கொரோனா தொற்று பரவியதை தொடர்ந்து ஆன்லைன் மூலம் பணம் செலுத்தும் பழக்கம் மக்கள் மத்தியில் அதிகரித்து உள்ளது. GPay, Paytm, PhonePe போன்ற பல யுனிஃபைட் பேமென்ட் இன்டர்ஃபேஸ் (UPI) ஆப்ஸ்களை மக்கள் ஆன்லைன் பரிவர்த்தனைகளை செய்ய பயன்படுத்தி வருகிறார்கள்.
இருப்பினும் இந்த ஆப்ஸ் மூலம் பணம் செலுத்தும் போது UPI பேமென்ட் பாதுகாப்பு குறிப்புகள் மற்றும் டிப்ஸ்களை ஒருவர் அறிந்திருக்க வேண்டும். இதன் மூலம் பண இழப்பில் இருந்து ஒருவர் தன்னை காப்பாற்றி கொள்ள முடியும். பேமென்ட் ஆப்ஸ் பயன்படுத்தும் ஒருவர் விழிப்புடன் இருக்க வேண்டும் மற்றும் ஆன்லைன் அல்லது இணைய மோசடிகளில் இருந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும். தவறான லிங்க் ஒன்றை கிளிக் செய்வதால் கூட உங்களது பணத்தை இழக்க நேரிடும்.
ஆன்லைனில் பணம் செலுத்தும் செயல்முறை மிகவும் எளிமையானது. இதற்கு தேவை ஆன்லைனில் பணம் செலுத்தும் ஆப்ஸ்களில் ஏதேனும் ஒன்றை டவுன்லோட் செய்யப்பட்ட ஸ்மார்ட் போன் மற்றும் உங்கள் மொபைல் நம்பருடன் இணைக்கப்பட்ட பேங்க் அக்கவுண்ட் மட்டுமே. Google Pay, PhonePe, Paytm போன்ற ஆப்ஸ்களில் ஏதேனும் ஒன்றை நீங்கள் பயன்படுத்தினால், மோசடி மற்றும் பண இழப்பைத் தவிர்க்க சில விஷயங்களை கட்டாயம் கவனிக்க வேண்டும். UPI-ல் பணம் செலுத்தும் போது நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டிய சில பாதுகாப்பு டிப்ஸ்களை இங்கே பார்க்கலாம்.
UPI பேமென்ட்ஸ் : பாதுகாப்பு டிப்ஸ்கள் மற்றும் ட்ரிக்ஸ்களை தெரிந்து கொள்ளுங்கள்...
ஸ்க்ரீன் லாக்:
ஸ்ட்ராங் ஸ்கிரீன் லாக், பாஸ்வேர்ட் அல்லது பின் நம்பர் உங்கள் மொபைலுக்கு மட்டுமல்ல, உங்கள் போனில் உள்ள அனைத்து பேமெண்ட் ஆப்ஸ் அல்லது நிதி பரிவர்த்தனை ஆப்ஸ்களுக்கும் வைத்திருப்பது மிகவும் முக்கியம். இது உங்கள் தொலைபேசி தவறான கைகளில் கிடைத்தால் நிதி இழப்பு ஆபத்திலிருந்து காப்பாற்றுவது மட்டுமல்லாமல் தனிப்பட்ட மற்றும் முக்கியமான விவரங்கள் லீக்காவதை தவிர்க்க உதவுகிறது.
Also Read : ஒரு போன் கால் மூலம் WhatsApp அக்கவுண்ட் திருடப்படுவது எப்படி.? இதிலிருந்து தப்பிக்கும் வழிகள்!
உங்கள் PIN-ஐ ஷேர் செய்யாதீர்:
உங்கள் PIN-ஐ யாருடனும் ஷேர் செய்யாதீர்கள். உங்கள் PIN-ஐ ஷேர் செய்வதால் உங்கள் ஃபோனை எவரும் அணுகி, தங்கள் அக்கவுண்டிற்கு பணத்தை மாற்றி கொள்ள முடியும் என்பதால், மோசடிகளுக்கு நீங்கள் ஆளாக நேரிடும். உங்கள் PIN வேறு யாருக்காவது வெளிப்படுத்தியதாக நீங்கள் உணர்ந்தால், உடனடியாக இப்போதே உங்கள் PIN நம்பரை மாற்றி விடுங்கள்.
சரிபார்க்கப்படாத லிங்க்ஸ்களை கிளிக் செய்யாதீர்கள்;
சரிபார்க்கப்படாத லிங்க்ஸ்களை கொண்ட பல போலி செய்திகள் உங்கள் இன்பாக்ஸில் தொடர்ந்து வந்தால் அத்தகைய லிங்க்ஸ்களை கிளிக் செய்வதை நீங்கள் தவிர்க்க வேண்டும். போலி அழைப்புகளை எடுப்பதையும் தவிர்க்க வேண்டும். ஏனென்றால் மோசடி கால் செய்யும் நபர்கள் உங்கள் வங்கி அல்லது வேறு சில நிறுவனங்களில் இருந்து அழைப்பது போல் நடித்து, பின், OTP போன்ற உங்களின் விவரங்களை கேட்கலாம். ஆனால் வங்கிகள் PIN, OTP அல்லது வேறு எந்த தனிப்பட்ட விவரங்களையும் வாடிகையாளர்களிடம் ஒருபோதும் கேட்காது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.
Also Read : யூசர்களின் டேட்டாவை விற்பனை செய்த டிவிட்டருக்கு $150 மில்லியன் அபராதம்.!
UPI ஆப்ஸை தொடர்ந்து அப்டேட் செய்யுங்கள்:
ஒவ்வொரு ஆப்ஸ்-க்கும் அவ்வப்போது அப்டேட் தேவைப்படுகிறது மற்றும் ஒவ்வொரு அப்டேட்டும் சிறந்த அம்சங்களையும் நன்மைகளையும் தருகிறது. எனவே UPI பேமெண்ட் ஆப்ஸை எப்போதும் லேட்டஸ்ட் வெர்ஷனுக்கு அப்டேட் செய்து கொண்டே இருக்க வேண்டும்.
Also Read : வாட்ஸ் அப் யூஸர்களே உஷார்... மகள் போல் மெசெஜ் அனுப்பி ரூ.15 லட்சம் பணம் பறிப்பு
பல பேமென்ட் ஆப்ஸ்களை பயன்படுத்துவதை தவிர்க்கவும்:
உங்கள் மொபைலில் பல பேமென்ட் ஆப்ஸ்களை வைத்திருப்பதைத் தவிர்க்க வேண்டும். அதே போல PlayStore அல்லது App Store-லிருந்து நம்பகமான மற்றும் சரிபார்க்கப்பட்ட பேமென்ட் ஆப்ஸ்களை மட்டுமே உங்கள் மொபைலில் இன்ஸ்டால் செய்ய வேண்டும்.
Tags: Google pay, Payment App, Paytm, Phonepe, Technology