• HOME
  • »
  • NEWS
  • »
  • technology
  • »
  • Apple Watch, Garmin, Fitbit Trackers மூலம் கொரோனா பாதிப்பை முன்கூட்டியே கண்டறிய முடியும்: ஆய்வில் தகவல்!

Apple Watch, Garmin, Fitbit Trackers மூலம் கொரோனா பாதிப்பை முன்கூட்டியே கண்டறிய முடியும்: ஆய்வில் தகவல்!

இதய துடிப்பு மாறுபாட்டின் மெட்ரிக், அடிப்படையில் இரண்டு இதய துடிப்புகளுக்கு இடையிலான நேரத்தை அளவிடுகிறது. அதாவது, உங்கள் உடல்நலம் நன்றாக இருந்தால், உங்கள் உடல் எந்த நோய்த்தொற்றுக்கும் ஆளாகவில்லை என்றால், நீங்கள் இருக்கும் சூழ்நிலையைப் பொறுத்து உங்கள் இதய துடிப்பு ஏற்ற இறக்கமாக இருப்பது பொதுவானது.

  • News18
  • Last Updated :
  • Share this:
ஆப்பிள் வாட்ச் (Apple Watch) போன்ற ஸ்மார்ட்வாட்ச்கள் மற்றும் கார்மின், ஃபிட்பிட் (Garmin and Fitbit போன்ற நிறுவனங்களால் தயாரிக்கப்பட்ட உடற்பயிற்சி ட்ராக்கர்கள் (Fitness Trackers), அறிகுறியற்ற நோயாளிகளில் கொரோனாவை கண்டறிய முக்கியமானவை. மேலும், அவை உடல்நிலை சரியில்லாமல் இருப்பதற்கான எந்த அறிகுறிகளையும் ஒருவர் வெளிப்படுத்துவதற்கு சில நாட்களுக்கு முன்னதாகவே நோய் பாதிப்பினை கண்டறிய உதவுவதாக ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது. 

நியூயார்க்கில் உள்ள மவுண்ட் சினாய் ஹெல்த் சிஸ்டம் (Mount Sinai Health System in New York) மற்றும் கலிபோர்னியாவின் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம் (Stanford University in California) போன்ற பல்வேறு அமைப்புகளால் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் இந்த தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆய்வுகளின்படி, ஃபிட்பிட், கார்மின் மற்றும் ஆப்பிள் வாட்ச் போன்ற டிராக்கர்கள் இதய துடிப்பு மாறுபாட்டை ஒரு மெட்ரிக் மூலம் கண்டறிய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது உங்கள் உடலில் ஏதேனும் தவறு உள்ளதா என்பதைக் கண்டறிய உதவுகிறது என வல்லுநர்கள் கூறுகின்றனர். 

இதய துடிப்பு மாறுபாட்டின் மெட்ரிக், அடிப்படையில் இரண்டு இதய துடிப்புகளுக்கு இடையிலான நேரத்தை அளவிடுகிறது. அதாவது, உங்கள் உடல்நலம் நன்றாக இருந்தால், உங்கள் உடல் எந்த நோய்த்தொற்றுக்கும் ஆளாகவில்லை என்றால், நீங்கள் இருக்கும் சூழ்நிலையைப் பொறுத்து உங்கள் இதய துடிப்பு ஏற்ற இறக்கமாக இருப்பது பொதுவானது. உதாரணமாக, உங்கள் நரம்பு மண்டலத்தில் மன அழுத்தம், நிதானமான நேரங்கள் மற்றும் எந்தவொரு நேரத்திற்கும் தகுந்தாற்போல உங்கள் இதய துடிப்பு மாறும். பெரும்பாலும் அவை பொதுவாக நடக்கின்றன.

இருப்பினும், உங்கள் உடல் நோய்த்தொற்றுகளால் பாதிக்கப்பட்டிருந்தால், அதிலும் குறிப்பாக அழற்சி நோய்த்தொற்றுகள் மூலம் பாதிக்கப்பட்டிருந்தால், நரம்பு மண்டலம் மெதுவாக செயல்படும். இது இதயத் துடிப்புகளில் குறைந்த மாறுபாட்டிற்கு வழிவகுக்கிறது. டிராக்கர்களைப் பற்றிய மவுண்ட் சினாய் ஆய்வின் ஆசிரியரும், ஐகான் ஸ்கூல் ஆஃப் மெடிசின் நிறுவனத்தின் மருத்துவ உதவி பேராசிரியருமான ராப் ஹிர்டன் (Rob Hirten) கூறியதாவது, " இப்போது, மக்கள் உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார்கள், நன்றாக உணரவில்லை என்று அவர்கள் சொல்வதை நாங்கள் நம்புகிறோம். 

ஆனால் ஆப்பிள் வாட்ச் அணிந்த ஒரு நபரிடம் இருந்து இதுபோன்ற எந்த ஒரு உள்ளீடும் தேவையில்லை மற்றும் அறிகுறியற்ற நபர்களையும் அடையாளம் காண முடியும். தொற்று நோய்களை சிறப்பாக கட்டுப்படுத்த இது ஒரு வழியாகும். உடலில் வீக்கம் உருவாகும் போது இதய துடிப்பு மாறுபாடு குறிப்பான்கள் மாறுகின்றன என்பதை நாங்கள் ஏற்கனவே அறிந்திருந்தோம். மேலும் கொரோனா ஒரு நம்பமுடியாத அழற்சி நிகழ்வு. மக்கள் அதை அறிவதற்கு முன்பே அவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கணிக்க இந்த ட்ராக்கர்கள் நம்மை அனுமதிக்கிறது. ” என்று கூறினார். 

இதனை தொடர்ந்து, ஸ்டான்போர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சிக்கு தலைமை தாங்கிய பேராசிரியர் மைக்கேல் ஸ்னைடர் (Michael Snyder) கூறியதாவது, "தொற்றுநோய்களைக் கண்டறிய டிராக்கர்கள் மற்றும் ஸ்மார்ட்வாட்சுகளைப் பயன்படுத்துவதன் மிகப்பெரிய நன்மை என்னவென்றால், இதன் மூலம் ஒரு நிலையான கண்காணிப்பை செயல்படுத்த முடியும். எனவே கொரோனா வைரஸ் மட்டுமல்ல, வேறு எந்த நோயையும் விரைவாகக் கண்டறிய இது உதவுகிறது" எனக் கூறினார்.

Also read... வாட்ஸ் அப் செயலி பாதுகாப்பானது என ஸ்டேடஸ் வைத்த வாட்ஸ் அப் நிறுவனம்

மேலும் இந்த ஆய்வு இன்று கொரோனா பரிசோதனை எவ்வாறு செயல்படுகிறது என்பதற்கு முற்றிலும் மாறுபட்டது. பொதுவாக கொரோனா பரிசோதனைக்கு குறைந்தபட்சம் 24 மணிநேரமாவது ஆகலாம். எனவே சில நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே இதனை செய்ய முடியும். இதனால் கொரோனாவை முன்கூட்டியே கண்டறிவதற்கான செயல்திறன் குறைகிறது. இதன் காரணமாகவே பிட்னஸ் ட்ராக்கர்கள் மற்றும் ஸ்மார்ட்வாட்ச்களின் பயன்பாடு பயனுள்ளதாக இருக்கிறது.

மேலும் ஆப்பிள், கார்மின், ஃபிட்பிட் அல்லது வேறு எந்த அணியக்கூடிய தயாரிப்பு நிறுவனங்களும் இந்த ஆய்வுக்கு ஸ்பான்சர்களாக பங்கேற்கவில்லை என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆப்பிள் வாட்ச் பெரும்பாலும் மாரடைப்பு ஏற்படுவதைக் கண்டறிய உதவியது. எனவே மக்களுக்கு உயிர் காக்கும் விஷயங்களை அவை செய்கிறது என்று அறிக்கையில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. சமீபத்திய காலங்களில் இந்த ஆய்வுகள் ஸ்மார்ட்வாட்ச்கள் மற்றும் இன்றைய டிராக்கர்களுடன் வரும் தீவிரமான சான்றுகளை உறுதிப்படுத்துவதில் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றன.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: