இந்தியாவுக்காக ஸ்மார்ட்ஃபோன் விலையை ரூ. 3 ஆயிரம் வரை குறைத்த ASUS..!

நேற்றுதான் அசூஸ் ஜென்ஃபோன் மேக்ஸ் M2 ஸ்மார்ட்ஃபோனின் விலையைக் குறைப்பதாக அறிவிக்கப்பட்டது.

இந்தியாவுக்காக ஸ்மார்ட்ஃபோன் விலையை ரூ. 3 ஆயிரம் வரை குறைத்த ASUS..!
அசூஸ் 5Z
  • News18
  • Last Updated: July 24, 2019, 6:07 PM IST
  • Share this:
அசூஸ் 5Z என்னும் அசூஸ் ஜென்ஃபோன் 5Z ஸ்மார்ட்ஃபோனின் விலையை இந்திய வாடிக்கையாளர்களுக்காக மட்டும் அசூஸ் நிறுவனம் குறைத்துள்ளது.

6ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட அசூஸ் 5Z மாடலுக்கும் 8ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட மாடலுக்கும் சுமார் 3 ஆயிரம் ரூபாயில் வரையில் விலையைத் தள்ளுபடி செய்யுள்ளது அசூஸ். இந்தியாவில் அசூஸ் 5Z கடந்த ஆண்டு அறிமுகமானது. அறிமுகமானதிலிருந்து இரண்டாம் முறையாக இந்திய சந்தைக்கான விலையை அசூஸ் குறைத்துள்ளது.

நேற்றுதான் அசூஸ் ஜென்ஃபோன் மேக்ஸ் M2 ஸ்மார்ட்ஃபோனின் விலையைக் குறைப்பதாக அறிவிக்கப்பட்டது. விலை குறைக்கப்பட்டு தற்போது 6ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட அசூஸ் 5Z 24,999 ரூபாய்க்கும் 8ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் மாடல் 28,999 ரூபாய்க்கும் விற்பனைக்கு உள்ளது.


குறைக்கப்பட்ட விலை நிலவரம் ஃப்ளிப்கார்ட் தளத்தில் அப்டேட் செய்யப்பட்டுள்ளது. ஃப்ளிப்கார்ட் தளத்தில் அசூஸ் ஸ்மார்ட்ஃபோன்களுக்கு வட்டியில்லா தவணை மற்றும் 17,900 ரூபாய் வரையிலான எக்ஸ்சேஞ்ச் ஆஃபரும் வழங்கப்படுகிறது. கூடுதலாக, ஆக்ஸிஸ் வங்கியின் க்ரெடிட் அல்லது டெபிட் கார்டு பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கும் 5 சதவிகித கேஷ்-பேக் ஆஃபரும் ஐசிஐசிஐ கார்டு பயன்படுத்தினாலும் 5 சதவிகித கேஷ் பேக் ஆஃபரும் வழங்கப்படுகிறது.

மேலும் பார்க்க: 199 ரூபாய்க்கு நெட்ஃப்ளிக்ஸ்... இந்திய ரசிகர்களைக் கவர சிறப்பு ஆஃபர்..!
First published: July 24, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்