டாப் 10 ஸ்மார்ட்போன்கள் பட்டியலில் அதிக இடங்களில் சாம்சங்... முதலிடத்தைப் பிடித்த போன் எது?

இப்பட்டியலில் இரண்டாம் இடத்தில் சாம்சங் கேலக்ஸி A10 மற்றும் மூன்றாம் இடத்தில் சாம்சங் கேலக்ஸி A50 ஆகிய போன்கள் உள்ளன.

டாப் 10 ஸ்மார்ட்போன்கள் பட்டியலில் அதிக இடங்களில் சாம்சங்... முதலிடத்தைப் பிடித்த போன் எது?
மாதிரிப்படம்
  • News18
  • Last Updated: September 10, 2019, 5:53 PM IST
  • Share this:
சர்வதேச அளவில் 2019-ம் ஆண்டின் முதல் காலாண்டில் அதிகம் விற்பனையான டாப் 10 ஸ்மார்ட்போன்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. டாப் 10 ஸ்மார்ட்போன்கள் பட்டியலில் அதிக இடத்தை சாம்சங் பெற்றுள்ளது.

இந்தப் பட்டியலில் அதிகம் விற்பனையான ஸ்மார்ட்போனாக ஆப்பிள் ஐபோன் XR உள்ளது. 2019-ம் முதல் காலாண்டில் மட்டும் சுமார் 26.9 மில்லியன் ஆப்பிள் ஐபோன் XR ஸ்மார்ட்போன்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இப்பட்டியலில் இரண்டாம் இடத்தில் சாம்சங் கேலக்ஸி A10 மற்றும் மூன்றாம் இடத்தில் சாம்சங் கேலக்ஸி A50 ஆகிய போன்கள் உள்ளன.

ஆப்பிள், ஐபோன் XR போனைக் கடந்த 2018-ம் ஆண்டு அறிமுகம் செய்தது. 64 ஜிபி ஸ்டோரேஜ் உடனான ஐபோன் XR 76,900 ரூபாய்க்கும் 256 ஜிபி ஸ்டோரேஜ் உடனான ஐபோன் XR 91,900 ரூபாய்க்கும் அறிமுகம் ஆனது. ஆனால், சிறிது காலத்திலேயே விலைக்குறைப்பு செய்த ஆப்பிள் நிறுவனம் 64 ஜிபி ஸ்டோரேஜ் போனை 53,900 ரூபாய்க்கும் 128 ஜிபி ஸ்டோரேஜ் உடனான ஐபோன் XR 64,900 ரூபாய்க்கும் 256 ஜிபி ரகம் 74,900 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது.


பட்டியலில் 4 முதல் 10 இடங்களில் ஐபோன் 8 (10.3 மில்லியன் போன்கள்), ஜியோமி ரெட்மி 6A (10 மில்லியன்), ரெட்மி நோட் 7 (10 மில்லியன்), சாம்சங் கேலக்ஸி ஜே2 கோர் (9.9 மில்லியன்), ஓப்போ A5 (9.7 மில்லியன்), ஐபோன் XS மேக்ஸ் (9.6 மில்லியன்) மற்றும் சாம்சங் கேலக்ஸி A30 (9.2 மில்லியன்) ஆகிய போன்கள் உள்ளன.

மேலும் பார்க்க: அமேசான் விழாக்கால தள்ளுபடி... ஸ்மார்ட் எலெக்ட்ரானிக் பொருட்களுக்கு அதிரடி ஆஃபர்!

குழந்தைகளை போன், டிவி மோகத்தில் இருந்து திசை திருப்புவது எப்படி?
First published: September 10, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்