ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

வெளியில் தெரியாத இதநோய்களையும் கண்டுபிடிக்கும் ஆப்பிள் வாட்ச்- புதிய ஆய்வு !

வெளியில் தெரியாத இதநோய்களையும் கண்டுபிடிக்கும் ஆப்பிள் வாட்ச்- புதிய ஆய்வு !

ஆப்பிள் வாட்ச்

ஆப்பிள் வாட்ச்

பொதுவாக இதயத்தின் இடது வென்ட்ரிகுலர் செயலிழப்பு இதயக் கோளாறுகளுக்கு வழிவகுக்கும். இது தீவிரமடையும் போது இதய செயலிழப்புக்கு வழிவகுக்கும்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai |

இதய நோய்கள் என்பது முன்பை விட அதிகரித்து பொதுவான காய்ச்சல் தலைவலி போல் ஆகிவிட்டன. அதே நேரத்தில், அதை கண்டறிய போதுமான கேஜெட்டுகள் தயாரிப்பு அதிகரித்து வருகின்றன. அப்படியான ஒரு கேஜெட் தான் இன்றைக்கு நாம் பார்க்க இருப்பதும்.

இன்றைய காலகட்டத்தில் ஒப்பிடுகையில் "மாஸ்-மார்க்கெட்" கேஜெட்களில் ஒன்றாக ஆப்பிள் வாட்ச் இருந்து வருகிறது. இது உயிர்காக்கும் தன்மை கொண்டது என்று மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்பட்டு வருகிறது. நோய்களை கண்டிருந்த சில நிகழ்வுகளையும் இந்த உலகம் உதாரணங்களாக பார்த்து வருகிறது.

இந்நிலையில், மாயோ கிளினிக்கின் புதிய ஆய்வு, ஆப்பிள் வாட்சின் ஈசிஜி திறன்களை உன்னிப்பாகக் கவனித்து, இடது வென்ட்ரிகுலர் செயலிழப்பு போன்ற வெளியில் தெரியாத இதய அசாதாரணங்களைக் கண்டறிய உதவுமா என்பதை கண்டறிந்தது. அதில் ஒரு மகிழ்ச்சியான செய்தியும் கிடைத்துள்ளது. ஆப்பிள் வாட்சின் திறனால் அது சாத்தியம் என்று தெரிய வந்துள்ளது.

இதையும் படிங்க:ஆஹா.. சூப்பர்! வாட்ஸ் அப்பில் ஓட்டுப்போடும் புதிய வசதி

பொதுவாக இதயத்தின் இடது வென்ட்ரிகுலர் செயலிழப்பு இதயக் கோளாறுகளுக்கு வழிவகுக்கும். இது தீவிரமடையும் போது இதய செயலிழப்புக்கு வழிவகுக்கும். ஆனால் இதன் அறிகுறிகள் ஏதும் வெளியில் தெரியாது. தீவிரமடைந்து இதயம் செயலிழக்கும் போது தான் வெளியில் தெரியும்.

ஆனால் இதன் மெல்லிய அறிகுறிகளை ஆப்பிள் வாட்ச் கொண்டு கண்டுபிடிக்க இயலும். இதை மேலும் மேம்படுத்தினால் அறிகுறிகள் இல்லாத இதய நோய்களைக் கூட கண்டறிய உதவும் என்கின்றனர் ஆய்வாளர்கள் .

இந்த அறிக்கையை ஆதரித்து, ஆகஸ்ட் 2021 முதல் பிப்ரவரி 2022 வரை அமெரிக்கா மற்றும் பிற 11 நாடுகளைச் சேர்ந்த 2000க்கும் மேற்பட்ட நோயாளிகளுடன் ஒரு பரிசோதனையை நடத்தியது. முடிவில், 1 லட்சத்திற்கும் அதிகமான பங்கேற்பாளர்கள் தங்கள் ஆப்பிள் வாட்ச் மூலம் தங்கள் ஈசிஜிகளை அனுப்பினர்.

இதையும் படிங்க: வாட்ஸ்அப்பில் இப்படி எல்லாம் கூட ட்ரிக்ஸ் இருக்கா..! இது தெரியாமா போச்சே

ECG அறிக்கைகள் பின்னர் ஆராய்ச்சியாளர்களால் உருவாக்கப்பட்ட AI அல்காரிதம் வழியாக செயலாக்கப்பட்டன. அந்த 30-நாள் காலப்பகுதியில், 0.885 வளைவின் கீழ் பகுதியுடன் குறைந்த EF (எஜெக்ஷன் பின்னம்) உள்ள நோயாளிகளை AI அல்காரிதம் கண்டறிந்தது.

எளிமையான சொற்களில், மருத்துவம் இல்லாத சூழலில் எடுக்கப்பட்ட ECGகளைப் பார்க்கும் நுகர்வோர் இதய செயலிழப்பு நோயாளிகளை கண்காணிக்கும் கைவைக்கும் அடையாளம் காணும் திறன் ஸ்மார்ட்வாட்ச்கள் கொண்டுள்ளது என்பதை அறிக்கைகள் நிரூபித்துள்ளன.

Published by:Ilakkiya GP
First published:

Tags: Apple watch, Heart disease