ஐபோன் 14 எப்போது வெளியாகும் என்ற உறுதியான தகவல் தெரியாவிட்டாலும், பொதுவான அறிக்கைகள் வழக்கம் போலச் செப்டம்பர் மாதம் வெளியாகும் என உறுதிப்படத் தெரிவிக்கின்றன.
எப்போதுமே புதிய ஐபோனின் வெளியீட்டுத் தேதியைக் கணிக்க அல்லது உறுதிசெய்ய ஒவ்வொரு ஆண்டும் சிலர் சிரமத்திற்கு ஆளாகிறார்கள். ஆனால் புதிய ஐபோன் எப்போது வெளியிடப்படும் என யூகிப்பது உண்மையில் மிகவும் எளிமை.
புதிய டிவைஸ்களை குறிப்பாக ஐபோனை ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தும் முறையை நீங்கள் பார்த்தால் வழக்கமாக ஒரு ஃபார்முலாவை பின்பற்றுவது தெரியும். இது அடுத்த ஐபோன் எப்போது வெளியீடாகும் என்பதை நமக்கு எளிதாகப் புரிந்து கொள்ள உதவுகிறது.
Also Read:ஆங்கில மொழி பேசும் 5% பேர் மட்டுமே வாய்ப்புகளைப் பெறுகின்றனர் - அமித் ஷா
எனவே ஐபோன் 14 விரைவில் வெளியாகும் என்பது இதன் மூலம் தெரிகிறது. எனினும் வெளிவரவிருக்கும் ஐபோன் மாடல்களை பற்றி ஆப்பிள் நிறுவனம் இன்னும் எதையும் உறுதிப்படுத்தவில்லை. எனினும் அடுத்த மாதத்திற்குள் சில விவரங்களை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெரும்பாலான தகவல்கள் கூறுவது உண்மை என்றால் iPhone 14 சீரிஸ் வரும் செப்டம்பர் 13-ல் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்படலாம். இந்த ஆண்டு வெளியாகும் ஐபோன் 14 சீரிஸில் பெரும்பாலும் 4 புதிய மாடல்கள் இருக்கலாம் என்று தகவல் தெரிவிக்கின்றன.
ஆனால் இதில் mini மாடல் இருக்காது. ஏனெனில் mini மாடல்கள் iPhone SE மாடல்களின் விற்பனையை பாதித்ததாகவும் கூறப்படுகிறது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் iPhone SE (2022) எடிஷனை ரூ.43,900 என்ற துவக்க விலையில் அறிமுகப்படுத்தியது ஆப்பிள். டிசைன், ஹாட்வேர் செட்டப், கேமரா விவரங்கள், பேட்டரி மற்றும் பிற அம்சங்கள் ஐபோன் 14 மாடல் பற்றி ஏற்கனவே நிறையத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐபோன் 14 பற்றி நமக்குத் தெரிந்த சில முக்கிய தகவல்களை பார்ப்போம் .
* ஐபோன் 14 சீரிஸின் டிசைனில் பெரிய மாற்றம் இருக்காது. எனினும் சற்று பெரிய கேமரா செட்டப்பை பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Also Read:நியாமான கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும்: தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு தமிழக அரசு கடிதம்
* ஐபோன் 14 மாடல் பேக் பேனலில் 2 கேமராக்கள் மற்றும் முன்பக்கத்தில் ஒரு சென்சார் ஆகியவற்றை கொண்டு கேமரா ஸ்பெசிஃபிகேஷன்ஸ் அப்படியே இருக்கக் கூடும். அதே போல ஐபோன் 14 பெரிய சென்சார்களைக் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. குறைந்த ஒளியிலில் புகைப்படம் எடுப்பதில் ஐபோன் 14 சிறந்ததாக இருக்கும் என்பதையும் இது குறிக்கிறது.
* வரவிருக்கும் iPhone 14 ஒட்டு மொத்த பேட்டரி செயல்திறனைப் பொறுத்தவரைச் சிறப்பாக இருக்கும் எனத் தெரிகிறது. ஏனென்றால் ஐபோன் 14 ஆல்-டே பேட்டரி லைஃபை கொண்டு வரும் என்று கூறப்படுகிறது.
பர்ஃபாமென்ஸ் எப்படி?
ஐபோன் 13 சீரிஸில் இயங்கும் A15 பயோனிக் சிப்செட் மூலம் ஐபோன் 14 சீரிஸ் இயங்கும் என்று சில தகவல்கள் தெரிவிக்கும் நிலையில், மறுபுறம் ஆப்பிள் நிறுவனத்தின் அடுத்த தலைமுறை A16 பயோனிக் சிப்-உடன் இந்த போன் வரும் என்று சில அறிக்கைகள் தெரிவிக்கின்றன. ஆனால் புதிய ஐபோன் பழைய சிப்புடன் வருவது வித்தியாசமாக இருக்கும் என்பதால், பெரும்பாலும் A16 பயோனிக் சிப் கொண்டே ஐபோன் 14 சீரிஸ் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
* வரவிருக்கும் ஐபோன் மாடல் iOS 16-ல் இயங்கும் என்பதை இந்த ஆண்டின் தொடக்கத்தில் WWDC 2020 நிகழ்வில் ஆப்பிள் அறிவித்தது நினைவிருக்கலாம்.
* விலையைப் பொறுத்த வரை, ஐபோன் 13 சீரிஸ் அறிமுகப்படுத்தப்பட்ட அதே விலையில் ஐபோன் 14 சீரிஸ் அறிமுகப்படுத்தப்படலாம். பெரும்பாலான அறிக்கைகள் ஐபோன் 14 799 டாலர் (தோராயமாக ரூ.63,446) என்ற ஆரம்ப விலையில் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கின்றன.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.