ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

பாஸ்வேர்டுகளை திருடும் ஆப்ஸ்கள் – மெட்டா நிறுவனம் விடுத்த எச்சரிக்கை!

பாஸ்வேர்டுகளை திருடும் ஆப்ஸ்கள் – மெட்டா நிறுவனம் விடுத்த எச்சரிக்கை!

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

கடந்த வெள்ளிக்கிழமை அன்று மில்லியன் கணக்கான ஃபேஸ்புக் யூசர்கள் ஒரு சில ஸ்மார்ட்போன் ஆப்ஸ்களை பயன்படுத்துவதால் அவர்களுடைய பாஸ்வேர்டுகள் மற்றும் தனிப்பட்ட தரவுகள் எக்ஸ்போஸ் ஆகி  இருப்பதாக எச்சரிக்கை அறிக்கை வெளியிட்டுள்ளது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  ஸ்மார்ட்ஃபோனில் எத்தனையோ வகையான ஆப்ஸ்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. பொழுதுபோக்கு முதல் ஒரு சிலருக்கு ஃபோட்டோ எடிட்டிங், வீடியோ எடிட்டிங் என்று அவர்களுக்கான வேலைவரை ஆயிரக்கணக்கான ஆப்ஸ்கள் கொட்டிக் கிடக்கின்றன. ஆனால் எல்லா ஆப்ஸ்களுமே பாதுகாப்பானவையா? நிச்சயமாக இல்லை. சமீபத்தில் ஃபேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா நிறுவனம் ஒரு சில ஆப்ஸ்கள் உங்களுடைய பாஸ்வேர்டுகளை திருடுவதற்காகவே உருவாக்கப்பட்டிருக்கின்றன என்று ஃபேஸ்புக் யூசர்களுக்கு எச்சரிக்கை அளித்துள்ளது. இதை பற்றிய முழு விவரங்களை இங்கே பார்க்கலாம்.

  கடந்த வெள்ளிக்கிழமை அன்று மில்லியன் கணக்கான ஃபேஸ்புக் யூசர்கள் ஒரு சில ஸ்மார்ட்போன் ஆப்ஸ்களை பயன்படுத்துவதால் அவர்களுடைய பாஸ்வேர்டுகள் மற்றும் தனிப்பட்ட தரவுகள் எக்ஸ்போஸ் ஆகி இருப்பதாக எச்சரிக்கை அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டு மட்டும் மெட்டா நிறுவனம் கிட்டத்தட்ட 400 க்கும் மேற்பட்ட இத்தகைய ஆப்ஸ்களை கண்டறிந்துள்ளது. ஆண்ட்ராய்டு OS தளத்தில் கூகுள் ஸ்டோர் மற்றும் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் தயாரிப்புகளில் ஆப்பிள் ஸ்டோர் இன்று எல்லா வகையான ஸ்மார்ட்ஃபோன்களிலும் இத்தகைய அச்சுறுத்தக்கூடிய நோக்கம் கொண்ட ஆப்ஸ்கள் இருக்கின்றன என்றும் மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.

  Read More : 4G சேவைக்கான அதே விலையில் கிடைக்கும் 5G : அசத்தும் ஏர்டெல் நிறுவனம்!

  மெட்டா நிறுவனம் தன்னுடைய பிளாக்கில், இந்த ஆப்ஸ்கள் கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோர் ஆகியவற்றில் போட்டோ எடிட்டர்கள், கேம்ஸ்கள், விபிஎன் சேவைகள், வணிக ஆப்ஸ் மற்றும் வேறு சில சேவை ஆப்ஸ்கள் என்று பலவிதமான செயலிகளாக சித்தரிக்கப்பட்டு மக்களை ஏமாற்றி வருகிறது. யூசர்கள் டவுன்லோட் செய்த பிறகு அவர்களுடைய சமூகவலைத்தளம் வழியாக அதில் லாகின் செய்யுமாறு இந்த ஆப்ஸ்கள் கோரும். உதாரணமாக ஃபேஸ்புக் பயன்படுத்தி லாகின் செய்யும்போது அதில் உள்ளிடப்படும் யூசர் நேம், பாஸ்வேர்ட் ஆகியவற்றை இந்த ஆப்ஸ்கள் திருடுகின்றன” என்று மெட்டாவின் பாதுகாப்பு குழுவினர் பகிர்ந்து இருந்தனர். இதுவரை கிட்டத்தட்ட 10 லட்சம் யூசர்களுக்கு அவர்களுடைய பாஸ்வேர்டுகள் திருடு போயிருக்கலாம் என்பதை பற்றி நாங்கள் ஏற்கெனவே அறிவிப்பு அனுப்பி இருக்கிறோம் என்பதையும் நிறுவனம் சார்பாக தெரிவித்தனர்.

  ஃபேஸ்புக் யூஸ்ர்களின் பாஸ்வேர்டுகளை திருடக்கூடிய செயலிகளில் கிட்டத்தட்ட 40% புகைப்படங்களை எடிட் செய்வது சம்பந்தப்பட்ட செயல்களாகத்தான் இருக்கின்றன என்பதையும் மெட்டா நிறுவனம் பட்டியலிட்டுள்ளது.

  இவர்களுடைய டார்கெட் மிக மிக எளிதானது! உங்களுக்கு தேவையான ஒரு செயலியை இவர்கள் தயாரித்து விடுகிறார்கள், அதை நீங்கள் டவுன்லோடு செய்த பிறகு நீங்கள் எத்தனை முறை லாகின் செய்தாலும் அல்லது வெவ்வேறு சமூக வலைத்தள கணக்கில் இருந்தும் செய்யும் போதும் அதில் இருந்து உங்களுடைய அனைத்து லாகின் விவரங்களையும் ஆப்ஸ்கள் பெற்றுக் கொண்டுவிடும்.

  யூசர்களுக்கு எச்சரிக்கை அறிவித்ததோடு மட்டுமல்லாமல், மெட்டா நிறுவனம் இத்தகைய ஆப்ஸ்கள் பற்றிய விவரங்களையும் ஆப்பிள் மற்றும் கூகுள் நிறுவனத்திற்கும் அனுப்பியுள்ளது.

  இதைப் பற்றி கேள்வி கேட்டபோது ஆப்பிள் நிறுவனத்தின் தரப்பிலிருந்து எந்தவிதமான பதிலும் கூறப்படவில்லை. ஆனால், கூகுள் நிறுவனம் ஏற்கனவே இதே போன்ற செயலிகளை அடையாளம் கண்டுபிடித்து பிளே ஸ்டோரிலிருந்து அவற்றை நீக்குவதாக தெரிவித்திருக்கிறது. மேலும், ஆண்ட்ராய்டு தளத்தில் கூகுள் பிளே ப்ரொடக்ட் மூலம் யூசர்களுக்கு ஏற்கனவே பாதுகாப்பு இருப்பதாகவும் கூகுள் நிறுவனம் உறுதி அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

  Published by:Lilly Mary Kamala
  First published:

  Tags: Apple, Facebook, Google, Online Frauds