Home /News /technology /

இனி மாஸ்க் அணிந்திருந்தாலும் கூட ஃபேஸ் ஐடி வேலை செய்யும் - எப்படி? எந்தெந்த மாடல்களில்?

இனி மாஸ்க் அணிந்திருந்தாலும் கூட ஃபேஸ் ஐடி வேலை செய்யும் - எப்படி? எந்தெந்த மாடல்களில்?

ஃபேஸ் ஐடி

ஃபேஸ் ஐடி

மாஸ்க் உடன் கூடிய ஃபேஸ் ஐடிக்கான புதிய அல்காரிதங்களை ஆப்பிள் உருவாக்கியுள்ளது.

10-த் ஜெனரேஷனில் இருந்து ஆப்பிள் ஐபோன்கள், டச் ஐடி அல்லது வழக்கமான ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் இல்லாமல் வெளி வருகின்றன. இந்த இடத்தில், ஃபேஸ் ஐடி (FaceID) எனப்படும் முகம் சார்ந்த பயோமெட்ரிக் அம்சத்தை மட்டுமே நீங்கள் நம்பியிருக்க வேண்டும்.

மேலும் ஆப்பிள் நிறுவனம் அதன் செல்பீ கேமராவுடன் பல சென்சார்களைச் சேர்த்தது, இது ஐபோன்களில் நாட்ச் டிசைனை தக்கவைத்து கொள்வதற்கும் வழிவகுத்தது.

இப்போது ​​​​2020 ஆம் ஆண்டுக்கு பிறகு, கோவிட்-19 தொற்றுநோய் ஆனது மக்களை மாஸ்க்குகள் அணிவதை கட்டாயப்படுத்தி உள்ளதால், ஃபேஸ் ஐடி கடந்து செல்வதற்கு முகக்கவசம் ஒரு பெரிய தடையாக மாறி உள்ளது.

இறுதியாக ஆப்பிள் நிறுவனமும், குறிப்பிட்ட தடைக்கு தீர்வளிக்கும் நோக்கத்தின் கீழ் ஐஓஎஸ்-இல் சில மாற்றங்களைச் செய்ய முடிவு செய்தது. இந்த மாற்றங்கள் இன்னும் வெளியிடப்படாத ஐஓஎஸ் 15.4 வெர்ஷனில் வருகின்றன. இந்த அப்டேட்டின் வழியாக, ஐபோன் யூசர்கள் தங்கள் ஐபோன்களில் உள்ள ஃபேஸ் ஐடியை மாஸ்க்குகளை அணிந்து கொண்டே பயன்படுத்தி போனை அன்லாக் செய்ய அனுமதிக்கும்.

மாஸ்க்குகளை அணிந்திருக்கும் போதும் எந்தெந்த ஐபோன் மாடல்களில் ஃபேஸ் ஐடி வேலை செய்யும்?

ஐஓஎஸ் 15.4 வெர்ஷன் ஆனது பரந்த அளவிலான ஐபோன்களுக்கு வெளிவரும் என்றாலும் கூட, ஃபேஸ் ஐடி வித் ஏ மாஸ்க் அம்சமானது ஐபோன் 12 சீரீஸ் மற்றும் அதற்கு பிந்தைய மாடல்களில் வேலை செய்யும் என்று ஆப்பிள் தெரிவித்துள்ளது. எனவே, உங்களிடம் ஐபோன் எக்ஸ், எக்ஸ்ஆர் அல்லது ஐபோன் 11 சீரீஸ் மாடல்கள் இருந்தால், உங்களுக்கு போதுமான அதிர்ஷ்டம் இல்லை.

மாஸ்க் அணிந்திருந்தாலும் கூட ஐபோன் உங்களை எப்படி அங்கீகரிக்கும்?

மாஸ்க் உடன் கூடிய ஃபேஸ் ஐடிக்கான புதிய அல்காரிதங்களை ஆப்பிள் உருவாக்கியுள்ளது, இதன் கீழ் ஒரு ஐபோன் யூசர், மாஸ்க் அணிந்து இருந்தாலும் கூட அவரின் கண் பகுதியின் அடிப்படையில் அங்கீகாரம் வழங்கப்படும். மேலும் இந்த "ஃபேஸ் ஐடி வித் ஏ மாஸ்க்" அம்சமானது வழக்கமான ஃபேஸ் ஐடியை விட குறைவான பயோமெட்ரிக் தகவலைப் பயன்படுத்துவதால், ஒரு யூசரின் முழு முகம் தெரியாத போது அவரை எளிதில் அடையாளம் காண முடியாத சூழ்நிலைகள் உருவாகலாம். அந்த நிகழ்வில், ஒரு யூசர் தனது பாஸ்கோட்-ஐ உள்ளிட வேண்டும்.

மாஸ்க் உடன் கண் கண்ணாடியும் அணிந்திருந்தால் ஃபேஸ் ஐடி வேலை செய்யுமா?

மாஸ்க் உடன் மட்டுமின்றி இந்த அம்சம் கண் கண்ணாடிகள் மற்றும் பல சன்கிளாஸ்களுடன் வேலை செய்யும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக ஆப்பிள் கூறுகிறது. 'ஃபேஸ் ஐடி வித் ஏ மாஸ்க்' என்கிற அம்சமானது அங்கீகரிப்பதற்காக கண் பகுதியைச் சுற்றியுள்ள தனித்துவமான அம்சங்களை எடுத்துக்கொள்கிறது, இதன் கீழ் ஐபோன் யூசர்கள் தங்கள் பல்வேறு கண்ணாடிகளை ரிஜிஸ்டர் செய்யும் போது சிறந்த முடிவுகளைப் பெறுவார்கள்.

Also read... காதலர் தினம் 2022: சிங்கிளாக இருப்பவர்கள் முயற்சிக்க வேண்டிய சில ஐபோன் டேட்டிங் ஆப்ஸ்கள்...!

வழக்கமான ஃபுல் ஃபேஸ் ஐடியுடன் ஒப்பிடும்போது ஃபேஸ் ஐடி வித் ஏ மாஸ்க் அம்சம் குறைவான பாதுகாப்பையே வழங்குமா?

ஃபுல் ஃபேஸ் ஐடியைப் போலவே, மாஸ்க் அணிந்த யாரோ ஒரு நபர் ஃபேஸ் ஐடி வித் ஏ மாஸ்க் அம்சத்தினை கொண்ட உங்கள் ஐபோனை அன்லாக் செய்வது தோராயமாக 1,000,000 இல் 1 முறை நடக்கலாம் என்று ஆப்பிள் கூறுகிறது.

இந்த அம்சம் ஐபேட்களிலும் வருமா?

தற்போது வரை, ​​ஆப்பிள் ஐபோன்கள் மட்டுமே மாஸ்க் உடனான முகத்தை அடையாளம் காணும் ஃபேஸ் ஐடி ஆதரவை பெறுகிறது. ஐபாட்கள் இதே அம்சத்தைப் பெறுமா இல்லையா என்பது பற்றிய தகவல்கள் எதுவும் இல்லை.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Face mask, IPhone

அடுத்த செய்தி