’திருடனாக சித்தரித்துவிட்டது’ - ஆப்பிள் நிறுவனத்திடம் ரூ.7 ஆயிரம் கோடி இழப்பீடு கேட்டு வழக்கு

ஒருவேளை, உண்மையான திருடன் ஆப்பில் ஸ்டோரில் என்னுடைய அடையாள அட்டையிலுள்ள தகவல்களைப் பயன்படுத்தியிருக்கலாம்.

news18
Updated: April 23, 2019, 7:08 PM IST
’திருடனாக சித்தரித்துவிட்டது’ - ஆப்பிள் நிறுவனத்திடம் ரூ.7 ஆயிரம் கோடி இழப்பீடு கேட்டு வழக்கு
கோப்புப்படம்
news18
Updated: April 23, 2019, 7:08 PM IST
ஆப்பிள் நிறுவனம், என்னுடைய புகைப்படத்தை திருடன் என்று தவறுதலாக பதிவு செய்துவிட்டது என்று கூறி 7,000 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு அமெரிக்காவைச் சேர்ந்த 18 வயது மாணவர் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

அமெரிக்காவின் நியூயார்கைச் சேர்ந்த 18 வயது மாணவர் அவுஸ்மேன் பா. அவர், ஆப்பிள் நிறுவனத்திடம் 7,000 கோடி ரூபாய் இழப்பீடு கோரி வழக்குத் தொடர்ந்துள்ளார். அவரது மனுவில், ‘கடந்த ஆண்டு நவம்பர் 18-ம் தேதி, என்னுடைய வீட்டிலிருந்த என்னை ஆப்பிள் ஸ்டோரிலிருந்து திருடியதாக காவல்துறையினர் கைது செய்தனர்.

அந்த கைதாணையில் இருந்த போட்டோ என்னுடைய முகத்தை ஒத்திருக்கவில்லை. அதில், ஜூன் மாதம் பாஸ்டன் நகரில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அந்தச் சம்பவம் நடைபெற்ற பொழுது, மான்ஹாட்டன் பகுதியில் நான் நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தேன். முன்னதாக, நான் என்னுடைய புகைப்படம் இல்லாத அடையாள அட்டையை தொலைத்திருந்தேன்.


ஒருவேளை, உண்மையான திருடன் ஆப்பில் ஸ்டோரில் என்னுடைய அடையாள அட்டையிலுள்ள தகவல்களைப் பயன்படுத்தியிருக்கலாம். ஆப்பிள் முகம் அடையாளம் காணும் அமைப்பில் (Apple's facial-recognition system) உண்மையான திருடனுக்கு என்னுடைய பெயரை தவறுதலாக பயன்படுத்தப்பட்டிருக்கலாம். அந்தத் தகவலை, திருடர்களை கண்டுபிடிக்கும் ஸ்டோரில் ஆப்பிள் நிறுவனம் பயன்படுத்தியுள்ளது.

காவல்துறையால் கைது செய்யப்பட்ட நான், தவறான குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க கட்டாயப்படுத்தப்பட்டேன். அதனால், மிகவும் மன உளைச்சல் அடைந்துள்ளேன்’ என்று குறிப்பிட்டுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக பதிலளிக்க ஆப்பிள் நிறுவனம் மறுத்துள்ளது.

Also see:

Loading...

First published: April 23, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...