ஒரு நட்சத்திரம் வெடித்தால் என்ன நடக்கும்? நமது சூரியன் வெடித்து மறைந்தால் என்ன நடக்கும்?
நட்சத்திர வெடிப்புகள், சூப்பர்நோவாக்கள் மற்றும் அண்ட வெடிப்புகள் ஆகியவற்றைப் படிக்க ஆர்வமுள்ள வானியலாளர்கள் சிந்திக்கும் சில கேள்விகளில் சில இவை. இப்போது வானியலாளர்கள் குழு ஓன்று கால ஓட்டத்தில் ஒரு நட்சத்திரத்தின் மாற்றத்தை பகுப்பாய்வு செய்து அதன் அழிவின் காலவரிசையை தீர்மானிக்க முயன்றுள்ளது.
பூமியிலிருந்து 160,000 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள பெரிய மாகெல்லானிக் மேகக் கூட்டத்தில் அமைந்த ஒரு வெள்ளை குள்ள நட்சத்திரம் வெடித்தபோது உருவான சூப்பர்நோவா SNR 0519 இன் எச்சங்களை வானியலாளர்கள் ஆய்வு செய்தனர்.
தெர்மோநியூக்ளியர் வெடிப்பு என்பது ஒரு துணை நட்சத்திரத்திலிருந்து பொருளை இழுப்பதன் மூலமோ அல்லது மற்றொரு வெள்ளைக் குள்ள நட்சத்திரத்துடன் ஒன்றிணைப்பதன் மூலமோ, தன்னைத்தானே அழித்துக்கொள்வதன் மூலமோ நிகழ்கிறது.
இத்தகைய வெடிப்புகளின் பகுப்பாய்வு, தெர்மோநியூக்ளியர் வெடிப்புகளை நன்கு புரிந்துகொள்வதற்கும், பில்லியன் கணக்கான ஒளியாண்டுகளில் உள்ள விண்மீன் திரள்களுக்கான தூரத்தை அளவிடுவதற்கும் முக்கியமானதாக்கத் திகழ்கிறது.
SNR 0519 இல் உள்ள நட்சத்திரம் எவ்வளவு காலத்திற்கு முன்பு வெடித்தது என்பதைப் புரிந்து கொள்ளவும், சூப்பர்நோவா ஏற்பட்ட சூழலைப் பற்றி அறியவும், தொலைநோக்கிகள் பயன்படுத்தப்பட்டன.
வானியலாளர்கள் நாசாவின் சந்திரா எக்ஸ்ரே ஆய்வகத்தில் இருந்து எக்ஸ்ரே தரவு மற்றும் நாசாவின் ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கியில் இருந்து ஆப்டிகல் தரவுகளைப் பயன்படுத்தி ஓய்வு பெற்ற ஸ்பிட்சர் விண்வெளி தொலைநோக்கியின் அவதானிப்புகளுடன் அவற்றை இணைத்தனர். கலப்பு படம் மேம்படுத்தப்பட்ட தரத்தில் இருப்பதால் அதிக நுண்ணிய தரவுகளை தருகிறது.
இனி பார்வையற்றோர் கூட விண்வெளி அதிசியங்களின் புகைப்படத்தை உணர முடியும் - நாசா புதிய முயற்சி
2010, 2011 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் எடுத்த படங்களை குழு ஒப்பிட்டு, வெடிப்பிலிருந்து வெளிவந்த பொருட்களின் வேகம் மணிக்கு சுமார் 9 மில்லியன் கிலோமீட்டர் வரை இருக்கும் என்று கணக்கிட்டனர். "பொருட்களின் வேகம் அந்த மதிப்பிடப்பட்ட வேகத்தை நோக்கி இருந்தால், வெடிப்பின் ஒளி சுமார் 670 ஆண்டுகளுக்கு முன்பு பூமியை அடைந்திருக்கும்," என்று நாசா ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இருப்பினும், வானியலாளர்கள், பொருள்களின் இயக்க வேகம் குறைந்துவிட்டதாகவும், வெடிப்பு 670 ஆண்டுகளுக்கு முன்பே நிகழ்ந்ததாகவும் நம்புகின்றனர். மெதுவாக நகரும் பொருள் அமைந்துள்ள எச்சத்தின் எக்ஸ்-கதிர்களில் பிரகாசமான பகுதிகளை வானியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.மேலும் வேகமாக நகரும் பொருளுடன் எந்த எக்ஸ்ரே உமிழ்வும் தொடர்புபடுத்தப்படவில்லை என்று நாசா கூறியது.
இவற்றை அடிப்படையாக வைத்து நட்சத்திரத்தின் அழிவின் நேரத்தை கணிக்கும் துல்லிய தரவுகளை ஆராயும் பணியில் விஞ்ஞானிகள் தீவிரமான ஈடுபட்டு வருகின்றனர்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.