விவசாயத்திற்காக அறந்தாங்கி மாணவிகள் கண்டுபிடித்த செயற்கைக்கோள்..!

விவசாயத்திற்காக அறந்தாங்கி மாணவிகள் கண்டுபிடித்த செயற்கைக்கோள்..!
  • Share this:
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவிகள் சுபானா மற்றும் கீர்த்தனா ஆகிய இருவரும் SFT SAT என்ற சிறியவகை செயற்கைக்கோளை கண்டுபிடித்து உள்ளனர்.

அது குறித்து நம்மிடம் பேசிய மாணவிகள், இந்த செயற்கைக்கோள் மூலம் பருவநிலை மாற்றங்களை கண்டுபிடிக்க முடியும். மேலும், வளி மண்டலத்தில் உள்ள ஆக்சிஜன், கார்பன்டை ஆக்சைடு, காற்றின் ஈரப்பதம், காற்றின் நச்சுத்தன்மை ஆகியவற்றை அளவிட்டு அதன் மூலம் விவசாயத்திற்கு தேவையான பயன்களை பெற்றுக் கொள்ளலாம் என்றனர்.

முதற்கட்டமாக அறந்தாங்கி பகுதியில் உள்ள சில விவசாய நிலங்களை ட்ரோன் மூலம் ஆராய்ந்து சோதித்து பார்த்துள்ளதாக தெரிவித்தனர்.


மேலும், வெற்றிகரமாக இந்த செயற்கைக்கோள் நிலைநிறுத்த பட்டதும், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து விவசாய நிலங்களையும் இதே போன்று ஆராய்ந்து பருவநிலை மாற்றங்களை முன்கூட்டியே கணித்து எந்த நிலத்தில் என்ன மாதிரியான பயிர் செய்தால் நல்ல விளைச்சல் இருக்கும் என்பதை தெரிந்து கொள்ளலாம் என்கின்றனர்.மெக்சிகோவில் உள்ள ஏர்பேஸ்லா ஹீலியம் கேப்சூல் (Airbasela helium capsule) மூலம் இந்த செயற்கை கோள் விரைவில் விண்ணுக்கு அனுப்பப்பட உள்ள நிலையில், நேற்று சென்னை தலைமை செயலகத்தில் தமிழக தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத்தை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
First published: February 19, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading