ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

கைகோர்க்கும் டாடா குரூப் - ஆப்பிள் நிறுவனம்.. விரைவில் நாடு முழுவதும் சிறிய ஆப்பிள் ஸ்டோர்ஸ்..

கைகோர்க்கும் டாடா குரூப் - ஆப்பிள் நிறுவனம்.. விரைவில் நாடு முழுவதும் சிறிய ஆப்பிள் ஸ்டோர்ஸ்..

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

இந்தியாவில் சுமார் 160 Apple Premium Reseller stores இருப்பதாக அறிக்கைகள் கூறுகின்றன. ஆப்பிளின் முதல் கம்பெனி ஓன்ட் ஃபிளாக்ஷிப் ஸ்டோர் விரைவில் மும்பையில் திறக்கப்பட உள்ள நிலையில், ஆப்பிள்-டாடா பார்ட்னர்ஷிப் பற்றிய இந்த தகவல் வெளியாகி இருக்கிறது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

விரைவில் நீங்கள் பெரிய மால்கள் அல்லது ஹை-ஸ்ட்ரீட் ஏரியாக்களில் பார்க்க போகும் சிறிய அளவிலான ஆப்பிள் ஸ்டோர்ஸ், சுமார் 150 ஆண்டுகள் பழமையான டாடா குரூப் நிறுவனத்தினுடையதாக இருக்கலாம். ஆம், நாடு முழுவதும் சிறிய பிரத்யேக ஆப்பிள் ஸ்டோர்களை தொடங்க டாடா குரூப் திட்டமிட்டுள்ளது.

ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் தனது தயாரிப்புகளின் விற்பனையை அதிகரிப்பதில் கவனம் செலுத்துகிறது. மேலும் தனது உற்பத்தி திறனை விரிவுபடுத்தவும் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இதற்காக நாட்டில் உள்ள விஸ்ட்ரான், ஃபாக்ஸ்கான் மற்றும் பெகாட்ரான் ஆகிய மூன்று உற்பத்தியாளர்களிடமும் அடுத்த 2 ஆண்டுகளில் உற்பத்தியை மும்மடங்காக உயர்த்துமாறு ஆப்பிள் நிறுவனம் கூறி இருக்கிறது. ஆப்பிளின் இந்த நடவடிக்கைகளின் மூலம் நம் நாடு இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஐபோன்களை ஏற்றுமதி செய்ய கூடும்.

இந்த நிலையில் தான் விரைவில் சிறிய பிரத்யேக ஆப்பிள் ஸ்டோர்களை திறக்க டாடா குரூப் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தலா 500-600 சதுர அடி பரப்பளவில் நாடு முழுவதும் சுமார் 100 சிறிய பிரத்யேக ஆப்பிள் ஸ்டோர்களை திறக்க டாடா குரூப் தயாராகி வருகிறது.

புதிய மற்றும் சிறிய ஆப்பிள் ஸ்டோர்களை நாடு முழுவதும் திறப்பதற்காக டாடாவுக்குச் சொந்தமான இன்ஃபினிட்டி ரீடெய்ல் (Infiniti Retail) நிறுவனத்துடன் இணைந்து செயல்பட ஆப்பிள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக முன்னணி ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

இன்ஃபினிட்டி ரீடெய்ல் நாட்டில் ஏற்கனவே குரோமா ஸ்டோர்ஸ்களை (Croma stores) நடத்தி வருகிறது. பொதுவாக ஆப்பிள் பிரீமியம் ரீசெல்லர் ஸ்டோர்ஸ்கள் 1,000 சதுர அடி பரப்பளவில் அமைந்திருக்கும்.

Read More : சூப்பரா இருக்கே.. பட்ஜெட் விலையில் பக்காவான நோக்கியா ஸ்மார்ட்போன்.!

 ஆனால் டாடா திறக்க திட்டமிட்டுள்ள ஆப்பிள் ஸ்டோர்கள் தலா 500-600 சதுர அடி பரப்பளவில் இருக்கும் என்பதால், ஆப்பிள் பிரீமியம் ரீசெல்லர் ஸ்டோர்களை விட அளவில் சிறியதாக இருக்கும்.

பெரிய ஆப்பிள் ஸ்டோர்கள் மேக்புக்ஸ் மற்றும் ஆப்பிள் நிறுவனத்தின் அனைத்து தயாரிப்புகளையும் விற்பனை செய்து வரும் நிலையில், இந்த சிறிய 100 பிரத்தியேக ஆப்பிள் ஸ்டோர்ஸ்கள் பெரும்பாலும் ஐபாட்ஸ்கள், ஐபோன்கள் மற்றும் வாட்சுகளை மட்டுமே விற்பனை செய்வதில் கவனம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும் ஸ்மார் ஆப்பிள் ஸ்டோர்ஸ் திறக்கும் போது தான் இன்னும் சரியான விற்பனை விவரங்கள் கிடைக்கும்.

தற்போது இந்தியாவில் சுமார் 160 Apple Premium Reseller stores இருப்பதாக அறிக்கைகள் கூறுகின்றன. ஆப்பிளின் முதல் கம்பெனி ஓன்ட் ஃபிளாக்ஷிப் ஸ்டோர் விரைவில் மும்பையில் திறக்கப்பட உள்ள நிலையில், ஆப்பிள்-டாடா பார்ட்னர்ஷிப் பற்றிய இந்த தகவல் வெளியாகி இருக்கிறது.

நாடு முழுவதும் ஆப்பிள் ஸ்டோர்ஸ்களை திறக்கும் நடவடிக்கையின் மூலம், டாடா குரூப் புதிய பார்ட்னர்ஷிப்ஸ் மற்றும் வணிகங்களில் ஈடுபடுவதற்கான முயற்சிகளை விரிவுபடுத்தி இருக்கிறது.

ஆப்பிள் தற்போது நம் நாட்டில் iPhone SE, iPhone 12, iPhone 13 மற்றும் iPhone 14 (பேசிக்) மாடல்களை உற்பத்தி செய்கிறது. மேலும் நாட்டில் விற்கப்படும் அனைத்து ப்ரோ மாடல்களும் இறக்குமதி செய்யப்பட்டவை.

ஆப்பிளின் ஐபோன் உலகளாவிய வருவாய் செப்டம்பர் காலாண்டில் 10% அதிகரித்து 42.6 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.

First published:

Tags: Apple, Apple watch, Technology