வெறும் 99 ரூபாய்க்கு ஆப்பிள் டிவி ப்ளஸ்...நெட்ஃப்ளிக்ஸ், அமேசானுக்குப் போட்டியா?

ஆப்பிள் டிவி அறிமுகம்

ஆப்பிள் ஆர்கேட் கேமிங் தளத்தைப் பொறுத்தவரையில் கொனாமி, கேப்காம் மற்றும் அன்னாபூர்னா ஆகியோருடன் ஆப்பிள் கூட்டணி அமைத்துள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
வீடியோ ஸ்ட்ரீமிங் துறையில் புதிதாக ஆப்பிள் டிவி ப்ளஸ் களம் இறங்கியுள்ளது. நெட்ஃப்ளிக்ஸ், அமேசான் ப்ரைம் போன்ற தளங்களுக்குக் கடும் போட்டி அளிக்கும் வகையில் வெறும் 99 ரூபாய்க்கு ஆப்பிள் டிவி ப்ளஸ் அறிமுகம் ஆகியுள்ளது.

ஆப்பிள் டிவி ப்ளஸ் உடன் ஆப்பிள் ஆர்கேட் அறிமுகம் ஆக உள்ளது. ஆப்பிள் ஆர்கேட் என்பது இந்திய கேமிங் பிரியர்களுக்கு பெரும் மகிழ்ச்சி அளிக்கும் அறிமுகமாகவே இருக்கும். இரண்டு சேவைகளுமே மாதம் 99 ரூபாய்க்கு வருகிறது. இந்த சேவை ஆப்பிள் சாதனங்களில் மட்டுமல்லாது அமேசான் Fire டிவி, சாம்சங் மற்றும் சோனி ஆகிய சாதனங்களிலும் இயக்க முடியும்.

அதிகப்படியாக ஒரிஜினல் தயாரிப்புகளை வெளியிட ஆப்பிள் முடிவு செய்துள்ளது. புது சீரிஸ்கள் பல வெளியாக உள்ளன. இந்தியாவில் நெட்ஃப்ளிக்ஸ் மற்றும் அமேசான் ப்ரைம் வீடியோ தளங்களைவிட இது மிகவும் குறைந்த பட்ஜெட் என்பதால் மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைக்கும் என ஆப்பிள் எதிர்பார்ப்பு கொண்டுள்ளது.

இந்தியாவின் அத்தனை நகரங்களையும் சென்றடைய வேண்டி இந்தியாவுக்கு ஏற்ற தயாரிப்புகளையும் வெளியிட ஆப்பிள் முடிவு செய்துள்ளது. ஆப்பிள் ஆர்கேட் கேமிங் தளத்தைப் பொறுத்தவரையில் கொனாமி, கேப்காம் மற்றும் அன்னாபூர்னா ஆகியோருடன் ஆப்பிள் கூட்டணி அமைத்துள்ளது.

மேலும் பார்க்க: வெளியான புது ஐபோன் மாடல்கள்... ஆப்பிளின் விலைப்பட்டியல் வெளியீடு...!

மூன்று வகையான ஐபோன்களை அறிமுகப்படுத்திய ஆப்பிள்!
Published by:Rahini M
First published: