முகப்பு /செய்தி /தொழில்நுட்பம் / வெடித்து சிதறிய நிலா.. மொத்தம் 92 நிலவுகள்.. ஆச்சரியப்படுத்தும் வியாழன் கோள்..!

வெடித்து சிதறிய நிலா.. மொத்தம் 92 நிலவுகள்.. ஆச்சரியப்படுத்தும் வியாழன் கோள்..!

வியாழனுக்கு மொத்தம் 92 நிலாக்கள்

வியாழனுக்கு மொத்தம் 92 நிலாக்கள்

ஒரு காலத்தில் பெரிய நிலவுகளாக  இருந்தது ஒன்றோடு ஒன்று மோதி, விண்கற்களோடு மோதி இன்று பல சிறிய நிலவுகளாக வியாழனையும் சனியையும் சுற்றி வருவதாக விளக்கியுள்ளார்

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai |

சமீபத்தில் வானியலாளர்கள் வியாழனைச் சுற்றி 12 புதிய நிலவுகளைக் கண்டறிந்தனர். இதன் மூலம் சூரிய மண்டலத்தின் பெரிய கோளான  வியாழனின் மொத்த நிலவுகளின் எண்ணிக்கை 92-ஐ எட்டியது. இதன் மூலம், நமது சூரிய குடும்பத்தில் அதிக எண்ணிக்கையிலான நிலவுகளைக் கொண்ட கிரகமாக வியாழன் ஆனது. இதுவரை 83 நிலவுகளை கொண்ட கிரகமாக இருந்த சனி, தற்போது இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் ஹவாய் மற்றும் சிலியில் உள்ள தொலைநோக்கிகளைப் பயன்படுத்தி நிலவுகள் கண்டுபிடிக்கப்பட்டன. மேலும் வானியலாளர்கள் அதை தொடர்ந்து கவனித்து அதன் சுற்றுபாதை வியாழனை சுற்றி இருப்பதை உறுதிப்படுத்தினர். அதன்பின்னர் சர்வதேச வானியல் ஒன்றியத்தின் மைனர் பிளானட் மையத்தால் பராமரிக்கப்படும் பட்டியலில் வியாழனின் நிலவுகள் சேர்க்கப்பட்டதாக கார்னகி இன்ஸ்டிடியூஷனின் ஸ்காட் ஷெப்பர்ட் கூறினார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு சனியைச் சுற்றி பல நிலவுகளைக் கண்டுபிடித்த ஷெப்பர்ட், இதுவரை வியாழனின் 70 நிலவுகளின் கண்டுபிடிப்புகளில் பங்கேற்றார். வியாழன் மற்றும் சனியை சுற்றி மேலும் பல சிறிய நிலவுகள் இருப்பதாக ஷெப்பர்ட் கூறுகிறார்.  ஒரு காலத்தில் பெரிய நிலவுகளாக  இருந்தது ஒன்றோடு ஒன்றும், விண்கற்களோடும் மோதி வெடித்து சிதறி இன்று பல சிறிய நிலவுகளாக வியாழனையும் சனியையும் சுற்றி வருவதாக விளக்கியுள்ளார்

அதே விதி நெப்டியூன் மற்றும் யுரேனஸுக்கும் பொருந்தும். இருப்பினும், அவை மிகவும் தொலைவில் உள்ளதான் அதன் நிலவுகளைக் கண்டறிவது கடினமாக இருக்கிறது என்றும் கூறியுள்ளார்.யுரேனஸில் இதுவரை 27 உறுதிப்படுத்தப்பட்ட நிலவுகள் உள்ளன. நெப்டியூனுக்கு 14 நிலவுகள் உள்ளன. மேலும் சூரிய குடும்பத்தில்,  செவ்வாய்க்கு இரண்டு மற்றும் பூமிக்கு ஒரு நிலவு உள்ளது. வீனஸ் மற்றும் மெர்குரிக்கு செயற்கைக்கோள்கள் இல்லை.

புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட நிலவுகள் ஒவ்வொன்றும் 1 கிலோமீட்டர் முதல் 3 கிலோமீட்டர் வரை விட்டம் கொண்டவையாக இருக்கும். வியாழனின் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட நிலவுகளுக்கு இன்னும் பெயரிடப்படவில்லை. மேலும் அவற்றின் தோற்றத்தை துல்லியமாகக் கண்டறியவும் அவற்றை நெருக்கமாகப் படம்பிடிக்கவும் புதிய செயற்கைகோள்களை அனுப்பத் திட்டமிடுவதாக ஆராய்ச்சியாளர்கள் குழு தெரிவித்துள்ளனர்.

மேலும் ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சியால் வியாழன் கிரகத்தை ஆராயவும், அதன் மிகப்பெரிய மற்றும் பனிக்கட்டி நிலவுகள் சிலவற்றை ஆய்வு செய்யவும் ஏப்ரலில் ஒரு விண்கலம் அனுப்பத் திட்டமிட்டுள்ளது. அதே போல வியாழனின் ‘யூரோப்பா’ நிலவை ஆராய்வதற்காக யூரோப்பா கிளிப்பர் என்ற விண்கலத்தை அடுத்த ஆண்டு நாசா அனுப்பவுள்ளது.

First published:

Tags: Astronomy, Science