ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

Apple MacBook Air M1 பிளிப்கார்ட் தள்ளுபடி விலையில் பித்தலாட்டமா.?

Apple MacBook Air M1 பிளிப்கார்ட் தள்ளுபடி விலையில் பித்தலாட்டமா.?

ஆப்பிள் மேக்புக் ஏர் எம்1

ஆப்பிள் மேக்புக் ஏர் எம்1

Apple MacBook Air M1 | பிக் பில்லியன் டேஸ் விற்பனையின் போது Apple MacBook Air M1 16GB ரூ.70,000க்குள் கிடைக்கும் என்ற அறிவிப்பு என்ன ஆனது?

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

இந்தியாவின் முன்னணி இ-காமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட் தீபாவளி மற்றும் நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு “பிக் பில்லியன்ஸ் டே சேல்” என்ற சிறப்பு விற்பனையை தொடங்கியுள்ளது. செப்டம்பர் 23ம் தேதி தொடங்கியுள்ள இந்த சிறப்பு விற்பனை செப்டம்பர் 30ம் தேதி வரை நடைபெற உள்ளது. ஸ்மார்ட்போன்கள், வீட்டு உபயோக பொருட்கள், ஸ்மார்ட் வாட்ச், டேப், ஃபேஷன் மற்றும் ஆக்செசரீஸ், எலெக்ட்ரானிக் கேஜெட்ஸ் என பலவகையான பொருட்கள் மீது அதிரடி ஆபர்களை பிளிப்கார்ட் அறிவித்துள்ளது.

இந்த ஆண்டு பிக் பில்லியன் டேஸ் விற்பனையில் ஆப்பிள் நிறுவனத்தின் மேக்புக் ஏர் எம்1 விற்பனைக்கு வர உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. எனவே அதிரடி ஆபருடன் ஆப்பிள் மேக் புக்கை வாங்க காத்திருந்தவர்களுக்கு பிளிப்கார்ட் நிறுவனம் பேரதிர்ச்சியை கொடுத்துள்ளது. அதாவது ஆஃபர் ஆரம்பிப்பதற்கு முன்னதாக பிளிப்கார்ட் நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில், 70 ஆயிரம் ரூபாய்க்கும் கீழ் மேக்புக் ஏர் எம்1-யை வாங்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அப்படிப்பட்ட அறிவிப்புகள் எதுவும் இடம்பெறாதது வாடிக்கையாளர்களை ஏமாற்றம் அடைய செய்துள்ளது.

பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனையில் மேக்புக் ஏர் எம்1 மீது தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது 8 ஜிபி ரேம் + 256 ஜிபி எஸ்எஸ்டி ஸ்டோரேஜ் உடன் கூடிய மேக்புக் ஏர் எம்1 ஆப்பிள் ஸ்டோர்களில் 99,900 ரூபாய்க்கு விற்கப்படும் நிலையில், பிளிப்கார்ட்டில் இதன் விலை ரூ.92,890 ரூபாயாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மேக் புக் ஏர் எம் 1 மீதான ரூ.100 கேஷ்பேக் விலையை ரூ.92,790 ஆக மேலும் குறைக்கிறது. அத்துடன் ஆக்சிஸ் மற்றும் ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் அல்லது டெபிட் கார்டுகளுக்கு ரூ.1,750 தள்ளுபடி உள்ளது. இதனை வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் பட்சத்தில் இறுதியாக ஆப்பிள் மேக்புக் ஏர் எம்1-யை ரூ.91,080 ஆக வாங்க முடியும்.

பிக் பில்லியன் டேஸ் விற்பனையின் போது Apple MacBook Air M1 16GB ரூ.70,000க்குள் கிடைக்கும் என்ற அறிவிப்பு என்ன ஆனது?

மேக்புக் ஏரின் 16 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் வெரியண்டின் விலை ரூ. 1,12,900 ஆகும், ஆனால் பிளிப்கார்ட் வழங்கும் 11 சதவீத தள்ளுபடி மூலமாக ரூ. 99,890-க்கு வாங்க முடியும். மேலும் 100 ரூபாய் கேஷ்பேக் மற்றும் ஆக்சிஸ் பேங்க் மற்றும் ஐசிஐசிஐ பேங்க் பேமெண்ட் ஆப்ஷன்கள் மூலமாக 1,750 ரூபாய் ஆகியவை மூலமாக 98 ஆயிரத்து 040 ரூபாய்க்கு கிடைக்கிறது. மேலும் பிளிப்கார்ட் அறிவித்துள்ளது போல், 70,000 ரூபாய் வரை விலையைக் குறைக்க நினைத்தால் உங்களிடம் பழைய ஆப்பிள் லேப்டாப் மீது 23,100 வரை எக்ஸ்சேஞ்ச் ஆபர் தரப்படுகிறது. இதன் மூலம். 8 ஜிபி மேக்புக் ஏர் எம்1-யை 67,980 ரூபாய்க்கும், 16 ஜிபி மேக்புக் ஏர் எம்1-யை 74,940 ரூபாய்க்கும் வாங்க முடியும். மேக்புக் ஏர் எம்1 - யை வாங்குபவர்கள் கூகுள் நெஸ்ட் ஹப்பை தங்கள் புதிய லேப்டாப்புடன் வெறும் ரூ.3,999க்கு வாங்கலாம்.

Also Read : கூகுளுக்கு போட்டியாக களமிறங்கும் ஜூம் நிறுவனம்.. வெளியானது அதிரடி அறிவிப்பு.!

ஆப்பிள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ ஆன்லைன் ஸ்டோரில், மேக்புக் ஏர் எம்1 8ஜிபி ரேம் வேரியண்ட் 99,900 ரூபாய்க்கும், 16ஜிபி ரேம் 1,19,900 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஆரம்பத்தில் 8ஜிபி ரேம் கொண்ட லேப்டாப் 92,900 ரூபாய்க்கும், 16ஜிபி ரேம் உள்ள லேப்டாப் 1,12,900 ரூபாய்க்கும் அறிமுகப்படுத்தப்பட்டு, பின்னர் விலையேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Published by:Selvi M
First published:

Tags: Apple, Big Billion day sale, Flipkart, Technology