Home /News /technology /

சர்வீஸின் போது iPhone-களில் எந்த பார்ட்ஸ்கள் மாற்றப்பட்டுள்ளன.... விவரங்களை காட்டும் புதிய அம்சம்!

சர்வீஸின் போது iPhone-களில் எந்த பார்ட்ஸ்கள் மாற்றப்பட்டுள்ளன.... விவரங்களை காட்டும் புதிய அம்சம்!

iPhone

iPhone

ஒருவேளை யூஸர்களின் ஆப்பிள் டிவைஸில் ஒரிஜினல் பார்ட்களை பயன்படுத்தவில்லை என்றால் Unknown part என காண்பிக்கும். மேலும் அந்த பார்ட் ஏற்கனவே பயன்படுத்தப்பட்டதா அல்லது எதிர்பார்த்தபடி செயல்படவில்லையா என்பதையும் இந்த அம்சம் காண்பிக்கும் என்று ஆப்பிள் கூறி இருக்கிறது.

மேலும் படிக்கவும் ...
  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :
தகுதியான குறிப்பிட்ட ஐபோன் மாடல்களுக்கு iOS 15.2 அப்டேட்டை ரிலீஸ் செய்ய ஆப்பிள் நிறுவனம் தயாராகி வருகிறது. முக்கிய அப்டேட்டுடன் கிடைக்கும் பெரும்பாலான அம்சங்கள் பல்வேறு பீட்டா ரிலீஸ்களில் ஏற்கனவே காணப்பட்டுள்ளன. இந்நிலையில் தற்போது iOS 15.2-உடன் iPhone-களுக்கான புதிய 'பார்ட்ஸ் அன்ட் சர்வீஸ் ஹிஸ்ட்ரி "parts and service history" அம்சத்தை ஆப்பிள் வெளியிடுகிறது.

தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள் அதனது அதிகாரப்பூர்வ வெப்சைட்டில் ஒரு சப்போர்ட் டாக்குமெண்ட்டில் இந்த புதிய அம்சம் பற்றிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. இதன் படி iPhone-களின் செட்டிங்ஸில் ஆப்பிள் நிறுவனம் "parts and service history" என்ற செக்ஷனை சேர்க்கிறது

ஐபோனின் 'parts and service history' அம்சம் என்றால் என்ன?

பெயர் குறிப்பிடுவது போல குறிப்பிட்ட டிவைஸ் இதற்கு முன்பு பழுதுபார்க்கப்பட்டதா மற்றும் உண்மையான டிஸ்ப்ளே அல்லது பேட்டரி பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பதை 9to5Mac வழியே யூஸர்களுக்கு தெரிவிக்கும் இந்த புதிய அம்சத்தை தான் ஐபோன்களில் ஆப்பிள் சேர்க்க உள்ளது. பேட்டரி, டிஸ்ப்ளே அல்லது கேமரா மாற்றப்பட்டிருந்தால் தங்கள் ஐபோனின் parts and service history-ஐ பார்க்க யூஸர்களை இந்த அம்சம் அனுமதிக்கிறது.

ALSO READ |  இந்தியாவில் Jupiter 125 அறிமுகப்படுத்தப்பட்ட சிறிது நேரத்திலேயே Jupiter 110-ன் விலையை உயர்த்திய TVS!

இது தொடர்பாக சப்போர்ட் டாக்குமெண்ட்டில் ஆப்பிள் நிறுவனம் கூறி இருப்பதாவது, ஐஓஎஸ் 15.2 அல்லது அதற்கு பிறகான வெர்ஷன்களில் இயங்கும் ஐபோன் மாடல்களில் ஸ்மார்ட் ஃபோனின் பேட்டரி, டிஸ்ப்ளே மற்றும் கேமரா போன்ற எந்த பார்ட்டும் ரீபிளேஸ்டு செய்யப்பட்டிருந்தால் அதாவது மாற்றப்பட்டிருந்தால் அதை யூஸர்களுக்கு parts and service history அம்சம் காண்பிக்கும். இந்த அம்சம் யூஸர்களுக்கு அவர்களின் டிவைஸ்களை பற்றிய கூடுதல் தகவல்களை வழங்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சுருக்கமாக சொன்னால் ஐபோன் யூஸர்கள் இதற்கு முன் தங்கள் டிவைஸ்களை சர்வீஸ் சென்டரில் கொடுத்து சர்வீஸ் செய்திருப்பின், அப்போது என்னென்ன பாகங்கள் மாற்றப்பட்டன, என்ன ரிப்பேர் செய்யப்பட்டுள்ளது என்பதை யூசர் தெரிந்து கொள்ள parts and service history அம்சம் உதவுகிறது. அதே போல யூஸர்கள் தங்கள் ஐபோனை இதுவரை சர்வீஸிற்கு கொடுத்ததில்லை என்றால் இந்த அம்சம் அவர்களுக்கு கிடைக்காது என்று கூறப்பட்டு உள்ளது. இந்த அம்சத்தை அணுக யூஸர்கள்Settings > General > About என்பதற்கு செல்லலாம்.

ALSO READ |  திருமண மண்டபத்தில் மணப்பெண்ணின் அதிரடி கேள்வி – மணமகனின் வேடிக்கையான பதில்

ஆப்பிளின் சப்போர்ட் டாக்குமென்டின் படி iPhone XR, XS, XS Max மற்றும் அதற்குப் பிறகு, iPhone SE (2nd generation) உள்ளிட்ட டிவைஸ்களை கொண்டுள்ள யூஸர்கள் தங்கள் டிவைஸின் பேட்டரி மாற்றப்பட்டுள்ளதா என்பதை பார்க்கலாம். ஐபோன் 11 மாடல்கள், ஐபோன் 12 மாடல்கள் மற்றும் ஐபோன் 13 மாடல்களின் யூஸர்கள் தங்கள் டிவைஸின் பேட்டரி அல்லது டிஸ்ப்ளே மாற்றப்பட்டுள்ளதா என்பதை பார்க்கலாம். அதே போல ஐபோன் 13 மாடல்களின் யூஸர்கள் பேட்டரி, டிஸ்ப்ளே அல்லது கேமரா மாற்றப்பட்டுள்ளதா என்பதை பார்க்கலாம். ஆப்பிள் பாகங்கள் மற்றும் டூல்களை பயன்படுத்தி டிவைஸ் சரி செய்யப்பட்டிருந்தால், யூஸர்கள் history -ல் Genuine Apple Part என்பதை பார்க்க முடியும். சர்வீஸ் தேதி போன்ற கூடுதல் தகவல்களை பார்ட்-ஐ Tap செய்வதன் மூலம் யூஸர்கள் பார்க்கலாம்.

ஒருவேளை யூஸர்களின் ஆப்பிள் டிவைஸில் ஒரிஜினல் பார்ட்களை பயன்படுத்தவில்லை என்றால் Unknown part என காண்பிக்கும். மேலும் அந்த பார்ட் ஏற்கனவே பயன்படுத்தப்பட்டதா அல்லது எதிர்பார்த்தபடி செயல்படவில்லையா என்பதையும் இந்த அம்சம் காண்பிக்கும் என்று ஆப்பிள் கூறி இருக்கிறது.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: Apple, IPhone

அடுத்த செய்தி