ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

தீபாவளிக்கு மறுநாள் நிகழும் சூரியகிரகணம்... பிர்லா கோளரங்கம் முக்கிய எச்சரிக்கை

தீபாவளிக்கு மறுநாள் நிகழும் சூரியகிரகணம்... பிர்லா கோளரங்கம் முக்கிய எச்சரிக்கை

சூரிய கிரகணம்

சூரிய கிரகணம்

அடிவானத்தின் தெளிவான காட்சியைப் பெற விரும்புவோர் சோலார் கண்ணாடிகள் அல்லது வெல்டர் கண்ணாடிகள் (நிழல் எண் 14) மூலம் நிகழ்வைப் பார்க்கலாம்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Chennai, India

  வானியல் ஆர்வலர்கள் வரும் அக்டோபர் 25 ஆம் தேதி மாலை நகரத்தில் ஒரு பகுதி சூரிய கிரகணத்தைக் காணலாம். இந்த நிகழ்வு தமிழகத்தில் 30 நிமிடங்கள் மட்டுமே நீடிக்கும் மற்றும் அடிவானத்திற்கு அருகில் தெரியும் என்று பிர்லா கோளரங்க நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

  சூரிய கிரகணம் :

  சூரியனை பூமி சுற்றி வரும் பாதையில் இரண்டிற்கும் இடையில் நிலா குறுக்கிடும் போது சூரிய கிரகணம் ஏற்படும். பூமியின் சுற்றுவட்ட பாதையில் இருந்து 5 டிகிரி சாய்ந்து சுற்றும் நிலவு ஆண்டிக்கு ஒரு முறை சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் வரும். அப்படியான நிகழ்வு தான் வரும் 25 ஆம் தேதி நடைபெறுகிறது.

  முழுமையாக நிலவு குறுக்கிடாமல், பகுதி சூரியனை மட்டும் மறைப்பதால் இது பகுதி சூரிய கிரகணம் என்று அழைக்கப்படுகிறது. உலகளாவிய நேரப்படி , பகுதி கிரகணம்  பிற்பகல் 2.29 மணிக்கு தொடங்கி மாலை 6.32 மணிக்கு முடிவடையும். தென்மேற்கு ரஷ்யா மற்றும் கஜகஸ்தான் பகுதிகளில் 80 % வரை கிரகணம் தெரியும்.

  திடீரென்று அதிகப்படியான அயோடின் மாத்திரைகளை வாங்கிக்குவிக்கும் உக்ரைன் மக்கள்... காரணம் என்ன?

  மத்திய ரஷ்யா, ஐரோப்பாவின் பெரும்பாலான பகுதிகள், வட ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் ஆசியாவின் சில பகுதிகளில் குறைந்த அளவில் கிரகணம் தெரியும்.

  இந்த நிகழ்வு மும்பை மற்றும் ராஜஸ்தான் போன்ற நாட்டின் மேற்குப் பகுதிகளில் சிறப்பாகத் தெரியும். சென்னையில், சூரியன் மேற்கு அடிவானத்திலிருந்து ஆறு டிகிரி உயரத்தில் அடிவானத்திற்கு அருகில் இருக்கும் போது, ​​சந்திரன் சூரியனின் புலப்படும் வட்டின் விளிம்பைத் தொடும். அதிகபட்சமாக சூரியனின் வட்டின் 8% மட்டுமே மறைவது தெரியும். எனவே, நிகழ்வைப் பார்க்க மேற்கு அடிவானத்தின் மறையும் இடத்தை கவனிக்க வேண்டும் ”என்று பிர்லா கோளரங்கத்தின் செயல் இயக்குனர் எஸ் சௌந்தரராஜ பெருமாள் கூறினார்.

  தமிழகத்தில் மாலை 5 :14 முதல் 5: 44 வரை தெரியும். அதன் பின்னர் சூரியன் மறைந்துவிடும். மேற்கு அடிவானத்தின் தெளிவான காட்சியைப் பெற விரும்புவோர் சோலார் கண்ணாடிகள் அல்லது வெல்டர் கண்ணாடிகள் (நிழல் எண் 14) மூலம் நிகழ்வைப் பார்க்கலாம். ஆனால் வெறும் கண்ணால் பார்க்கக்கூடாது. அதனால் பார்வை இழப்பு ஏற்ப வாய்ப்புண்டு.

  அஜந்தா குகைகளில் இருந்து நட்சத்திர வானத்தை ரசிக்கும் வசதி..!

  தமிழ்நாட்டில் காணக்கூடிய முந்தைய பகுதி சூரிய கிரகணம் ஜூன் 21, 2020 அன்று இருந்தது, மேலும் மாநிலத்தில் இருந்து காணக்கூடிய அடுத்த நிகழ்வு ஆகஸ்ட் 2, 2027 அன்று நிகழும்.

  சந்திர கிரகணம்

  சந்திரனுக்கும் சூரியனுக்கும் இடையில் பூமி வந்து நிழலாடும் சந்திர கிரகணம் வரும் நவம்பர் 8 ஆம் தேதி உலக நேரப்படி பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 6.19 மணி வரை நிகழும் . சென்னையில் சந்திரன் மாலை 5.38 மணிக்கு உதயமாகிறது.

  சந்திரன் உதயமான சில நிமிடங்களில் பகுதி கிரகணம் முடிவடையும். மிகவும் குறைந்த நேரம் நாடாகும் இந்த கிரகணத்தை வெறும் கண்ணால் பார்க்கலாம். சென்னையில் அடுத்த பகுதி சந்திர கிரகணம் அக்டோபர் 28, 2023 அன்று தெரியும்.

  Published by:Ilakkiya GP
  First published:

  Tags: Chennai, Eclipse, Solar eclipse