• HOME
  • »
  • NEWS
  • »
  • technology
  • »
  • 2 லட்சம் கோடி டாலர்கள் - புதிய சாதனையை நோக்கி ஆப்பிள்

2 லட்சம் கோடி டாலர்கள் - புதிய சாதனையை நோக்கி ஆப்பிள்

ஆப்பிள் ஆப் ஸ்டோரிலிருந்து 4,500 கேம்கள் நீக்கம்.

ஆப்பிள் ஆப் ஸ்டோரிலிருந்து 4,500 கேம்கள் நீக்கம்.

2 லட்சம் கோடி அமெரிக்க டாலர்கள் சந்தை மதிப்பை கொண்ட முதல் நிறுவனமாக அடுத்த 4 ஆண்டுகளில் ஆப்பிள் நிறுவனம் மாறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
    உலக சந்தையில் சவுதி அரேபியாவின் பெட்ரோலிய நிறுவனமான அராம்கோ, 1 லட்சத்து 68 ஆயிரம் கோடி டாலர் மதிப்புடன் முதலிடத்தில் உள்ளது. இதற்கு அடுத்ததாக மைக்ரோசாஃப்ட் நிறுவனம் 1 லட்சத்து 35 ஆயிரம் கோடி டாலர்களுடன் இரண்டாவது இடத்திலும், ஆப்பிள் நிறுவனம் 1 லட்சத்து 28 ஆயிரம் கோடி டாலர்களுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளன. இதற்கு அடுத்த இடங்களை அமேசான், ஆல்பாபெட், பேஸ்புக், அலிபாபா ஆகிய நிறுவனங்கள் பிடித்துள்ளன

    அமெரிக்காவின் கலிஃபோர்னியாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஆப்பிள் நிறுவனம், ஐபோன் சந்தையில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. மேலும், எலெக்ட்ரானிக் உபகரணங்கள், மென்பொருள்கள், ஆன்லைன் சேவைகள் ஆகியவற்றை வழங்கி வருகிறது.

    ஒரு லட்சம் கோடி டாலர் சந்தை மதிப்பைக் கொண்ட முதல் சர்வதேச நிறுவனம் என்ற பெருமையை 2018-ம் ஆண்டில் ஆப்பிள் நிறுவனம் பெற்றது. இது அடுத்த 4 ஆண்டுகளில் பெருமளவில் வளர்ச்சி பெறும் என்று சந்தை வல்லுநர்கள் கணித்துள்ளனர்.

    2024-ம் ஆண்டில் 2 லட்சம் கோடி டாலர் மதிப்பை கொண்ட முதல் நிறுவனம் என்ற அடுத்த சாதனையை படைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

    இதற்கு அணிகலன்கள் மற்றும் சேவைகள் துறை முக்கிய பங்கு வகிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அடுத்த 4 ஆண்டுகளில் ஆப்பிள் கடிகாரம் போன்றவற்றால் அணிகலன்கள் பிரிவு 6 ஆயிரம் கோடி டாலர்கள் வரையும், சேவை வர்த்தகத்தில் 10 ஆயிரம் கோடி வரையும் வளர்ச்சி பெறும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

    கடந்த மார்ச் மாதத்துடன் முடிந்த காலாண்டில் சேவைப்பிரிவில் இதுவரை இல்லாத வகையில், ஆயிரத்து 330 கோடி டாலர்கள் வருவாய் கிடைத்துள்ளது.

    ஆப்பிள் டிவி பிளஸ், ஆப்பிள் ஆர்கேடு, ஆப்பிள் நியூஸ் பிளஸ் உள்ளிட்டவற்றின் மூலம் சேவைத் துறையில் நல்ல வளர்ச்சி கிடைக்கும் என்று ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி லூகா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    மேலும், 4 ஆண்டுகளுக்குள் பொதுமக்களிடமிருந்து 100 கோடி பங்குகளை திரும்ப வாங்கிக் கொள்ளும் என்றும், மீதமுள்ள பங்குகள் ஒவ்வொன்றின் மதிப்பும் 550 டாலர்களாக இருக்கும்போது, 2 லட்சம் கோடி டாலர் சந்தை மதிப்பை அடைய முடியும் என்றும் பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர்.






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankar
    First published: