விரைவில் மலிவு விலை ஐபோன்கள் விற்பனைக்கு வருகிறது...

2020-ம் ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் இந்த விலை குறைவான ஐபோன் OLED ஸ்கிரீன் அல்லாமல் எல்சிடி ஸ்கிரீன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளதாம்.

விரைவில் மலிவு விலை ஐபோன்கள் விற்பனைக்கு வருகிறது...
மாதிரிப்படம்
  • News18
  • Last Updated: September 6, 2019, 7:07 PM IST
  • Share this:
விற்பனையை அதிகரிக்க விலை குறைவான ஐபோன்களை அடுத்த ஆண்டு அறிமுகம் செய்ய ஆப்பிள் திட்டமிட்டுள்ளது.

ஆப்பிள் நிறுவனம் வருகிற செப்டம்பர் 10-ம் தேதி புதிதாக மூன்று ஐபோன் மாடல்களை அறிமுகம் செய்ய உள்ளது. இந்த நிகழ்வுக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துக் காணப்படும் வேளையில் மேலும் ஆப்பிள் குறித்த புதியதொரு தகவல் வெளியாகி உள்ளது.

சர்வதேச அளவில் விற்பனையை அதிகரிக்க விலை குறைவான ஐபோன்களை வெளியிட ஆப்பிள் திட்டமிட்டுள்ளதாம். கடந்த 2016-ம் ஆண்டு 28,700 ரூபாய்க்கு வெளியான ஐபோன் SE மாடலை ஒத்ததாக புதிய விலை குறைவான ஐபோன் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் பெயர் வெளியிடப்படாத இந்த ஐபோன் 4.7 இன்ச் ஸ்கிரீன் கொண்டதாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.


2020-ம் ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் இந்த விலை குறைவான ஐபோன் OLED ஸ்கிரீன் அல்லாமல் எல்சிடி ஸ்கிரீன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளதாம். சீனா மற்றும் இந்திய சந்தைகளில் இதர நிறுவனங்கள் வளர்ந்து வரும் வேளையில் ஆப்பிள் மட்டும் விற்பனை வீழ்ச்சியைச் சந்தித்து வருவதே இந்த விலை குறைவான ஐபோன் அறிமுகம் செய்யும் திட்டத்தின் பின்னனி என்றும் விளக்கப்படுகிறது.

மேலும் பார்க்க: வெளியாகிறது ஆப்பிள் ஐபோன் 11 சீரிஸ்... அறிவிப்புக்கு முன்னரே கசிந்த தகவல்கள்..!

அஜித்தின் ரீமேக் படங்கள் ஒரு பார்வை!
First published: September 6, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்