ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

மிக்ஸ்டு-ரியாலிட்டி ஹெட்செட்... வேகமெடுக்கும் ஆப்பிள்.... சிறப்பம்சம் என்ன?

மிக்ஸ்டு-ரியாலிட்டி ஹெட்செட்... வேகமெடுக்கும் ஆப்பிள்.... சிறப்பம்சம் என்ன?

ஆப்பிள்

ஆப்பிள்

விர்ச்சுவல், ஆக்மென்ட் மற்றும் மிக்ஸ்டு ரியாலிட்டியை இணைக்கும் ஆப்பிளின் இந்த ஹெட்செட்

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • New Delhi, India

  பல ஆண்டுகள் கழித்து ஆப்பிள் நிறுவனம் தனது மிக்ஸ்டு-ரியாலிட்டி ஹெட்செட்டை உருவாக்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன்படி, ஆப்பிள் நிறுவனம் 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இந்த புதிய வகை ஹெட்செட்டின் பெருமளவிலான உற்பத்தியைத் தொடங்க உள்ளது. இந்த ஹெட்செட் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் உற்பத்தியை தொடங்கலாம் என்று உறுதியாக தெரிய வந்துள்ளது. மேலும், இந்த ஹெட்செட்டின் விலை $2000 டாலருக்கு மேல் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த ஹெட்செட்டின் வரவை எதிர்பார்த்து ஆப்பிள் பிரியர்கள் எப்போதும் போல காத்திருக்கின்றனர்.

  ஆப்பிள் சாதனங்களின் சப்ளையரான பெகாட்ரான் 2023-இன் முதல் காலாண்டின் இறுதியில் இந்த ஹெட்செட்டை பெருமளவில் உற்பத்தி செய்யும் என்கிற தகவலை வெளியீட்டுள்ளது. இதன் ஆரம்ப உற்பத்தி வெளியீடு என்பது குறைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த அறிக்கையின்படி, ஆப்பிளின் மிக்ஸ்டு-ரியாலிட்டி ஹெட்செட்டிற்கான மதிப்பிடப்பட்ட வருடாந்திர ஏற்றுமதிகள் சுமார் 0.7 முதல் 0.8 மில்லியன் யூனிட்கள் இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

  ஆப்பிளின் மிக்ஸ்டு-ரியாலிட்டி ஹெட்செட் 2015 ஆம் ஆண்டிலேயே வடிவமைப்பு செய்யப்பட்டு வந்ததாக அப்போதே தகவல்கள் வந்தன. இந்த ஹெட்செட் ஒரு ஸ்கை கண்ணாடியை போல் இருக்கும். இது "மெஷ் துணிகள், அலுமினியம் மற்றும் கண்ணாடி" ஆகியவற்றால் ஆனது. மேலும் இது குவெஸ்ட் ப்ரோவை விட மெல்லியதாகவும் எடை குறைவாகவும் இருக்கும். அடுத்த ஆண்டு வரவிருக்கும் இந்த ஹெட்செட் ஒரு புதுவித அனுபவத்தை தரக்கூடும் என்று அந்நிறுவனம் கூறியுள்ளது.

  யூசர்களின் விருப்பப்படி கட்டணம் செலுத்த அனுமதிக்கும் வசதியை அறிமுகப்படுத்தும் கூகுள்.!

  இந்த ஹெட்செட்டின் செயல்பாடும் புதுமையானதாகவே இருக்கும். இந்த ஹெட்செட்டைப் போட்டவுடன் ஒருவரின் தனிப்பட்ட கணக்குகளில் எளிதாக உள்நுழைவதற்கு பயனரின் கருவிழிகளை ஸ்கேன் செய்யும். பிறகு ஒரு பிரத்யேக செயலியுடன் இது வரும் என்று கூறப்பட்டுள்ளது. இவற்றில் இரண்டு அதி உயர் தெளிவுத்திறன் கொண்ட 8K டிஸ்ப்ளேக்களைக் கொடுத்துள்ளனர். அதே நேரத்தில் சாதனத்தை இயக்கும் இயக்க முறைமை "rOS" என்று அழைக்கப்படும் மற்றும் ஏற்கனவே உள்ள iOS-ஐ அடிப்படையாக இது கொண்டது.

  விர்ச்சுவல், ஆக்மென்ட் மற்றும் மிக்ஸ்டு ரியாலிட்டியை இணைக்கும் ஆப்பிளின் இந்த ஹெட்செட் பலருக்கும் அதிக ஆர்வத்தை கொடுத்துள்ளது. இது குறித்து ப்ளூம்பெர்க் நிறுவனம் இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஆப்பிள் நிறுவனத்தால் தாக்கல் செய்யப்பட்ட ஹெட்செட் தொடர்பான அமெரிக்க மற்றும் உலகளாவிய சந்தைகளில் வர்த்தக முத்திரைகளைக் கண்டறிந்தது. இந்த மிக்ஸ்டு ரியாலிட்டி ஹெட்செட்டானது மெட்டாவின் குவெஸ்ட் புரோ மற்றும் பிளே ஸ்டேஷன் VR 2-க்கு நேர் எதிராக இருக்கும் என்று தெரிய வந்துள்ளது.

  மேற்கு வங்கத்தில் 5ஜி சேவையை தொடங்கவிருக்கும் ஜியோ… மாற்றங்களின் பட்டியல் வெளியீடு

  மெட்டாவின் குவெஸ்ட் புரோ முதன்முதலில் அக்டோபரில் வெளியிடப்பட்டது மற்றும் சமீபத்தில் $1500-க்கு விற்பனைக்கு வந்தது. மறுபுறம், பிளேஸ்டேஷன் VR 2 அடுத்த ஆண்டு தொடக்கத்தில் $550க்கு கிடைக்கும் என்பது கூடுதல் தகவலாக உள்ளது. எனவே, ஆப்பிளின் மிக்ஸ்டு ரியாலிட்டி ஹெட்செட்டிற்கான போட்டியும் தற்போது அதிகளவில் உள்ளது என்றே செய்தி வட்டாரங்கள் கூறுகின்றன.

  Published by:Srilekha A
  First published:

  Tags: Apple