நியூட்ரான் நட்சத்திரங்கள் மற்றும் கருந்துளைகள் மோதல் – ஈர்ப்பலைகள் மூலம் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு!

காட்சி படம்

குளத்தில் கல்லெறிந்தால் உருவாகும் அலைகளைப் போல அண்டத்தில் ஈர்ப்பலைகள் உருவாகும் என்று ஐன்ஸ்டீன் குறிப்பிட்டுள்ளார்.

  • Share this:
பல மில்லியன் ஒளி ஆண்டுகள் தூரத்தில் அடர் நட்சத்திரங்களும் கருந்துளைகளும் மோதிக்கொண்டதால் ஏற்பட்ட பேரதிர்வை, ஈர்ப்பு அலைகள் மூலம் வானியல் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். சூரியனை விட 1.9 மடங்கு பெரிய அளவிலிருந்த ஒரு நியூட்ரான் நட்சத்திரம், சூரியனை விட ஒன்பது மடங்கு கனமான ஒரு கருந்துளையோடு ஒன்றிணைந்தது.

ஜனவரி 5, 2020 அன்று, அமெரிக்காவில் உள்ள லேசர் இன்டர்ஃபெரோமீட்டர் ஈர்ப்பு-அலை ஆய்வகம் (LIGO) ஒரு ஈர்ப்பலையைக் கண்டுபிடித்தது. விண்வெளியில் புவியீர்ப்பு அதிக அளவில் இருக்கும் இடத்தில், ஒளி கூட தப்பிக்க முடியாத நிலையில், ஒரு நியூட்ரான் நட்சத்திரம், கருந்துளையோடு மோதி ஒன்றிணைந்தது. அப்போது, விண்வெளியில் சிற்றலைகள் உருவானது.

அது தான் ஒரு கருந்துளையும், ஒரு நியூட்ரான் நட்சத்திரமும் ஒன்றிணைவதால் ஏற்பட்ட முதல் ஈர்ப்பலை. குளத்தில் கல்லெறிந்தால் உருவாகும் அலைகளைப் போல அண்டத்தில் ஈர்ப்பலைகள் உருவாகும் என்று ஐன்ஸ்டீன் குறிப்பிட்டுள்ளார். 2016ம் ஆண்டு முதல், அவரது கணிப்பை உறுதிபடுத்தும்படி உருவான முதல் ஈர்ப்பலையை கண்டுபிடித்தவுடன், இரண்டு கருந்துளைகள் ஒன்றிணையும் போது அல்லது இரண்டு நியூட்ரான் நட்சத்திரங்க ஒன்றோடு ஒன்று மோதிக்கொள்ளும் போது ஏற்பட்ட அனைத்து ஈர்ப்பலைகளையும் விஞ்ஞானிகளால் கண்டறிய முடிந்தது.

இந்தக் கண்டுபிடிப்பை, கூடுதலான சோதனை மற்றும் கடுமையான விஞ்ஞான ஆய்வுக்கு உட்படுத்த வேண்டி இருந்தாலும், வானியற்பியல் ஆய்வாளர்களுக்கு புத்துணர்ச்சியூட்டுவதாகவே இருக்கிறது. அவர்களின் ஆர்வத்துக்கும் ஆய்வுக்கும் கிடைத்த மற்றொரு வாய்ப்பாக, மேலும் ஒரு நிகழ்வை ஆய்வகம் கண்டறிந்துள்ளது. கடந்த ஜனவரி 15 அன்று மற்றொரு நியூட்ரான் நட்சத்திரமும், கருந்துளையும் மோதி ஒன்றிணைந்ததன் காரணமாக ஏற்பட்ட ஈர்ப்பலையை ஆய்வகம் கண்டுபிடித்துள்ளது.

Also Read : டெல்டா வகை வைரஸால் யாருக்கெல்லாம் பாதிப்பு..? பாதுகாப்பாக இருக்க எச்சரிக்கை..!

விஞ்ஞானிகள் அந்த சிக்னல்களை கடுமையான தர சோதனைகளுக்கு உட்படுத்தி, அவை உண்மை தான் என்பதை உறுதி செய்தனர். அண்டத்தின் முதல் நிகழ்வில் உருவான முதல் அலையில், நியூட்ரான் நட்சத்திரன் அளவு சூரியனை விட 1.9 பெரிதாக இருந்ததையும், சூரியனை விட 9 மடங்கு கனமாக இருந்த கருந்துளையோடு அது ஒன்றிணைந்ததையும் கண்டுபிடித்துள்ளனர்.

அமெரிக்காவின் நார்த்வெஸ்டர்ன் பல்கலைக்கழகத்தில், நாசா ஐன்ஸ்டைன் போஸ்ட் டாக்டரல் ஃபெல்லோ மற்றும் வானியலாளர்களில் ஒருவருமான மாயா ஃபிஷ்பாக், “இப்போது கருந்துளைகள் நியூட்ரான் நட்சத்திரங்களோடு ஒன்றிணையும் நிகழ்வுகளைக் நாம் பார்த்துள்ளோம். எனவே, அவை அண்டத்தில் இருக்கின்றன என்பதை உறுதி செய்கிறோம்” என்று செய்தி வெளியீட்டில் தெரிவித்தார். இந்த கண்டுபிடிப்புகள் அனைத்தும், ஜூன் 29 தேதியிட்ட, அஸ்ட்ரோஃபிசிக்கல் ஜர்னல் லெட்டர்களில் வெளியிடப்பட்டன.

Also Read : இனி வேக்ஸின் போட்டிருந்தால் தான் சம்பள உயர்வு, ஊக்கத்தொகை பெற முடியும்: ஏன் தெரியுமா?

ஆராய்ச்சியாளர்களின் நீண்ட பட்டியலில், ரோசெஸ்டர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் முனைவர் ஆய்வு மேற்கொள்ளும் ஹைதராபாத்தைச் சேர்ந்த அஞ்சலி யெலிகரின் பெயரும் உள்ளது. 2016ம் ஆண்டில், முதல்முறையாக ஈர்ப்பலைகள் கண்டுபிடிக்கப்பட்ட போது, யெலிகர் இளங்கலை மாணவராக இருந்தார். ரோசெஸ்டர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் “இதைப் போன்ற ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பின் ஒரு பகுதியாக இருப்பது என்பது கனவு நிஜமான தருணம் போல இருக்கிறது” என்று உற்சாகத்துடன் தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Tamilmalar Natarajan
First published: