சீனாவில் புதிய இணையக் கட்டுப்பாடு: ஆப்பிள் ஆப் ஸ்டோரிலிருந்து 4,500 கேம்கள் நீக்கம்

ஆப்பிள் ஆப் ஸ்டோரிலிருந்து 4,500 கேம்கள் நீக்கம்.

 • Share this:
  ஆப்பிள் நிறுவனம் தனது ஆப் ஸ்டோரிலிருந்து குறைந்தது 4,500 கேம்களை நீக்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவின் புதிய இணைய கொள்கையின் விளைவாக ஆப்பிள் நிறுவனம் இம்முடிவை எடுத்துள்ளது. கடந்த இரண்டு நாட்களில் மட்டும் சுமார் 3,000 கேம்கள் ஆப் ஸ்டாரில் இருந்து நீக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

  சீன அரசின் புதிய இணையக் கட்டுப்பாடு காரணமாக ஆப்பிளின் ஆப் ஸ்டோரில் தங்களின் கேம்களை பதிவேற்றம் செய்யும் முன்பு தயாரிப்பு நிறுவனங்கள் அரசிடம் ஒப்புதல் பெற வேண்டும் என்று விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. வெளிநாட்டு நிறுவனங்கள் உள்நாட்டு நிறுவனத்தோடு ஒருங்கிணைந்துதான் கட்டணம் செலுத்தி விளையாடும் கேம்களை ஆரம்பிக்க முடியும். இல்லையென்றால், அதற்கான உரிமம் கூட வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்படாது.

  ஆப் இன் சீனா எனும் நிறுவனத்தில் சந்தைப்படுத்துதல் துறையில் மேலாளராகப் பணிபுரியும் டோட் குன்ஸ் கூறுகையில், ஜூலை 1ம் தேதி இந்த கட்டுப்பாடு விதிக்கப்பட்ட பிறகு ஏராளமான கேம்கள் சீனாவில் ஆப்பிள் ஸ்டோரிலிருந்து நீக்கப்படுகின்றன. துரதிருஷ்டவசமாக சீனா ஓராண்டு 1,500 கேம்களையே அங்கீகரித்து உரிமம் வழங்கும். உரிமம் பெறுவதற்கும் 6 முதல் 12 மாதங்கள் வரை பிடிக்கும் என்றார்.

  Also see:

  சீனாவில் ஜூலை 1ம் தேதி அன்று சரியாக 1,571 கேம்கள் ஆப் ஸ்டோரிலிருந்து நீக்கப்பட்டன. அதேபோல ஜூலை 2ம் தேதி அன்று 1,805 கேம்களும், 3 அன்று 1,276 கேம்களும் நீக்கப்பட்டன. சீன அரசின் இந்த கடும் இணைய கட்டுப்பாட்டு நடவடிக்கையால் 20,000 ஆப்கள் பாதிக்கப்படும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
  Published by:Rizwan
  First published: