ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

இந்தியாவில் ஐபோன் 14 சீரிஸ் உற்பத்தியை தொடங்கும் ஆப்பிள் - விலை குறையுமா.?

இந்தியாவில் ஐபோன் 14 சீரிஸ் உற்பத்தியை தொடங்கும் ஆப்பிள் - விலை குறையுமா.?

ஐபோன் 14 சீரிஸ்

ஐபோன் 14 சீரிஸ்

Apple iPhone 14 Series | ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் 14 சீரிஸை இந்தியாவில் உற்பத்தி செய்ய முடிவெடுத்துள்ளதால் விலை குறையுமா? என்ற எதிர்பார்ப்பு வாடிக்கையாளர்கள் இடையே நிலவி வருகிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

உலக அளவில் முன்னணி ஸ்மார்ட் போன் தயாரிப்பு நிறுவனமான ஆப்பிள் சீனாவில் தனது பெரும்பாலான ஐபோன்களை தயாரித்து வந்த நிலையில், 2017ம் ஆண்டு மே மாதம் முதல் இந்தியாவில் உள்ள விஸ்ட்ரான் தொழிற்சாலையில் ஐபோன் எஸ்இ மாடல் உற்பத்தியை முதன் முறையாக தொடங்கியது. மேலும் சென்னையில் உள்ள ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஃபாக்ஸ்கான் தொழிற்சாலை ஐபோன் உற்பத்தியில் முதன்மையானதாக விளங்குகிறது. இங்கு ஐபோன் எஸ்இ, ஐபோன் 12, ஐபோன் 13 தயாரிக்கப்பட்டு வரும் நிலையில், விரைவில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஐபோன் 14 சீரிஸையும் உற்பத்தி செய்ய ஆப்பிள் நிறுவனம் முடிவெடுத்துள்ளது.

கொரோனா லாக்டவுன் காரணமாக உற்பத்தியை நிறுத்தி வைத்திருந்த ஆப்பிள் நிறுவனம், இம்மாத தொடக்கத்தில் ஐபோன் 14 சீரிஸை அறிமுகப்படுத்தியது. ஐபோன் 14, ஐபோன் 14 மேக்ஸ் , ஐபோன் 14ப்ரோ , ஐபோன் 14ப்ரோ மேக்ஸ் என 4 மாடல்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. மேம்படுத்தப்பட்ட கேமரா மற்றும் பாதுகாப்பு அம்சங்களுடன் அறிமுகப்பட்டுள்ள ஐபோன் 14 சீரிஸின் பண்டிகை கால விற்பனை களைக்கட்ட தொடங்கியுள்ளது.

இந்நிலையில் சென்னையில் உள்ள ஃபாக்ஸ்கான் தொழிற்சாலையில் ஐபோன் 14 சீரிஸை உற்பத்தி செய்ய உள்ளதாக ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது. இதுகுறித்து ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், "இந்தியாவில் ஐபோன் 14-யைத் தயாரிப்பதில் உற்சாகமாக உள்ளோம்" என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆப்பிள் ஐபோன் ப்ரோ மற்றும் ஐபோன் ப்ரோ மேக்ஸ் போன்ற விலையுயர்ந்த பீரியம் போன் தயாரிப்பை இந்தியாவில் தொடங்க உள்ளது இதுவே முதல் முறையாகும். மேலும் உள்நாட்டில் தயாரிக்கப்படும் ஐபோன் 14 சீரிஸ் மாடல்கள் இந்தியாவில் மட்டுமே விற்பனை செய்யப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளதால் விலையில் ஏதாவது மாற்றம் இருக்குமா? என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

வரி மற்றும் சுங்கக்கட்டணம் காரணமாக பிற நாடுகளை விட இந்தியாவில் ஐபோன் 14 சீரிஸ் விலை மிகவும் அதிகமாக உள்ளது. எனவே உள்நாட்டு உற்பத்தி காரணமாக ஐபோன் 14 சீரிஸ் விலை குறைய வாய்ப்புள்ளதா என்றால்?, பெரும்பாலான விடை இல்லை என்றே கூறப்படுகிறது. ஏனெனில் இதற்கு முன்னதாக ஐபோன் 13, ஐபோன் 12 போன்ற ஆப்பிள் ஸ்மார்ட்போன்கள் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டாலும், இந்திய சந்தைகளில் குறைவான விலைக்கு விற்பனை செய்யப்படாததை நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

Also Read : வாட்ஸ்அப் காலில் இனி இது இருக்காதா.? விரைவில் வருகிறது புதிய அப்டேட்.!

ராய்ட்டர்ஸின் அறிக்கையின்படி, நாட்டில் அதிகரித்து வரும் புவிசார் அரசியல் பதட்டங்கள் மற்றும் கடுமையான கொரோனா லாக்டவுன் நடைமுறைகள் காரணமாக ஐபோன் உற்பத்தியை பிற நாடுகளிலும் விரிவுபடுத்த அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Also Read : ஆண்ட்ராய்டு 13 உடன் வெளியாக உள்ள ரியல்மி... எப்போது தெரியுமா.?

ஆய்வாளர் ஜே.பி.மோர்கன் ஆப்பிள் 2022 இன் பிற்பகுதியில் இருந்து ஐபோன் 14 உற்பத்தியில் சுமார் 5 சதவீதத்தை இந்தியாவிற்கு மாற்றக்கூடும், இது சீனாவிற்கு அடுத்தபடியாக உலகின் இரண்டாவது பெரிய ஸ்மார்ட்போன் சந்தையாக இந்தியாவை மாற்றும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Published by:Selvi M
First published:

Tags: Apple iphone, Technology