இசிஜி வசதிகொண்ட ஆப்பிள் வாட்ச்... இந்தியாவில் விற்பனை செய்வதில் சிக்கல்!

news18
Updated: September 14, 2018, 9:11 PM IST
இசிஜி வசதிகொண்ட ஆப்பிள் வாட்ச்... இந்தியாவில் விற்பனை செய்வதில் சிக்கல்!
அப்பிள் சீரிஸ் 4 வாட்ச்.
news18
Updated: September 14, 2018, 9:11 PM IST
மனிதனின் இதயத்துடிப்பை கண்டறியும் நவீன தொழில்நுட்ப வசதியுடன், ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள சீரிஸ்-4 கைக்கடிகாரம், இந்தியாவில் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், இந்திய வாடிக்கையாளர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

ஆப்பிள் நிறுவனம் 2018-ம் ஆண்டுக்கான தனது புதிய மாடல் ஐபோன்கள் மற்றும் கைக்கடிகாரங்களை இரண்டு நாட்களுக்கு முன்பு அமெரிக்காவில் அறிமுகம் செய்தது.

இதில், சீரிஸ் 4 என்ற கைக்கடிகாரத்தில், மனிதனின் இதயத்துடிப்பை அறிந்து கொள்ளும் இ.சி.ஜி. எனப்படும் எலக்ட்ரோ கார்டியாயோ கிராஃபி தொழில்நுட்ப வசதி சேர்க்கப்பட்டுள்ளது.

ஆனால், இ.சி.ஜி. சேவையை பெறவேண்டும் என்றால், அதற்கான பிரத்யேக செயலி ஒன்றை பதிவிறக்கம் செய்யவேண்டும்

அவ்வாறு, இ.சி.ஜி. வசதி கிடைக்கப்பெறும் பட்சத்தில், மனிதனின் இதயத்துடிப்பை துல்லியமாக அறிய முடியும். அத்துடன், இதயத்துடிப்பின் சீரான வேகம் மற்றும் பின்னடைவு குறித்து தெளிவான தகவலை பெறமுடியும்.

சீரிஸ்-4 கைக்கடிகாரத்தில் உள்ள இ.சி.ஜி. வசதியின் மூலம், இதயத்துடிப்பின் செயல்பாட்டை 30 நொடிக்குள் கண்டறியலாம். தொடக்க விலை 28 ஆயிரத்து 686 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ள இந்த நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய கைக்கடிகாரத்தின் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ள நிலையில், அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா உட்பட 16 நாடுகளில் வருகின்ற 21-ம் தேதி கிடைக்கும்.

ஆனால், இந்தியாவில், சீரிஸ்-4 கைக்கடிகாரம் கிடைக்கப்பெற்றாலும், அதன் சிறப்பு அம்சமாக பார்க்கப்படும் இ.சி.ஜி. வசதியை பெறுவதில் சிக்கல் நிலவுகிறது. இ.சி.ஜி. வசதியுடன் சீரிஸ்-4 கைக்கடிகாரத்தில் இந்தியாவில் விற்பனை செய்யவேண்டும் என்றால், முதலில் மத்திய அரசிடம் அனுமதிபெற வேண்டும்.
Loading...
இந்த தொழில்நுட்பம், கைக்கடிகாரத்தில் பொருத்தப்பட்டுள்ளதால், அதன் நம்பகத்தன்மை ஆராயப்பட்டு, தடையிலா சான்று பெறுவது அவசியம். இதுபோன்ற சிக்கல்கள் உள்ளதால், இந்தியாவில் முதல் கட்டமாக இ.சி.ஜி. வசதியுடன் சீரிஸ்-4 கைக்கடிகாரம் கிடைப்பது அரிதாகும்.

இருந்த போதும், இந்தியாவில் புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய சீரிஸ்-4 கைக்கடிகாரம் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படுவதை தவிர்க்க இயலாது. இ.சி.ஜி. எனப்படும் இதயத்துடிப்பை அறியும் வசதியுடன் கூடிய கைக்கடிகாரம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
First published: September 14, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்