பல்லாயிரம் கோடி ரூபாயை சென்னையில் முதலீடு செய்கிறது Pegatron: ஆப்பிள் தயாரிப்புகளில் 2-வதாகத் திகழும் பெருநிறுவனம்..

சென்னையில் முதலீடு செய்யவிருக்கும் பெகட்ரான் நிறுவனம்

ஆப்பிள் நிறுவனத்துக்கான உதிரி பாகங்களைத் தயாரிக்கும் 2-வது முன்னணி நிறுவனமாக Pegatron, பல்லாயிரம் கோடி ரூபாயை முதலீடு செய்து, சென்னையில் தன்னுடைய கிளையைத் தொடங்கவிருக்கிறது.

 • Share this:
  ஆப்பிள் நிறுவனத்துக்கான உதிரி பாகங்களைத் தயாரிக்கும் 2-வது முன்னணி நிறுவனமாக Pegatron, பல்லாயிரம் கோடி ரூபாயை முதலீடு செய்து, சென்னையில் தன்னுடைய கிளையைத் தொடங்கவிருக்கிறது.

  முன்னதாக, ஆப்பிள் நிறுவனத்திற்கு உதிரிபாகங்களை தயாரித்து வழங்கும் மற்றொரு முன்னணி நிறுவனமான ஃபாக்ஸ்கான், சென்னையை அடுத்து உள்ள ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஆலையில், சுமார் 7500 கோடி ரூபாயை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. இதன் மூலமாக 6000 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

  அமெரிக்கா, சீனா வர்த்தக போரால் ஏற்பட்டுள்ள மாற்றங்களில் இதுவும் ஒன்றாக கருதப்படுகிறது. இதன்படி, கொஞ்சம் கொஞ்சமாக, சீனாவில் இருந்து ஆப்பிள் போன் தயாரிப்பை வெளியே கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படுகிறது. . சீனாவின் பாக்ஸ்கான் தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் செல்போன்களுக்கான பாகங்கள் இங்கு தயாரிக்கப்படும்.7500 கோடி ரூபாய்க்கு முதலீடு வரும் போது, இதனால் சுமார் 6000 பேருக்கு வேலை கிடைக்கும். செல்போன் பாகங்கள் தயாரிக்க, சீனாவிற்கு செல்ல கூடிய ஆடர்கள் இனி சென்னை, ஸ்ரீபெரும்பதூர் ஆலைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

  ஆப்பிள் நிறுவனத்திற்கான 3 உலகளாவிய ஐஃபோன்கள் தயாரிப்பாளர்கள் உள்ளனர், அவற்றில் விஸ்ட்ரான் & ஃபாக்ஸ்கான் ஏற்கனவே இந்தியாவில் தங்கள் உற்பத்தி வசதியைக் கொண்டுள்ளன. இத்தகைய நடவடிக்கைகள் ஆப்பிள் தனது விநியோகச் சங்கிலியை சீனாவிற்கு வெளியே பன்முகப்படுத்த முன்வருகிறது என்பதைக் குறிப்பதாக சந்தை நிபுணர்கள் தெரிவித்து வருகிறார்கள். மாற்று உற்பத்தித் தளங்களைத் தேடும் நிறுவனங்களை ஈர்ப்பதற்காக, இந்தியா பெரிய மின்னணு உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் நடவடிக்கையாகவும் இது பார்க்கப்படுகிறது. இந்தியாவில் பெகாட்ரான் குறைந்தது 6 மாதங்களில் தயாரிப்புச் செயல்பாடுகளைத் துவக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது
  Published by:Gunavathy
  First published: