Home /News /technology /

உங்கள் மொபைல் எண்ணை ஜியோவுக்கு மாற்ற விரும்புகிறீர்களா? இதைத் தெரிந்துகொள்ளுங்கள்

உங்கள் மொபைல் எண்ணை ஜியோவுக்கு மாற்ற விரும்புகிறீர்களா? இதைத் தெரிந்துகொள்ளுங்கள்

ஜியோ

ஜியோ

உங்கள் மொபைல் எண்ணை ஜியோ எண்ணாக மாற்ற விரும்புகிறார்களா? கீழ்கண்ட வழிமுறைகளைத் தெரிந்துகொள்ளுங்கள்.

    ரிலையனஸ் நிறுவனத்தால் தொடங்கப்பட்ட ஜியோ தொலைதொடர்பு நிறுவனம் குறுகிய ஆண்டில் இமாலய வளர்ச்சி பெற்றுள்ளது. ஜியோ நிறுவனத்தில் ஆரம்ப காலத்தில் வழங்கப்பட்ட சலுகைகளும், நெட்வொர்க்கின் தரமும் வாடிக்கையாளர்கள் அந்த சேவையை நோக்கி செல்வதற்கான முக்கிய காரணமாக இருந்துவருகிறது. தற்போதும், பலரும் ஜியோவுக்கு மாறும் எண்ணத்துடன் உள்ளனர்.

    இருந்தும், தங்களுடைய நீண்ட கால எண்ணை மாற்ற விருப்பம் இல்லாமல் பிற நெட்வொர்கில் தொடர்ந்து வருகின்றனர். தங்களுடைய ஃபேவரைட் எண்ணை இழக்காமல் ஜியோ நிறுவனத்துக்கு மாற வேண்டும் என்று விரும்புகிறீர்களா? உங்களுக்கான வழி எளிதுதான். தெரிந்துகொள்ளுங்கள்...

    என் மொபைல் எண்ணை ஜியோ நிறுவன எண்ணாக மாற்ற நான் என்ன செய்யவேண்டும்?

    • மொபைல் எண்ணை ஜியோவுக்கு மாற்ற PORT என்று டைப் செய்து இடைவெளிவிட்டு 10 இலக்க மொபைல் எண்ணை டைப் செய்து 1900 என்ற எண்ணுக்கு எந்த நம்பரை மாற்ற வேண்டுமோ அந்த எண்ணிலிருந்து மெசேஜ் அனுப்ப வேண்டும்.

    • உடனே உங்களுக்கு யூபிசி கோட்டுடன் கூடிய எஸ்.எம்.எஸ் வரும். அதில் காலாவதி தேதியும் குறிப்பிடப்பட்டிருக்கும்.

    • உடனே நீங்கள் யூபிசி(Unique porting code) கோடுடன்அருகிலுள்ள ஜியோ கடைக்கு செல்லவும்.

    • உங்களுடன் அசல் ஆதார் கார்ட் அல்லது புகைப்படம் மற்றும் முகவரியுடன் கூடிய வேறு ஏதேனும் அடையாள அட்டையை கையில் எடுத்துச் செல்லவேண்டும்.

      பின்குறிப்பு:

    • உங்களுடைய தொலைதொடர்பு நிறுவனத்தில் ஏதேனும் கட்டண நிலுவை இருந்தால் அதனை கட்டி சரி செய்திருக்க வேண்டும்.

    • அரசு வழிமுறையின்படி, ஒரு நிறுவனத்திலிருந்து மற்றொரு நிறுவனத்துக்கு மாற்றும்போது ஒரே மாநில எல்லையாக இருந்தால் 3 நாள்களில் புது நிறுவனத்துக்கு உங்கள் எண் மாற்றப்படும். அதேநேரத்தில் மாநில எல்லை மாறியிருந்தால் 5 நாள்கள் தேவைப்படும். இடைப்பட்ட நாள்களில் உங்கள் எண்ணை பயன்படுத்துவதில் எந்த சிக்கலும் இருக்காது.

    • ஜம்மு & காஷ்மீர், அசாம் அல்லது வடகிழக்கு மாநில எல்லைப் பகுதிகளிலிருந்து நெட்வொர்க் மாற்ற கோரிக்கைகள் வந்தால் அதற்கு 15 நாள்கள் தேவைப்படும். இடைப்பட்ட நாள்களில் உங்கள் எண்ணைப் பயன்படுத்துவதில் சிக்கல் இருக்காது.

    Published by:Karthick S
    First published:

    Tags: Jio

    அடுத்த செய்தி