முகப்பு /செய்தி /தொழில்நுட்பம் / ஐ.ஓ.எஸ் 13, ஐபாட்-க்கு புதிய ஓ.எஸ் என ஆப்பிள் டெவலப்பர்கள் மாநாட்டில் வெளியான அதிரடி அறிவிப்புகள்!

ஐ.ஓ.எஸ் 13, ஐபாட்-க்கு புதிய ஓ.எஸ் என ஆப்பிள் டெவலப்பர்கள் மாநாட்டில் வெளியான அதிரடி அறிவிப்புகள்!

ஐஓஎஸ் 13

ஐஓஎஸ் 13

  • 1-MIN READ
  • Last Updated :

ஆப்பிள் நிறுவனம் நடத்திய சர்வதேச டெவலப்பர்கள் மாநாட்டில் ஐபோனுக்கு ஐஓஎஸ் 13 மற்றும்  ஐபாட்-க்கு தனி இயங்குதளம் என பல புதிய அறிவிப்புகளை வெளியிட்டது.

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய அறிவிப்புகள் குறித்து இங்கு விளக்கமாக பார்க்கலாம்.

வேகமான ஐஓஎஸ் 13:

ஐஓஎஸ்

ஆப்பிள் ஐபோன் பிரியர்கள் எதிர்பார்த்தது போன்று ஆப்பிள் ஐஓஎஸ் 13 இந்த மாநாட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

டார்க் மோடு, சிறந்த செயல்திறன் மேம்பாடுகள், 30% வேகமான ஃபேஸ் ஐடி அன்லாக், 2x வேகமான செயலிகள் அறிமுகம், ஆப் சேமிப்பு அளவுகள் குறைப்பு, சஃபாரி, மெயில், நோட்ஸ், மேப்ஸ், ரிமெயிண்டர்ஸ், போட்டோஸ், போன்றவற்றிலும் புதிய அப்டேட்டுகளை ஆப்பிள் அறிமுகம் செய்துள்ளது.

சிரி, ஸ்வைப் கெஸ்ட்ச்சர் மற்றும் பிற மாற்றங்கள்:

மேலும் ஐஒஎஸ் 13-ல் ஸ்வைப் டூ டெக்ஸ் கெஸ்ட்ச்சர்ஸ், எஸ்எம்எஸ் அனுப்பும் போது தொடர்பு எண் குறித்த ஆலோசனை, இசை கேட்கும் போது லைவாக லிரிக், சொந்தமாக எமோஜிக்கள் உருவாக்கும் வசதி போன்றவையும் புதிய இயங்குதளத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஐபாட்-க்கு தனி இயங்குதளம்

ஐபாடு-க்கு புதியதாக தனி ஐபாட் ஓஎஸ் ஒன்றை ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் இனி ஐபாட்-களில் ஒரே நேரத்தில் பல செயலிகளை மல்டிப்பிள் திரை வடிவில் பயன்படுத்த முடியும்.

மேலும் ஐபாட் ஹோம் திரையில் விட்ஜெட்கள், நேரடியாக யூஎஸ்பி மற்றும் எஸ்டி கார்டுகள் சாதனங்களை இணைக்கும் வசதி, காபி, பேஸ்ட் மற்றும் அண்டு போன்றவற்றைப் பயன்படுத்த மூன்று விரல் ஸ்வைப் செய்யும் வசதியும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

புதிய மேக் ஓஎஸ் 10.5 கேட்டாலினா

ஆப்பிள்

மேக் கணினிகளுக்கு கேட்டாலினா என அழைக்கப்படும் புதிய மேக்ஓஎஸ் 10.5-ஐ ஆப்பிள் அறிமுகம் செய்துள்ளது.

ஐடியூன்ஸ்-ஐ நிறுத்த முடிவு செய்துள்ள ஆப்பிள் புதியதாக மியூசிக், பாட் காஸ்ட்ஸ் மற்றும் டிவி என மூன்று செயலிகளை ஆப்பிள் அறிமுகம் செய்துள்ளது.

இந்த இயங்குதளத்தில் 4k HDR வீடியோக்களை நேரடியாகப் பார்க்க முடியும், ஐபாடு-ஐ இரண்டாம் டிஸ்பிளேவாக பயன்படுத்த முடியும். ஆப்களை குரல் மூலமாக இயக்க முடியும் மற்றும் லாக் செய்யவும் முடியும்.

மேலும் பார்க்க:

First published:

Tags: Apple IOS