Home /News /technology /

எலக்ட்ரிக் வாகனங்கள் எவ்வளவு நம்பகத்தன்மை வாய்ந்தவை - ஆய்வு முடிவுகள்!

எலக்ட்ரிக் வாகனங்கள் எவ்வளவு நம்பகத்தன்மை வாய்ந்தவை - ஆய்வு முடிவுகள்!

எலக்ட்ரிக் வாகனங்கள்

எலக்ட்ரிக் வாகனங்கள்

எலக்ட்ரிக் வாகனங்களை எவ்வளவு நம்பலாம் என்பது பிரச்சனையாக இருக்காது. ஆனால், கூடுதலான அம்சங்கள் மற்றும் புதிய தொழில்நுட்ப அம்சங்களை சேர்க்கும் போது, சிக்கல்கள் ஏற்படத் துவங்கும் என்று ஆய்வு குறிப்பிட்டுள்ளது.

    எரிபொருள் விலையேற்றம், தட்டுப்பாடு மற்றும் சுற்றுசூழல் பாதுகாப்பு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, வெளிநாடுகளில் பயன்படுத்தப்பட்டு வரும் எலக்ட்ரிக் வாகனங்கள் உற்பத்தி இந்தியாவில் தொடங்கிவிட்டது. மோட்டார் சைக்கிள், பைக் மற்றும் கார் உட்பட பல முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்கள் EV உற்பத்தியில் ஈடுபட்டுள்ளன.

    சில பிராண்டுகளின் முன்பதிவும் ஏற்கனவே தொடங்கியுள்ளது. ஆனால், எலக்ட்ரிக் வாகனங்கள் இந்திய சாலைகளுக்கு, பயன்பாட்டுக்கு ஏற்றதா, என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கிறது. இந்தியாவில் எலக்ட்ரிக் எவ்வளவு நம்பகத்தன்மை வாய்ந்தவை என்பது பற்றிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வின் விவரங்கள் பற்றி இங்கே பார்க்கலாம்.

    எலக்ட்ரிக் கார்கள் அவ்வளவு நம்பகத்தன்மையானது அல்ல என்று கன்ஸ்யூமர் அறிக்கைகள் தெரிவித்துள்ளன. இதற்கு முக்கிய காரணமாக, எலக்ட்ரிக் கார்கள் மிகவும் காம்ப்ளக்ஸ் ஆனவை எனவே அவற்றின் நம்பகத்தன்மை பிரச்சனைக்குரியது என்று அறிக்கை தெரிவிக்கிறது. பவர் டிரைன் டெக்னாலஜி தவிர்த்து, எலக்ட்ரிக் வாகனங்களில் தொடர்ச்சியாக அதிநவீன தொழில்நுட்ப அம்சங்கள் சேர்க்கபட்டு வருகிறது. எனவே, வழக்கமாக கார்களில் இருக்கும் பொதுவான தொழில்நுட்ப அம்சங்களுடன், கூடுதலாக காம்ப்ளக்ஸ் இன்ஃபோடைன்மென்ட் உடன் வருகிறது.

    ALSO READ |  ட்விட்டர் சி.இ.ஓவாக நியமிக்கப்பட்டுள்ள பராக் அகர்வாலுக்கு எவ்வளவு ஊதியம் தெரியுமா?

    குறிப்பாக, சொகுசு கார்கள் என்றாலே தனிப்பட்ட வசதிகள் மற்றும் சிறப்பு அம்சங்களைக் கொண்டிருக்கும். இதே அம்சங்களை எலக்ட்ரிக் கார்களில் சேர்க்கும் போது சிக்கல்கள் ஏற்படுகிறது. ஆனால், சாதாரண மற்றும் விலை குறைவான எலக்ட்ரிக் வாகனங்களில் எளிமையான தொழில்நுட்ப அம்சங்களே பயன்பாட்டில் உள்ளன. உதாரணமாக, நிசான் Leaf EV நவீன மற்றும் மேம்பட்ட எலக்ட்ரிக் கார்களை விட சிறப்பான பெர்ஃபார்மன்ஸ் வழங்குகிறது. மேலும், மேட்-இன்-சீனா லேபில் கொண்ட, சீன உற்பத்தி டெஸ்லா கார்கள் அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்படுவதை விட மேம்பட்டதாக உள்ளன என்றும் ஆய்வு தெரிவித்துள்ளது.

    ஆய்வின் அறிக்கை படி, உலகம் முழுவதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் டெஸ்லா எலக்ட்ரிக் கார்கள், பிராண்டு நம்பகத்தன்மையில் கடைசிக்கு முந்தைய இடத்தைப் பிடித்துள்ளது. டெஸ்லா மாடல் Y அதிக நம்பகத்தன்மை வாய்ந்தது என்று கூறப்பட்டது. அதே போல, டெஸ்லா மாடல் 3 இல் நிறைய புகார் எழுந்துள்ளது.

    ALSO READ |  டிசம்பர் 2021க்குள் அறிமுகமாக இருக்கும் சிறந்த ஸ்மார்ட்போன்கள் விவரம்!

    மேலும், எலக்ட்ரிக் வாகனங்களை எவ்வளவு நம்பலாம் என்பது பிரச்சனையாக இருக்காது. ஆனால், கூடுதலான அம்சங்கள் மற்றும் புதிய தொழில்நுட்ப அம்சங்களை சேர்க்கும் போது, சிக்கல்கள் ஏற்படத் துவங்கும் என்று ஆய்வு குறிப்பிட்டுள்ளது.

    அதே நேரத்தில், எந்த கார் பிராண்டு நம்பகத்தன்மை வாய்ந்தது, மக்கள் அதிகம் விரும்புகிறார்கள் என்ற கணக்கெடுப்பும் ஆய்வின் ஒரு பகுதியாக நடத்தப்பட்டது. அதன் படி, அதிகமாக நம்பக்கூடிய வாகன பிராண்டுகளாக லெக்சஸ், மாஸ்டா மற்றும் டொயோட்டா ஆகிய மூன்று கார் நிறுவனங்களும் மக்கள் மனதில் இடம்பிடித்துள்ளது. இந்த மூன்று கார் உற்பத்தியாலர்களுமே பல்வேறு ஹைப்ரிட் கார்களை தயாரிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Electric bike, Electric car

    அடுத்த செய்தி