ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

மூன்றாம் தரப்பு செயலிகளை அனுமதிக்க வேண்டும்..! மீண்டும் ஆப்பிளுக்கு ஆப்பு வாய்த்த ஐரோப்பா ஒன்றியம்..

மூன்றாம் தரப்பு செயலிகளை அனுமதிக்க வேண்டும்..! மீண்டும் ஆப்பிளுக்கு ஆப்பு வாய்த்த ஐரோப்பா ஒன்றியம்..

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய சட்டத்தினால் ஆப்பிள் நிறுவனம் தங்களுடைய கொள்கைகளை மாற்றி அமைக்கும் படி கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.  ஏற்கனவே மொபைல் சார்ஜர் அவர்களின் விஷயத்தில் அனைத்து ஐபோன்களிலும் USB-c சார்ஜர் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற உத்தரவிற்கு அடிபணிந்து அதற்கான செயலில் இறங்கியுள்ளது அந்நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்கவும் ...
  • News18
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

பொதுவாகவே ஆப்பிள் யூசர்களுக்கு பிரைவசி என்ற பெயரில் அனைத்து முக்கியமான சின்ன சின்ன வசதிகளை அனுபவிக்க முடியாத சூழலில் தான் ஆப்பிள் டிவைஸ்களை பயன்படுத்தி வருகின்றனர். அதில் முக்கியமாக ஆப்பிள் யூசர்களால் நினைத்த நேரத்தில் உடனடியாக தாங்கள் விரும்பிய தளத்திலிருந்து பாடல்களை டவுன்லோட் செய்து கொள்வதோ அல்லது வேறு ஏதேனும் தளங்களில் இருந்து ஆப்களை டவுன்லோட் செய்வதும் கூட தடை செய்யப்பட்டுள்ளது.

ஆனால் இப்போது ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய சட்டத்தினால் ஆப்பிள் நிறுவனம் தங்களுடைய கொள்கைகளை மாற்றி அமைக்கும் படி கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே மொபைல் சார்ஜர் அவர்களின் விஷயத்தில் அனைத்து ஐபோன்களிலும் USB-c சார்ஜர் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற உத்தரவிற்கு அடிபணிந்து அதற்கான செயலில் இறங்கியுள்ளது அந்நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய சட்டத்திநாள் நிறுவனம் மூன்றாம் தரப்பு ஆப் ஸ்டோர்களையும் தங்கள் மொபைலில் டவுன்லோட் செய்யும் வசதியை கொண்டு வர உள்ளது. வரும் ஆண்டில் அந்த கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு அனைவருக்கும் ஒரே மாதிரியான சேவை வழங்கப்படும் என என தெரிகிறது.செக்யூரிட்டி மற்றும் பிரைவசி என்ற பெயரில் இத்தனை நாள் மூன்றாம் தரப்பு ஆப் ஸ்டோர்கள் மற்றும் வலைத்தளங்களில் இருந்து டவுன்லோட் செய்வதை தடை செய்து வந்த ஆப்பிள் நிறுவனம் தற்போது இந்த சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது.

Read More : ஐபோனில் ஏர்டெல் 5ஜி.. சிம்பிளா ஆக்டிவேட் செய்யலாம்.. இதை செய்தாலே போதும்!

இதனால் தனக்கென ஒரு தனி பாதை அமைத்துக் கொண்டு இருந்த அந்நிறுவனம் தற்போது மைக்ரோசாஃப்ட் மற்றும் அமேசான் ஆகியவற்றுடன் போட்டி போடும் நிலைமை உண்டாகியுள்ளது. ஆனால் இவ்வாறு மூன்றாம் தரப்பு வலைத்தளங்களில் இருந்து டவுன்லோடு செய்ய அனுமதிப்பதினால் ஆப்பிள் நிறுவனத்தின் பாதுகாப்பு அம்சங்களையும் பலர் கேள்வி கேட்க துவங்கியுள்ளனர.

ஆப்பிள் நிறுவனம் மூன்றாம் தரப்பு செயல்களை அனுமதிக்காமல் இருப்பதற்கு பாதுகாப்பு முக்கிய காரணமாக கூறப்பட்டு வந்தது. ஆனால் இப்போது ஐரோப்பிய இணையத்தின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு மூன்றாம் தரப்பு ஆப் ஸ்டோர்களை அனுமதிப்பதன் மூலமாக டெவலபர்வர்களுக்கு அளிக்கப்படும் 30 சதவீத கமிஷன் குறையும் என்றும் இதன் மூலம் அதன் வருவாய் பாதிக்கப்படும் என்றும் தெரிகிறது.

ஐரோப்பிய யூனியத்தின் இந்த புதிய சட்டங்கள் 2024 ஆம் ஆண்டின் மத்தியில் நடைமுறைக்கு வரும் என்றும் சட்டத்தை மீறி செயல்படுபவர்களுக்கு அவர்களின் ஆண்டு வருமானத்தில் பத்து சதவீதம் அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் முக்கிய விளம்பர யுக்தியே அதன் வலிமையான பாதுகாப்பு அம்சமாகும். அதனால் தான் விலை அதிகம் இருந்தாலும் இதன் வாடிக்கையாளர்கள் அதிக அளவில் உள்ளனர். ஆனால் அஸ்திவாரத்தையே அசைக்கும் அளவு இந்த அறிவிப்பு உள்ளதால் இனி ஐரோப்பிய ஒன்றியத்தில் ஆப்பிளின் வெற்றி கொடி பறக்குமா என்பது கேள்விக்குறியாகி உள்ளது.

First published:

Tags: Apple, Apple iphone, Technology