நெட்ஃப்ளிக்ஸ்-க்குப் போட்டியா? இந்தியாவில் வெளியானது ஆப்பிள் டிவி+

ஆப்பிள் மியூசிக் ஸ்டூடண்ட் ப்ளான் ஒன்றும் வெளியாகி உள்ளது. இந்தியாவில் இதற்கான சந்தா மாதம் 49 ரூபாய்.

நெட்ஃப்ளிக்ஸ்-க்குப் போட்டியா? இந்தியாவில் வெளியானது ஆப்பிள் டிவி+
ஆப்பிள் டிவி+
  • News18
  • Last Updated: November 1, 2019, 11:39 PM IST
  • Share this:
இந்தியா உள்ளிட்ட 100 நாடுகளில் இன்று ஆப்பிள் டிவி+ லைவ் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் ஆப்பிள் டிவி+ காண மாத சந்தா 99 ரூபாய்.

புதிய அறிமுகம் என்பதால் இந்தியாவில் ஆப்பிள் டிவி+ காண ஒரு வார இலவச ட்ரயல் தரப்படுகிறது. ஆப்பிள் சாதனம் ஏதும் சமீபத்தில் வாங்கியிருந்தால் உங்களுக்கு ஓராண்டுக்கான சந்தா இலவசம். நெட்ஃப்ளிக்ஸ், அமேசான் ப்ரைம் போல் இல்லாமல் முற்றிலும் தனது சொந்தத் தயாரிப்பிலான ஒரிஜினல் வீடியோக்களை மட்டுமே வெளியிட உள்ளது ஆப்பிள் டிவி+.

முதற்கட்டமாக 10 நிகழ்ச்சிகளை தயாரித்துள்ளது ஆப்பிள். இதற்காக 42,635 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. ஆனால், தற்போதைய சூழலில் இந்த முதலீடு நெட்ஃப்ளிக்ஸ், அமேசான் ப்ரைம் தளங்களைவிட குறைவுதான். கூடுதலாக ஆப்பிள் மியூசிக் ஸ்டூடண்ட் ப்ளான் ஒன்றும் வெளியாகி உள்ளது.


இந்தியாவில் இதற்கான சந்தா மாதம் 49 ரூபாய். ஆப்பிள் டிவி+ சேவை ஐபோன், ஐபாட் டச், ஐபேட், ஆப்பிள் டிவி, மேக் லேப்டாப் ஆகிய தளங்களில் மட்டுமே காண முடியும். ஆண்ட்ராய்டு, ஆண்ட்ராய்டு டிவி போன்ற இதர ஸ்மார்ட் சாதனங்களுக்கு ஆப்பிள் டிவி+ வெளிவருமா என்பது குறிந்து எந்தவொரு அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

மேலும் பார்க்க: 108 மெகாபிக்சல் கேமிரா... 5X ஆப்டிகல் ஜூம்... வருகிறது ஜியோமி Mi CC9 Pro

யார் இந்த சிங்கப்பெண்கள்?
First published: November 1, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்