ஆப்பிள் நிறுவனத்தின் சார்பில் புதிதாக எம்2 ப்ரோ மேக்ஸ் மற்றும் ஒரு புதிய ஹோம்பாட் ஆகியவை இந்த வாரம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. மேலும், ஸ்மார்ட் ஹோம் பிரிவு பொருட்கள் உட்பட எதிர்கால தயாரிப்புகள் குறித்து ஆப்பிள் நிறுவனம் கவனம் செலுத்தி வருகிறது. அந்த வகையில் வீட்டில் பல்வேறு எலெக்ட்ரானிக் பொருட்களை இயக்கும் வகையில், குறைந்த விலை கொண்ட ஐபாட் ஒன்றை ஆப்பிள் நிறுவனம் விரைவில் விற்பனைக்கு கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஐபாட் சாதனத்தை மேக்னடிக் பாஸ்டனர்ஸ் மூலமாக சுவரில் மாட்டி வைத்துக் கொள்ளலாம் என்று கூறப்படுகிறது. வீட்டில் உள்ள விளக்குகள், வீடியோ பிளே செய்வது, ஃபேஸ் டைம் கால்ஸ் போன்ற வேலைகளை இந்த ஐபாட் கொண்டு இயக்க முடியும் என்று ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன. ஸ்மார்ட் டிஸ்பிளேயுடன் கூடிய ஹாமாபாட் போன்றதொரு கருவியை ஆப்பிள் நிறுவனம் உருவாக்க உள்ளதாக கூறப்பட்ட நிலையில் தற்போது இந்தச் செய்தி வெளிவந்துள்ளது.
Also Read : இந்தியர்களின் மனங்களை வென்ற ஸ்மார்ட்போன் இதுதான்! - காரணம் தெரியுமா?
கூகுள், அமேசானுக்கு போட்டி:
கூகுள் நிறுவனத்தின் நெஸ்ட் ஹஃப் மற்றும் அமேசான் நிறுவனத்தின் எக்கோ ஷோ ஆகிய ஸ்மார்ட் டிவைஸ் ஹஃப்களுக்குப் போட்டியாக, ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்மார்ட் ஐபாட் கருவியானது குறைந்த விலையில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று கூறப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளில் இதுபோன்ற கருவிகளுக்கான தேவைகள் அதிகரித்துள்ளன என்பது ஆப்பிள் நிறுவனம் புரிந்து கொண்டிருப்பதாக தெரிகிறது. ஸ்மார்ட் ஹோம் சூழலை விரிவுப்படுத்த நினைக்கும் பயனாளர்களுக்கு உதவிகரமாக அடுத்தடுத்த சாதனங்களை ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய ஸ்மார்ட் ஐபாட் அறிமுகம் செய்யப்படும் அதே வேளையில், ஏற்கனவே உள்ள சேவைகளையும் அதே சாதனத்தில் ஆப்பிள் பயன்படுத்திக் கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஹோம்பாட் டிவைஸில் இடம்பெறக் கூடிய டிஸ்பிளேயானது விலை அதிகம் என்ற நிலையில், அதைப் போல அல்லாமல் வேறொரு டிஸ்பிளேயே ஐபாட் கருவியில் ஆப்பிள் நிறுவனம் கொண்டு வரவுள்ளது. இந்த ஆண்டு ஜூன் மாதத்தை ஒட்டிய சமயத்தில் புதிய சாதனம் சந்தையில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மற்ற எலெக்ட்ரானிக் சாதனங்களை கட்டுப்படுத்துவதற்கான வசதிகளை கொண்டதாக மட்டும் புதிய ஐபாட் இருக்குமானால், அதில் இடம்பெறும் ஸ்கிரீன் என்பது பயனாளர்களுக்கான வீடியோ பயன்பாட்டு தேவைகளை நிறைவு செய்யக் கூடிய வகையில் இருக்குமா என்பதை தெரிந்து கொள்ள தொழில்நுட்ப ஆர்வலர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.