குழந்தை வன்கொடுமைகளை தவிர்க்க புதுமுயற்சி - போட்டோஸ்களை ஸ்கேன் செய்யும் ஆப்பிள் ஐபோன்கள்!

குழந்தை வன்கொடுமைகளை தவிர்க்க புதுமுயற்சி

எளிமையாகச் சொல்வதானால், சிறுவர்கள் துஷ்பிரயோகம் செய்யப்படுவதை குறைப்பதற்காக ஆப்பிள் வெளியிட உள்ளதாகக் கூறப்படும் தொழில்நுட்பம், iCloud இல் யூசர் அப்லோட்ஸ் போன்ற எனகிரிப்டட் செய்யப்படாத புகைப்படங்களை கண்காணிக்கலாம்.

  • Share this:
ஆப்பிள் யூசர்களின் ஸ்மார்ட்போன்களில் குழந்தை பாலியல் துஷ்பிரயோகம் (CSAM) தொடர்பான விஷயங்களை அடையாளம் காணும் நோக்கத்தில் ஐபோன்களை ஸ்கேன் செய்யும் வாடிக்கையாளர் பக்க கருவியை அறிமுகப்படுத்த ஆப்பிள் நிறுவனம் தயாராகி வருவதாக கூறப்படுகிறது. இந்த நடவடிக்கையில், ஆப்பிள் நிறுவனம் CSAM ஐக் குறிக்கும் மூலோபாய அடையாளங்காட்டிகளை குறியாக்கும் செய்யும். மேலும் iCloud இல் இருக்கும் யூசர்களின் iPhone புகைப்படங்களுக்கான சர்ச்சர்களை இயக்க இந்த அடையாளங்காட்டிகளை ஹாஷ் செய்யும்.

இந்த சர்ச், ஆப்பிள் போனில் கண்டுபிடிக்கும் பொருத்தங்கள் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு முடிவுகளை அளிக்கும். மேலும் அது பல பொருத்தங்களைக் கண்டால், அதன் முடிவு உடனடியாக ஆப்பிளின் சேவையகங்களுக்குத் திருப்பி அனுப்பும். விரைவில் வரவிருக்கும் இந்த புதிய அம்சம் குறித்து கிரிப்டோகிராபி மற்றும் சைபர் பாதுகாப்பு நிபுணர் மற்றும் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியலின் இணை செயலரான மேத்யூ கிரீன் அறிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தொடர்ச்சியான ட்வீட்களில் இது பற்றி விவரித்து எழுதிய கிரீன், “முதலில் இந்த அம்சம், கிளவுட்டில் சேமிக்கப்பட்ட புகைப்படங்களுக்கு வாடிக்கையாளர் பக்க ஸ்கேனிங் செய்ய பயன்படுத்தப்படும். இறுதியில், என்க்ரிப்டட் செய்யப்பட்ட செய்தி அமைப்புகளுக்கு கண்காணிப்பைச் சேர்ப்பதில் முக்கிய கருவியாக இது விளங்கும். தவறான செய்லபாடுகளை தடுக்க E2E (end-to-end encrypted) மெசேஜிங் சிஸ்டங்களில் இது போன்ற ஒரு ஸ்கேனிங் சிஸ்டத்தை சேர்க்கும் திறன் உலகெங்கிலும் உள்ள சட்ட அமலாக்கத்தின் முக்கிய ஆஸ்க் விதிகளில் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எளிமையாகச் சொல்வதானால், சிறுவர்கள் துஷ்பிரயோகம் செய்யப்படுவதை குறைப்பதற்காக ஆப்பிள் வெளியிட உள்ளதாகக் கூறப்படும் தொழில்நுட்பம், iCloud இல் யூசர் அப்லோட்ஸ் போன்ற எனகிரிப்டட் செய்யப்படாத புகைப்படங்களை கண்காணிக்கலாம். சான் பெர்னார்டினோ சம்பவம் போன்ற குறிப்பிடத்தக்க நிகழ்வுகளுடன், ஆப்பிள் நிறுவனம் யூசர்களின் தனியுரிமையை ஆதரிப்பவராக இருந்தது. ஆனால் தற்போது அறிவித்துள்ள இந்த புதிய அம்சத்தின் அறிவிப்பின்படி தனது வாடிக்கையாளரின் தனியுரிமை அம்சம் என்பது கேள்விக்குறியில் நிற்கிறது.

Also read... சாம்சங் Galaxy Z Fold 3, Galaxy Z Flip 3 மொபைல்களின் விலை எவ்வளவு தெரியுமா? வெளியீட்டிற்கு முன்னதாக கசிந்த தகவல்!

இந்த அம்சம் ஒரு குறிப்பிட்ட வகை உள்ளடக்கத்திற்கான அடையாளங்காட்டிகளை, எண்டு-டு-எண்டு என்க்ரிப்டட் செய்யப்பட்ட மீடியா வரை பார்க்க உதவும். இது, என்க்ரிப்டட் செய்யப்பட்ட உரையாடல் ஆப்களில் உள்ள பேச்சு சுதந்திரத்தில் கடுமையான தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும். அதிலும் தீங்கிழைக்கும் நோக்கங்களைக் கொண்ட யூசர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களை குறிவைத்து இத்தகைய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தலாம் என்றும் அஞ்சப்படுகிறது.

இருப்பினும், இப்போதைக்கு, ஆப்பிளின் இத்தகைய நடவடிக்கை தனியுரிமை மற்றும் பாதுகாப்பை நோக்கி பேரழிவை ஏற்படுத்தும் என்று கூற முடியாது. இருப்பினும், தனியுரிமை மற்றும் பாதுகாப்பு வழக்கறிஞர்கள் ஏற்கனவே ஆப்பிளின் ஆரம்ப நோக்கங்கள் உன்னதமானதாக இருந்தாலும், இதுபோன்ற நடவடிக்கை அனைத்து மக்களின் நலன்களுக்காகவும் இருக்காது என்று கூறியுள்ளனர்.
Published by:Vinothini Aandisamy
First published: