• HOME
  • »
  • NEWS
  • »
  • technology
  • »
  • ஆப்பிள் நிறுவனத்தின் குறிப்பிட்ட ஐஃபோன் சாதனங்களுக்கு இலவச சர்வீஸ்

ஆப்பிள் நிறுவனத்தின் குறிப்பிட்ட ஐஃபோன் சாதனங்களுக்கு இலவச சர்வீஸ்

ஆப்பிள் ஐபோன்

ஆப்பிள் ஐபோன்

ஆப்பிள் iPhone 12 மற்றும் iPhone 12 ப்ரோ வாங்கியவர்களில் பலர் ஃபோனில் பிரச்சனைகள் ஏற்படுவதாக புகார் தெரிவித்து வந்தனர்.

  • Share this:
ஆப்பிள் நிறுவனம் iPhone 12, iPhone 12 ப்ரோ, Mac, Airpods தொடர்த்து பல்வேறு தயாரிப்புகளை அறிமுகப்படுத்தி வருகிறது. விலை அதிகமாக இருந்தாலும், உயர் தர தொழில்நுட்பட சாதனங்கள் என்று பெயர் பெற்ற ஆப்பிள் தயாரிப்புகளில் சமீபகாலமாக சில பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளன. அதையொட்டி, ஆப்பிள் நிறுவனம் குறிப்பிட்ட சாதனங்களுக்கு இலவசமாக சர்வீஸ் வழங்குவதாக அறிவித்துள்ளது. ஐபோன் 12 சீரிஸில் உள்ள ஒரு சவுண்ட் காம்போனென்ட்டில் உள்ள பிரச்சனையால், ஒரு சிலருக்கு ரிசீவிங் மாடுல் சரியாக வேலை செய்யவில்லை என்று நிறுவனம் தெரிவித்தது.

ஆப்பிள் iPhone 12 மற்றும் iPhone 12 ப்ரோ வாங்கியவர்களில் பலர் ஃபோனில் பிரச்சனைகள் ஏற்படுவதாக புகார் தெரிவித்து வந்தனர். கடந்த அக்டோபர் 2020 முதல் ஏப்ரல் 2021 வரையிலான காலத்தில் தயாரிக்கப்பட்ட ஐபோன் 12 மற்றும் ஐபோன் 12 ப்ரோ ஆகிய மாடல்களும் சமீபமாக சில பிரச்சனைகளை எதிர்கொண்டுள்ளது என்பதை ஆப்பிள் நிறுவனம் கண்டறிந்துள்ளது. எனவே, இந்த இரு மாடல்களுக்கும் இலவச ரிப்பேர் மற்றும் தேவையான சேவைகள் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.

இந்தியாவில் iPhone 12 மற்றும் iPhone 12 ப்ரோ யூசர்கள், தங்கள் மொபைலில் ஏதேனும் பிரச்சனைகளை எதிர்கொண்டால், ஆப்பிள் நிறுவன சேவைகளை இலவசமாக பெற்றுகொள்ளலாம். சவுண்ட் காம்போனென்ட்டில் ஏற்படும் பிரச்சனைக்கு மட்டும் தான் ஆப்பிள் நிறுவனம் இலவசமாக ரிப்பேர் செய்து தரும். வேறு ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால், அது இந்த திட்டத்தில் வராது என்று நிறுவனம் அறிவித்துள்ளது.

ஐபோன் 12 சீரிஸின் இந்த இரண்டு மாடல்களில் வேறு ஏதேனும் சிக்கல்கள் இருந்தால், அதை முதலில் சரி செய்த பின்பே இந்த சவுண்ட் சம்மந்தப்பட்ட சிக்கல் ரிப்பேர் செய்து தரப்படும். மேலும், ஸ்பெஷல் ரிப்பேர் தேவைப்படும் ஐபோன் 12 சீரிஸ் சாதனங்களுக்கு கூடுதலாக சர்வீஸ் கட்டணங்கள் விதிக்கப்படும். எனவே, உங்களுக்கு இந்த குறிப்பிட்ட சவுண்ட் ரீதியான பிரச்சனை இருந்தால் மட்டுமே இந்த இலவச சேவை வழங்கப்படும். மற்ற ரிப்பேர் சேவைகளை இலவசமாகப் பெற உங்கள் ஐபோன் வாரண்ட்டியில் இருக்க வேண்டும்.

உங்கள் ஐபோன் வாரண்ட்டியில் உள்ளதா என்பதைத் தெரிந்து கொள்ள, உங்கள் ஐபோனின் சீரியல் எண்ணை தெரிந்து கொள்ள வேண்டும். அதற்கு, ஐபோனில் settings என்பதற்குச் சென்று, general என்பதைத் தேர்ந்தெடுத்து About என்பதைக் கிளிக் செய்து சீரியல் எண்ணை குறித்துக் கொள்ளுங்கள். பிறகு, Checkcoverage.apple.com என்ற இணைப்பில் உங்கள் மொபைலின் சீரியலின் எண் மற்றும் ஸ்பெஷல் கோடை உள்ளிடுங்கள். இதன் மூலம் உங்கள் ஐபோனுக்கு செல்லுபடியாகும் வாரண்டி இருக்கிறதா அல்லது காலாவதி ஆகிவிட்டதா என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

Also read... நீங்க ஆண்ட்ராய்டு மொபைல் யூஸ் பண்றீங்களா? அப்போ இந்த 'ஜோக்கர்' வைரஸ் கிட்ட இருந்து தப்பிச்சிடுங்க!

ஐபோன் 12 சீரிஸில் மொத்தமாக எத்தனை யூனிட்கள் பழுதாகியுள்ளன என்பதைப் பற்றிய தகவல் இன்னும் வெளியாகவில்லை. விரைவில் நிறுவனம் அதைப்பற்றி அறிவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இலவசமாக ரிப்பேர் செய்வதற்கு நீங்கள் உங்கள் ஐபோனை வழங்கும் முன்பு, உங்கள் மொபைலில் உள்ள டேட்டாவை கணினியில் அல்லது ஐக்ளவுடில் பேக்அப் செய்யுங்கள் என்று ஆப்பிள் நிறுவனம் கூறியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: