i phone 13: அட்டகாசமான வசதிகளுடன் அறிமுகமான ஆப்பிள் ஐபோன் 13: இந்தியாவில் விலை என்ன?

ஐபோன் 13

ஐபோன் 13 மாடல்களுக்கான முன்பதிவு இம்மாதம் 17ம் தேதி தொடங்குகிறது.  செப்டம்பர் 24ம் தேதி முதல் செல்போன்கள் வாடிக்கையாளர்களுக்கு அனுப்பி வைக்கப்படும். 

  • Share this:
    ஆப்பிள்நிறுவனத்தின் ஐபோன் 13 மாடல்  4 வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.  இந்த மொபைல்களுக்கான முன்பதிவு வரும் 17ம் தேதி தொடங்குகிறது.

    அமெரிக்காவின் காலிஃபோர்னியாவில்  நடைபெற்ற ஆப்பிள் ஈவண்டில் அந்நிறுவனத்தின் புதிய தொலைத் தொடர்பு கருவிகள் அறிமுகப்படுத்தப்பட்டன.  4 வகைகளில் ஐபோன் 13 மாடல்  செல்ஃபோன், ஆப்பிள் வாட்ச், ஆப்பிள் ஐபேட் ஆகியவற்றை ஆப்பிள் நிறுவனத்தின் சி.இ.ஓ. டிக் குக் மற்றும் அவரது குழுவினர் அறிமுகப்படுத்தினர்.

    ஐபோன் 13 சீரிஸ்:

    ஐபோன் 13, ஐபோன் 13 மினி,  13 ப்ரோ, 13 ப்ரோ மேக்ஸ் ஆகிய 4 வகைகளில் செல்ஃபோன்களை ஆப்பிள் அறிமுகம் செய்துள்ளது. இந்த மாடல்கள் ஆப்பிள் ஏ15 பயோனிக் சிப்செட் கொண்டிருக்கிறது. ஐபோன் 13 மற்றும் ஐபோன் 13 மினி ஆகியவை முறையே 128 ஜி.பி, 256 ஜி.பி, 512 ஜி.பி மெமரியுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 13 ப்ரோ மற்றும் 13 ப்ரோ மேக்ஸ்  ஆகியவற்றில் மேற்கூறியவற்றுடன் 1 டி.பி. மெமரி மாடலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.  அனைத்து மாடல்களிலும் முன்பக்கம் கேமரா 12 மெகா பிக்சல் ஆகும்.

    13 மற்றும் 13 மினி ஆகிய மாடல்களில் டூயல் 12 எம்பி வைடு மற்றும் அல்ட்ரா வைடு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. 13 ப்ரோ மற்றும் ப்ரோ மேக்ஸ் மாடல்களில் ப்ரோ 12 எம்.பி. டெலிபோட்டோ வைடு மற்றும் அல்ட்ரா வைடு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் புகைப்படங்களை துல்லியமாக எடுக்க முடியும். அதிகபட்சமாக 28 மணிநேரம் வரை வீடியோக்களை தொடர்ச்சியாக பார்க்க முடியும் என்று தெரிவிக்கபட்டுள்ளது.  இவை அனைத்தும் 5ஜி தொழில்நுட்பத்தில் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: பிளிப்கார்ட்டில் ஐபோன் 12 சீரிஸ் ஃபோன்களுக்கு மாபெரும் தள்ளுபடி... விலைப்பட்டியல் இங்கே!


     விலை (உத்தேசமாக)

    ஐ போன் 13 மினி  128 ஜி.பி.- ரூ.69,900

    ஐ போன் 13 மினி 256 ஜி.பி. - ரூ.79,900

    ஐ போன் 13 மினி 512 ஜி.பி. -ரூ.99,900

     

    ஐ போன் 13 128 ஜி.பி.- ரூ.79,900

    ஐ போன் 13 256 ஜி.பி.- ரூ.89,900

    ஐ போன் 13 512 ஜி.பி.- ரூ.109,900

     

    ஐ போன் 13 ப்ரோ 128 ஜி.பி.- ரூ.1,19,900

    ஐ போன் 13 ப்ரோ 512 ஜி.பி. - ரூ.1,49,900

    ஐ போன் 13 ப்ரோ 1 டி.பி. - ரூ.1,69,900



    ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் 128 ஜி.பி. - ரூ.1,29,900

    ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் 512 ஜி.பி. - ரூ.1,58,900

    ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் 1 டி.பி.- ரூ.1,79,900

    ஐபோன் 13 மாடல்களுக்கான முன்பதிவு இம்மாதம் 17ம் தேதி தொடங்குகிறது.  செப்டம்பர் 24ம் தேதி முதல் செல்போன்கள் வாடிக்கையாளர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.  ஐ போன் 13 சீரீஸுடன் ஐ பேட் (9ம் தலைமுறை) ஆப்பிள் வாட்சி சீரிஸ் 7 ஆகியவற்றையும் ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Murugesh M
    First published: