Home /News /technology /

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய மேக்புக் - MacBook Air M2 அம்சங்கள் மற்றும் விலை விவரங்கள்.!

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய மேக்புக் - MacBook Air M2 அம்சங்கள் மற்றும் விலை விவரங்கள்.!

MacBook Air M2

MacBook Air M2

Apple MacBook Air M2 | ஆப்பிள் நிறுவனம் Powerful Hardware மற்றும் பிற மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் தங்களுடைய புதிய வடிவமைப்பான Apple MacBook Air M2-யை ஜுலை 15 முதல் பெற்றுக்கொள்ளலாம் என வாடிக்கையாளர்களுக்கு அறிவித்துள்ளது.

    ஆப்பிள் நிறுவனம் கடந்த மாதம் நடைபெற்ற உலகளாவிய டெவலப்பர்கள் மாநாட்டின் போது, தங்களது நிறுவனத்தின் மூலம் புதிய வடிவமைக்கப்பட்ட மேக்புக் ஏர் எம் 2 மற்றும் மேக்புக் ப்ரோ என்ற இரண்டு லேப்டாக்களை அறிமுகப்படுத்தியது. குறிப்பாக புதிய MacBook Air M2 chipset உடன் உலகம் முழுவதும் உள்ள நுகர்வோர்களுக்கு விரைவில் கிடைக்கும் என தெரிவித்தது.

    இதனையடுத்து M2 சிப்செட் மூலம் இயங்கும் அதன் அனைத்து புதிய மேக்புக் ஏர் ஜூலை 8 முதல் முன் கூட்டியே ஆர்டருக்குக் கிடைக்கும் என்றும், வாடிக்கையாளர்கள் ஜூலை 15 முதல் டெலிவரிகளைப் பெறுவார்கள் என்று ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ள நிலையில், Apple MacBook air M2ல் உள்ள புதிய அம்சங்கள், மற்றும் விலை குறித்து இங்கே தெரிந்து கொள்வோம்..

    Apple MacBook air M2 ன் விலை:

    Apple MacBook air M2 வில் 8 core CPU, 8GB RAM மற்றும் 512 GB SSD ஸ்டோரேஜூடன் பேசிக் மாடல் ரூ. 1,19,900 முதல் தொடங்குகிறது. மேலும் 8-Core CPU, 10-Core GPU, 8GB RAM, and 512GB SSD வுடன் ரூபாய் 1,49,900 க்கும் கிடைக்க பெறவுள்ளது.

    இதோடு உங்களுக்கு ஆப்பிள் ரேமை 24 ஜிபி மற்றும் 2 டிபி (24GB and storage up to 2TB SSD) வரை ஸ்டோரோஜ் செய்யும் விருப்பதை வழங்குகிறது. ஆனால் இதனை நீங்கள் பெற வேண்டும் என்றால் கூடுதலாக ரூபாய் 40,000 மற்றும் ரூபாய் 60,000 வரை செலுத்த வேண்டும்.



    Apple MacBook air M2 ன் சிறப்பு அம்சங்கள்:

    தற்போது Apple MacBook air M2 சிப்செட் அதன் முன்னோடிகளை விட 18 சதவீதம் மேம்படுத்தப்பட்ட CPU செயல்திறன் மற்றும் 35 சதவிகித GPU செயல்திறனை வழங்குகிறது.

    10 core செயலிகளுடன் ஒப்பிடும் போது CPUடி1.9 மடங்கு வேகமாகவும் GPU 2.3 மடங்கு வேகமாக இருக்கும் என ஆப்பிள் நிறுவனம் கூறுகிறது.

    Also Read : ரூ.75,000-க்குள் உங்களுக்கு கிடைக்கும் சூப்பரான ஸ்மார்ட் ஃபோன்கள்.!

    இதோடு 6K வீடியோ தொழில்நுட்பத்துடன் அடுத்த அப்டேட்டான ios 16 பொருத்தப்பட்டிருக்கிறது. கடந்த 2021 மேக்புக் ப்ரோ வரிசையில் இடம் பெற்ற மினி எல்இடி மாடல்களைப்போல் இல்லாமல், ஆப்பிள் 13.6 இன்ச் லிக்விட் ரெடினா டிஸ்ப்ளேவுடன் மேக்புக் ஏர் ( 2022) ஐ பொருத்தியுள்ளது



    Apple MacBook Air M2 வில் 2TB SSD சேமிப்பு மற்றும் 24GB வரை ஒருங்கிணைந்த நினைவகத்தை நமக்கு வழங்குவதால் உபயோகிப்பதற்கு மிகவும் உதவியாக இருக்கும். மேலும் இதில் 1080p கேமராவைக் கொண்டுள்ளது. இது 2020 மாடலில் உள்ள 720p கேமரா இருந்தது குறிப்பிடத்தக்கது.

    Also Read : ஆஃப்லைன் ஜிமெயில் வசதியை வழங்கும் கூகுள் - மெயில் படிப்பது, அனுப்புவது & தேடுவது குறித்து அறிவோம்.!

    Apple MacBook Air M2 ஆனது type c அடாப்டருடன் வருவதால் 30 நிமிடங்களில் 50 சதவிகிதம் வேகமாக சார்ஜ் செய்ய முடியும் என ஆப்பிள் நிறுவனம் கூறுகிறது.
    Published by:Selvi M
    First published:

    Tags: Apple, Technology

    அடுத்த செய்தி