைத்து பயன்பாட்டுக்குமே மொபைல் சாதனங்களே போதுமானதாக இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் கேமிங்கில் பல ஆண்டுகளாகவே அசுஸ் நிறுவனம் கவனம் செலுத்தி வருகிறது. தற்போது கேமிங் லேப்டாப்பிற்கு டிமாண்ட் அதிகரித்து வருவதால் அதில் கூடுதலாகக் கவனம் செலுத்த இருப்பதாகவும் கூறினார்.

அசுஸ் நிறுவனம் இந்த இரண்டு அம்சத்தையும் ஒரே லேப்டாப்பில் வழங்குமாறு தயாரிப்புகளைத் திட்டமிட்டு வருகிறது. அதிக பெர்ஃபார்மன்ஸ் கொண்ட லேப்டாப்களுடன், கேமிங் அம்சமும் சேர்ந்து வரும் போது, வாடிக்கையாளர்களின் இரண்டு தேவைகளும் பூர்த்தியாகும்.

அசுஸ், இந்தியாவில் ஒரு வளர்ந்து வரும் பிராண்ட் ஆகும். எனவே தேவைப்படுபவர்களுக்குத் தேவையான யூனிட்டுகளை தயாராக விநியோகம் செய்வதில் நிறுவனம் அதிகம் கவனம் செலுத்தி வருவதாகக் கூறியுள்ளது. அதுமட்டும் இல்லாமல் அசுஸ் லேப்டாப் பற்றி எதிர்பார்ப்புகள், தேவைகள், என்று நுகர்வோர்களிடமிருந்து பெறப்படும் அனைத்து கருத்துக்களையும் உள்வாங்கி, அதற்கு ஏற்றார் போல உற்பத்தி செய்ய இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

லேப்டாப்களுக்கு எவ்வளவு தேவை இருந்தாலும் ஹை-அண்ட் லேப்டாப்பை வாங்குபவர்கள் மிகவும் குறைவான எண்ணிக்கையில் தான் இருக்கிறார்கள். ஆனால் அசுஸ் நிறுவனத்தில் பிரீமியம் தயாரிப்புகள் சில மாதங்களுக்கு முன்பு அறிமுகம் செய்யப்பட்டன. ஆப்பிள் நிறுவனத்தின் மேக் கம்ப்யூட்டர் போலவே இவற்றின் குறைந்தபட்ச மதிப்பு ₹1,00,000 ஆகும். ஐரோப்பிய மற்றும் அமெரிக்கா நாடுகளை விட இந்தியாவில்தான் பிரீமியம் லேப்டாப்கள் அதிகமாக விற்பனையாகியுள்ளன.

Also Read : இன்ஸ்டாகிராமில் பிரபலமா நீங்கள்...? உங்களுக்காகவே புதிய அப்டேட் அறிவித்த மெட்டா

எனவே விலை அதிகமாக இருந்தாலும், பலரும் இவ்வளவு விலை கொடுத்து லேப்டாப்களை வாங்குவதற்கு யோசித்தாலும், அதிநவீன டெக்னாலஜி, பிரீமியம் சேவைகள் இரட்டை ஸ்கிரீன், உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுடன் லேப்டாப்கள் அறிமுகம் ஆகும் பொழுது இந்தியர்கள் அதை வாங்குவதில் ஆர்வம் காட்டுகிறார்கள் என்று அசுஸ் தெரிவித்துள்ளது.

அதுமட்டுமல்லாமல் உலக அளவிலேயே பார்சல் கம்ப்யூட்டர்களுக்கான சந்தையில் இந்தியா மூன்றாவது இடத்தில் இருக்கிறது என்ற தகவலையும் கூறியுள்ளனர். இந்த அதிகரித்து வரும் தேவைகள் மற்றும் நுகர்வோர் காட்டும் விருப்பம் ஆகிய அனைத்துமே அசுஸ் நிறுவனத்துக்குச் சாதகமாக இருப்பதாகவும், இந்தியத் தயாரிப்புகள் உற்பத்தி தான் தங்களின் நோக்கம் என்றும் கூறப்பட்டது.
Published by:Janvi
First published:

Tags: Budget laptop, Laptop, Make In India

அடுத்த செய்தி