ஈசிஜி வசதி உடனான ஆப்பிள் வாட்ச்... புது அம்சமாக இந்தியாவில் அறிமுகம்!

உங்களது சோதனை முடிக்கப்பட்டு ஈசிஜி ரிப்போர்ட் திரையில் காண்பிக்கப்படும். இதை பயனாளர்கள் பிடிஎஃப் ஆக மாற்றி பதிவிறக்கமும் செய்துகொள்ளலாம்.

ஈசிஜி வசதி உடனான ஆப்பிள் வாட்ச்... புது அம்சமாக இந்தியாவில் அறிமுகம்!
ஆப்பிள் வாட்ச் ஈசிஜி
  • News18
  • Last Updated: September 21, 2019, 1:06 PM IST
  • Share this:
புதிய OS 6.0 அப்டேட்டை ஆப்பிள் நிறுவனம் தனது அனைத்து வாட்ஸ் அறிமுகங்களுக்கும் அமல்படுத்துகிறது.

இதன் மூலம் வாய்ஸ் மெமோ, மாதவிடாய் நாட்கள் ட்ராக்கிங், வாட்சிலேயே ஆப்ஸ் பதிவிறக்கம் செய்தல் மற்றும் நாய்ஸ் என்னும் புது ரக செயலிகளை பயனாளர்கள் அப்டேட் செய்துகொள்ள முடியும்.

குறிப்பாக, இப்புதிய அப்டேட் மூலம் இந்தியாவுக்கென விடுபட்டுப் போயிருந்து புதிய அம்சங்கள் தற்போது கிடைத்துள்ளன. OS 6.0 அப்டேட் மூலம் அனைத்து ஆப்பிள் ரக வாட்ச் மூலமாகவும் இதயத்துடிப்பை அறிவிக்கும் நோட்டிஃபிகேஷன் கிடைக்கும். ஆப்பிள் வாட்ஸ் சீரிஸ் 4 பயன்படுத்தும் பயனாளர்கள் இனி வாட்ஸ் மூலமாகவே ஈசிஜி பதிவுகளைப் பெற முடியும்.


சர்வதேச அளவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள அத்தனை அம்சங்களையும் அப்டேட்களையும் தாங்கிக்கொண்டே புதிய ஆப்பிள் வாட்ஸ் சீரிஸ் 5 இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது. சீரிஸ் 4 மற்றும் 5 வாட்ச்களின் மிகச் சிறப்பான அம்சமே ஈசிஜி பதிவுதான். இருதய பிரச்னைகளை இதன் மூலம் முன்னரே அறிந்துகொண்டு தகுந்த சிகிச்சை எடுக்க முடியும்.

ஆப்பிள் சீரிஸ் 4 அல்லது 5 வைத்திருந்தால் அதிலுள்ள ஈசிஜி ஆப் மூலம் உங்கள் விரலை கொடுக்கப்பட்டிருக்கும் இடத்தில் வைக்க வேண்டும். 30 விநாடிகளுக்குப் பின் விரலை எடுக்கும் போது உங்களது சோதனை முடிக்கப்பட்டு ஈசிஜி ரிப்போர்ட் திரையில் காண்பிக்கப்படும். இதை பயனாளர்கள் பிடிஎஃப் ஆக மாற்றி பதிவிறக்கமும் செய்துகொள்ளலாம்.

மேலும் பார்க்க: இந்தியாவுக்கான கூகுள்பே: பாதுகாப்பான பணப் பரிமாற்றங்களுக்கு ஏற்ற அப்டேட்!யூ டியூப் படையுடன் விஜய்
First published: September 21, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்