ஆப்பிள் நிறுவனம் சொந்தமாக Chips-களை உருவாக்கிய பிறகு இப்போது அடுத்தது இன்னும் ஓரிரு ஆண்டிலேயே மொபைல் டிவைஸ்களில் அதன் சொந்த கஸ்டம் டிஸ்ப்ளே ஸ்கிரீன்களை பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.
மொபைல் மற்றும் ஸ்மார்ட் வாட்சுகள் உள்ளிட்ட தனது சொந்த டிவைஸ்களின் ஸ்க்ரீன்களுக்காக சாம்சங் மற்றும் எல்ஜி போன்ற பார்ட்னர்களை சார்ந்திருப்பதை முடிவுக்கு கொண்டுவர ஆப்பிள் நிறுவனம் அடுத்த ஆண்டிற்குள் சொந்த டிஸ்ப்ளேக்களை உருவாக்க விரும்புகிறது. ப்ளூம்பெர்க்கின் கூற்றுப்படி ஆப்பிள் நிறுவனம் 2024-ஆம் ஆண்டின் இறுதிக்குள் மிகவும் விலையுயர்ந்த ஆப்பிள் வாட்ச்களில் அதன் சொந்த டிஸ்ப்ளேவை பயன்படுத்தி இந்த நடவடிக்கையை கிக் ஸ்டார்ட் செய்யும் என தெரிகிறது.
இதற்கிடையே ஆப்பிளின் இந்த முடிவு காரணமாக LG நிறுவனம் கடுமையாக பாதிக்கப்பட கூடும். ஏனென்றால் LG டிஸ்ப்ளேயின் மொத்த வருவாயில் சுமார் 36% ஆப்பிள் நிறுவனத்தையே சார்ந்துள்ளது. அந்த வகையில் சாம்சங் நிறுவனத்திற்கு ஆப்பிளுக்கு வழங்கப்படும் டிஸ்ப்ளேயின் மொத்த வருவாயின் பங்கு 6.6%-ஆக உள்ளது. ஆப்பிளின் டிவைஸில் பயன்படுத்தப்பட உள்ள அதன் சொந்த ஸ்கிரீன்ஸ் தற்போதைய OLED (ஆர்கானிக் லைட் -எமிட்டிங் டையோட்) தரநிலையை microLED எனப்படும் டெக்னலாஜிக்கு அப்கிரேட் செய்யும் என தகவல் வெளியாகி இருக்கிறது. ஆப்பிள் நிறுவனம் தனது முக்கிய தயாரிப்பான ஐபோன்களிலும் microLED டெக்னலாஜியை கொண்டு வர விரும்புகிறது.
இது தொடர்பாக வெளியாகி இருக்கும் அறிக்கையில், ஜானி ஸ்ரூஜியின் ஹார்டுவேர் டெக்னாலஜிஸ் டிவிஷனில்ஆப்பிளின் டிஸ்ப்ளே டெக்னாலஜி குழுவை இயக்கும் வெய் சென் என்பவரால் ஆப்பிளின் இந்த புதிய திட்டம் வழிநடத்தப்படுகிறது. நிறுவனம் அதன் ஹை-என்ட்ஸ்போர்ட்ஸ் வாட்ச்சான Apple Watch Ultra-வின் அப்டேட்டில் microLED டிஸ்ப்ளேக்களை சோதிக்க தொடங்கியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மேலும் இந்த அறிக்கையின்படி ஆப்பிள் நிறுவனம் பல ஆண்டுகளாக திட்டமிட்டு வரும் ஒரு முக்கியபடியாகும். microLED டெக்னலாஜியை முன்னோடியாக கொண்டுவந்த LuxVueஎன்ற ஸ்டார்ட்அப் நிறுவனத்தை ஆப்பிள் வாங்கியதில் இருந்து இந்த முயற்சி தொடங்கியது. இதன் மூலம் மற்ற நிறுவனங்களால் தயாரிக்கப்பட்ட காம்போனென்ட்ஸ்களை பயன்படுத்துவதில் இருந்து ஆப்பிள் நிறுவனம் மெதுவாக ஆனால் நிச்சயமாக விலகி செல்வதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Also Read : இனி பாலின அடிப்படையில் விளம்பரங்கள் வராது - புதிய கொள்கையை பின்பற்றும் மெட்டா நிறுவனம்!
இந்த நடவடிக்கை மூலம் தனது டிவைஸ்களை சிறப்பாக கஸ்டமைஸ் செய்யலாம் மற்றும் ஸ்கிரீன்களை உருவாக்குவதன் மூலம் சப்ளை செயினை மிகவும் திறம்பட கட்டுப்படுத்தலாம் என்று ஆப்பிள் நிறுவனம் நம்புகிறது. தற்போதைக்கு சாம்சங் மற்றும் எல்ஜி நிறுவனங்கள் ஆப்பிள் வாட்ச்களுக்கான டிஸ்ப்ளேக்களை வழங்கும் நிலையில் அடுத்த ஆண்டுக்குள் நிச்சயம் இந்த நிலை மாறிவிடும் என நிபுணர்கள் கூறுகின்றனர். ஆப்பிளின் own screen திட்டம் துவக்கத்தில் நிறுவனத்தின் ஹார்டுவேர் இன்ஜினியரிங் பிரிவில் உள்ள மூத்த நிர்வாகி Lynn Youngs என்பவரால் வழிநடத்தப்பட்டது. ஆனால் அந்த திட்டம் 2 ஆண்டுகளுக்கு முன் நிறுவனத்தின் கஸ்டம் சிப் குரூப்பை மேற்பார்வையிடும் Johny Srouji என்பவரிடம் மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Apple, Apple ipad, Apple iphone