ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

ஐபோன் ஓனர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. சார்ஜ் செய்வது ஈசிதான்.. விவரம் சொன்ன ஆப்பிள்!

ஐபோன் ஓனர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. சார்ஜ் செய்வது ஈசிதான்.. விவரம் சொன்ன ஆப்பிள்!

மாதிரி படம்

மாதிரி படம்

ஒவ்வொரு முறையும் ஒரு டிவைஸை வாங்கும் போது யூஸர்கள் புதிய சார்ஜரை வாங்க தேவையிருக்காது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Chennai, India

  சர்வதேச அளவில் பிரபலமாக உள்ள ஆப்பிள் நிறுவனம் வெகு விரைவில் தனது ஐபோன்களில் USB Type-C கனெக்டரை வழங்க உள்ளது. இந்த அப்டேட் பற்றி தகவல் தெரிவித்துள்ள ஆப்பிள் நிறுவனத்தின் மார்க்கெட்டிங் சீஃப் கிரெக் ஜோஸ்வியாக் எலெக்ட்ரானிக் டிவைஸ்களுக்கான பொதுவான சார்ஜிங் தரத்தை கட்டாயமாக்கும் ஐரோப்பிய யூனியன் சட்டத்தை ஆப்பிள் பின்பற்ற திட்டமிட்டிருப்பதாக கூறியுள்ளார்.

  முன்னதாக ஸ்மார்ட் ஃபோன்கள், டேப்லெட்ஸ், கேமராக்கள், ஹெட்ஃபோன்ஸ், ஹெட்செட்ஸ், இ-ரீடர்ஸ், கீ போர்ட்ஸ், மவுஸ், மொபைல் நேவிகேஷன் சிஸ்டம்ஸ் மற்றும் போர்ட்டபிள் கேம் கன்சோல்ஸ் மற்றும் ஸ்பீக்கர்ஸ்களில் நிலையாக USB Type-C சார்ஜர்கள் கொடுக்க வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் (European Union) சமீபத்தில் ஒரு விதியை நிறைவேற்றியது.

  சமீபத்தில் EU உறுப்பு நாடுகளின் அமைச்சர்கள் பொதுவான சார்ஜர் சட்டத்திற்கு இறுதி ஒப்புதல் அளித்தனர். இதன்படி 2024-ஆம் ஆண்டிற்குள் மொபைல் ஃபோன்கள் மற்றும் டேப்லெட்டுகள் உள்ளிட்ட எலெக்ட்ரானிக் டிவைஸ்கள் USB-C சார்ஜிங்கை ஆதரிக்க வேண்டும். இந்த தரநிலை விதியானது மின்-கழிவை குறைக்க மற்றும் நுகர்வோரின் வாழ்க்கையை எளிதாக்குவதை நோக்கமாக கொண்டது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

  தற்போது கிட்டத்தட்ட அனைத்து ஆண்ட்ராய்டு மொபைல்களும் USB Type-C சார்ஜருடன் வருகின்றன. ஆனால் ஐபோன்கள் மற்றும் ஏர்போட்ஸ்களை சார்ஜ் செய்ய அதன் சொந்த லைட்னிங் போர்ட்டை ஆப்பிள் நிறுவனம் பயன்படுத்தி வருகிறது. இந்நிலையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய விதிகளுக்கு இணங்க ஆப்பிள் நிறுவனம் முடிவு செய்துள்ளது. ஆனால் இந்த அப்டேட் எப்போது அறிமுகப்படுத்தப்படும் என்ற காலக்கெடுவை ஆப்பிள் நிறுவனம் பகிர்ந்து கொள்ளவில்லை. எனினும் பல அறிக்கைகளின்படி, 2024-ஆம் ஆண்டிற்குள் iPhone 15 அல்லது 16 சீரிஸில் USB Type-C சார்ஜிங் ஆப்ஷன் சேர்க்கப்படலாம் என்று தெரிகிறது.

  Read More: அக்டோபர் மாதம் என்றாலே வாட்ஸ்அப்பிற்கு பிரச்சனை தான்.!

   ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய விதிக்கு இணங்குவது பற்றி பேசி இருக்கும் கிரெக் ஜோஸ்வியாக், USB Type-C தொடர்பான விதிக்கு நாங்கள் இணங்கி தான் ஆக வேண்டும், எங்களுக்கு வேறு வழியில்லை என்று வெளிப்படையாக தெரிவித்தார். இந்த மாற்றத்தை செய்தே ஆகவேண்டிய கட்டாயத்தில் ஆப்பிள் இருக்கிறது என்றும் ஜோஸ்வியாக் குறிப்பிட்டு உள்ளார். எப்போது இந்த விதியை அறிமுகப்படுத்துகிறோம் என்று குறிப்பாக சொல்ல முடியவில்லை என்றாலும் காலக்கெடுவான 2024-ஆம் ஆண்டுக்குள் ஆப்பிள் தயாரிப்புகளில் USB Type-C அறிமுகப்படுத்தப்படும் என்றும் குறிப்பிட்டார்.

  Read More: வாட்ஸ்அப்பிற்கு மூடு விழா நடத்திய இந்தியர்கள் - தீபாவளி தான் காரணமாம்!

   இதனிடையே இந்த புதிய விதி பற்றி கூறி இருக்கும் EU, ஒவ்வொரு முறையும் ஒரு டிவைஸை வாங்கும் போது யூஸர்கள் புதிய சார்ஜரை வாங்க தேவையிருக்காது என்பதால் பயனுள்ளதாக இருக்கும் என தெரிவித்துள்ளது. இதனால் புதிய சார்ஜர்களின் உற்பத்தி மற்றும் அப்புறப்படுத்தும் சுமை குறையும் எனவும் ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

  Published by:Srilekha A
  First published:

  Tags: Apple iphone, Technology