ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

சென்னையில் தயாரிக்கப்படும் ஆப்பிள் ஐபோன் 14 ! விலை குறையுமா?

சென்னையில் தயாரிக்கப்படும் ஆப்பிள் ஐபோன் 14 ! விலை குறையுமா?

ஐபோன் 14

ஐபோன் 14

ஐபோன் 14 ஐ இந்தியாவில் தயாரிப்பதன் மூலம், ஆப்பிள் தயாரிப்பின் இறக்குமதி வரியில் 20 சதவீதத்தை சேமிக்க முடியும், இதனால் இந்த மாடலின் விலை குறையலாம்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai |

ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 14 ஐ இந்தியாவில் சென்னைக்கு அருகில் உள்ள ஃபாக்ஸ்கான் ஆலையில் தயாரிக்க உள்ளதை உறுதி செய்துள்ளது. உள்நாட்டில் தயாரிப்பதால் ஐபோன் 14 இந்த விலை குறையுமா என்ற கேள்வி எழுந்து வருகிறது.

இந்தியாவில் முதன் முறையாக 2017 இல் ஆப்பிள் நிறுவனம், பெங்களூரில் உள்ள விஸ்ட்ரானின் தொழிற்சாலையில் ஆப்பிள் ஐபோன் SE உருவாக்கத் தொடங்கியது.

iPhone SEக்குப் பிறகு, iPhone 6S, iPhone 11, 12 மற்றும் 13 முதலிய மாடல்கள் உருவாக்கப்பட்டது. இப்பொழுது புதிய மேட்-இன்-இந்திய ஐபோன் 14 தமிழ்நாட்டின் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஃபாக்ஸ்கான் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட உள்ளது. iPhone 14 ஆனது இந்தியாவில் தயாரிக்கப்படும் ஆறாவது iPhone ஆகும்.

ஐபோன் வகைகளில் ப்ரோ அல்லது ப்ரோ மேக்ஸ் சீரிஸ் போன்ற எந்த ஒரு சிறந்த ஐபோன்களையும் ஆப்பிள் இன்னும் இந்தியாவில் தயாரிக்கவில்லை. மேலும், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஐபோன்கள் இந்தியாவில் உள்நாட்டு விற்பனைக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளது.

ஆப்பிளின் iphone 14 சீரிஸ் அறிமுகத்திற்கு பின் விலை குறைக்கப்பட்ட iPhone 12 மற்றும் iPhone 13!

குபெர்டினோவை தளமாகக் கொண்ட தொழில்நுட்ப நிறுவனமானது கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ஐபோன் மாடலை சீக்கிரமே அசெம்பிள் செய்யத் தொடங்கியுள்ளது. 2025 ஆம் ஆண்டிற்குள் ஆப்பிள் அதன் மொத்த ஐபோன் உற்பத்தி வரிசையில் 25 சதவீதத்தை இந்தியாவிற்கு மாற்ற விரும்புகிறது என்று அதன் செய்தி அறிக்கைகள் தெரிவிக்கின்றன. ஐபோன் 14 உற்பத்தியை இந்தியாவில் தொடங்குவதன் மூலம், இந்த இலக்கை அடைய முடியும் என்று நம்புகிறது.

அறிக்கைகளின்படி,  ஐபோன் 14 இன் உள்ளூர் உற்பத்தியானது இந்திய அரசாங்கத்தின் உற்பத்தி-இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை (பிஎல்ஐ) திட்டத்திற்கு நேரடியான பிரதிபலிப்பாகும்.

ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் ஐபோன் மாடல்களை அசெம்பிள் செய்ய விஸ்ட்ரான், ஃபாக்ஸ்கான் மற்றும் பெகாட்ரான் ஆகிய மூன்று கூட்டாளர்களுடன் இணைந்து செயல்படுகிறது. ஐபோன் 14 ஐ இந்தியாவில் தயாரிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் என்று நிறுவனம் ஒரு அதிகாரப்பூர்வ அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. புதிய ஐபோன் 14 வரிசை புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் முக்கியமான பாதுகாப்பு திறன்களை அறிமுகப்படுத்துகிறது.

மனிதனைப் போலவே வாசம் கண்டறியும் கூகுள் செயற்கை நுண்ணறிவு !

இந்த மாத தொடக்கத்தில்  ஐபோன் 14 இந்தியாவில் ரூ.79,900 என்ற  விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த மாடல் இந்தியாவில் தயாரிக்கப்படும் போது விலை குறையுமா என்ற கேள்வி மக்களிடையே எழுந்து வருகிறது.

ஐபோன் 14 ஐ இந்தியாவில் தயாரிப்பதன் மூலம், ஆப்பிள் தயாரிப்பின் இறக்குமதி வரியில் 20 சதவீதத்தை சேமிக்க முடியும், இதனால் இந்த மாடலின் விலை குறையலாம். ஆனால் உள்ளூர் சந்தைக்கான உலகளாவிய விலையை ஆப்பிள் குறைப்பது அரிது. முன்னதாக, ஆப்பிள் ஐபோன் 12 மற்றும் ஐபோன் 13 ஆகிய மாடல்கள் உள்நாட்டில் அசெம்பிள் செய்யப்பட்ட போதும் அவற்றின் விலைகளை அதிகாரப்பூர்வமாக குறைக்கவில்லை.

இருப்பினும், நிறுவனம் அமேசான் மற்றும் பிளிப்கார்ட் போன்ற மூன்றாம் தரப்பு தளங்களில் தள்ளுபடி சலுகைகளை வழங்க சில வங்கிகளுடன் கூட்டு சேர்ந்து பணியாற்றியது. இப்போது, ​​இது ஐபோன் 14 க்கும் அதே போன்ற வாய்ப்புகள் இருக்கலாம். ஆனால், இதுவரை எதுவும் உறுதி செய்யப்படவில்லை.

Published by:Ilakkiya GP
First published:

Tags: Apple iphone, Chennai, IPhone