• HOME
  • »
  • NEWS
  • »
  • technology
  • »
  • நாளை புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்தும் ஆப்பிள் நிறுவனம் - AirPods 3 வெளிவருமா?

நாளை புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்தும் ஆப்பிள் நிறுவனம் - AirPods 3 வெளிவருமா?

ஆப்பிள் ஏர்போட்ஸ் 3

ஆப்பிள் ஏர்போட்ஸ் 3

AirPods 3-யானது, AirPods Pro போன்றே ஒத்த வடிவமைப்பை கொண்டுள்ளது என்று கூறப்படுகிறது.

  • Share this:
அடுத்த தலைமுறை ஆப்பிள் ஏர்போட்ஸ் 3 விரைவில் வெளியாகும் என பல மாதங்களாகவே தகவல்கள் பரவி வருகின்றன. இந்நிலையில் மே 18 அன்று ஆப்பிள் நிறுவனம் தனது பல புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பிடத்தக்க வகையில், செவ்வாய்க்கிழமைகளில் ஆப்பிள் நிறுவனம் தனது புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்துவதாக நிறுவனத்தின் செயல்பாடுகளை தொடர்ந்து கவனித்து வருவோர் மூலம் அறியப்படுகிறது.

எனவே செய்வாய்க்கிழமையான மே 18 ஆப்பிள் தயாரிப்புகள் அறிமுகம் ஆக கூடிய வாய்ப்பை உறுதிப்படுத்துகின்றன. இதில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் ஆப்பிள் ஏர்போட்ஸ் 3 சாதனமும் இருக்கும் என்று நம்பப்படுகிறது. இந்த தகவலை பிரபல யூடியூபரான லூக் மியான் ஆப்பிள் ட்ராக்கிற்கு அளித்த பேட்டியில் பிரத்தியேக விவரங்களை பகிர்ந்து கொண்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு மற்றும் iOS-க்கான மியூசிக் ஸ்ட்ரீமிங் app-ற்கான ஆப்பிள் மியூசிக் ஹைஃபை மியூசிக் டைரையும் நிறுவனம் வெளியிடக்கூடும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

இந்த புதிய ஸ்ட்ரீமிங் பிளான் சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்க டோல்பி அட்மோஸ் மற்றும் டோல்பி ஆடியோ போன்ற மேம்பட்ட ஆடியோ வடிவங்களைக் கொண்டுவரும் என்று தெரிவிக்கப்படுகிறது. முன்னர் வெளியான தகவல்களின் படி Apple AirPods 3-யானது, AirPods Pro போன்றே ஒத்த வடிவமைப்பை கொண்டுள்ளது என்று கூறப்படுகிறது. ஆனால் அரை காது வடிவமைப்பு டிசைனில் வெளிவரும் படத்தில் இதில் நிச்சயம் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேக்ஷன்தொழில்நுட்பம் கொடுக்கப்படும் என்றும் தகவல்கள் கூறுகின்றன. மேலும் இந்த ட்ரூ வயர்லெஸ் ஸ்டீரியோ இயர்பட்ஸ், AirPods Pro-வுடன் ஒப்பிடும்போது இன்டர்சேஞ்ஜபிள் டிப்ஸ்  மற்றும் சிறிய சார்ஜிங் கேஸுடன்  வரக்கூடும் என்று தெரிகிறது.

 

AlsoRead:கோவிட்-19 லாக்டவுன்: வாரன்ட்டி, சர்வீஸ் காலத்தை நீட்டித்துள்ள வாகன நிறுவனங்கள்!

சிறந்த ஆடியோ தரத்திற்காக ஏர்போட்ஸ் புரோவின் சிஸ்டம்-இன்-பேக்கேஜ் (சிஐபி- SiP) வடிவமைப்பை கொண்டுவருவதாக கூறப்படுகிறது. Apple AirPods 3-ல் மேம்பட்ட Siri ஒருங்கிணைப்பும் இருக்கலாம். அதே போல ஆப்பிள் மியூசிக் ஹை-ஃபை அல்லது ஹை-ஃபிடிலிட்டி (High-Fidelity ) ஆடியோவைப் பொறுத்தவரை அமெரிக்காவில் 9.99 டாலர் செலவாகும். இது நிறுவனத்தின் ஸ்டாண்டர்ட் ஆப்பிள் மியூசிக் சந்தாவுக்கு சமம். High Fidelity audio என்பது ஸ்டீரியோ தரத்திலிருந்து வேறுபட்டது. இது இரண்டு சேனல்களைப் பயன்படுத்தும் ஒலியை பதிவு செய்கிறது அல்லது மீண்டும் உருவாக்குகிறது.

ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட நிலையில் ஒலியைக் கண்டுபிடிக்கும் மாயையை உருவாக்கும் வகையில் அசல் ஒலியின் ஒரு பகுதியை இயக்குகின்றன. ஒரிஜினல் சிக்கனல்களின் சிறிய அளவிலான மாற்றத்துடன் கேட்கக்கூடிய முழு அளவிலான அதிர்வெண்களை வழங்குவதால், ஹை-ஃபை ஆடியோ மற்ற ஆடியோ வடிவங்களை விட உயர்ந்ததாக கருதப்படுகிறது. தற்போது ஆப்பிள் மியூசிக் உயர் தெளிவுத்திறன் கொண்ட ஆடியோ டைரை (high-resolution audio tier) வழங்கவில்லை. அதே போல ஆப்பிள் இன்னும் விவரங்களை உறுதிப்படுத்தவில்லை. இதனிடையே சமீபத்தில் Spotify தனது பிரீமியம் premium Hi-Fi tier-ஐ அறிவித்தது, இது இசை கேட்பவர்களுக்கு பாடல்களில் அதிக ஆழத்தையும் தெளிவையும் அனுபவிக்க அனுமதிக்கிறது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Tamilmalar Natarajan
First published: