Home /News /technology /

ரூ.43,900க்கு அறிமுகமாகி உள்ள IPhone மாடலை வெறும் ரூ.28,900க்கு வாங்குவது எப்படி?

ரூ.43,900க்கு அறிமுகமாகி உள்ள IPhone மாடலை வெறும் ரூ.28,900க்கு வாங்குவது எப்படி?

ஐபோன்

ஐபோன்

Iphone At Lowest Price : ஐபோனை குறைந்த விலையில் வாங்குவது எப்படி ?

யாருக்கு தான் ஒரு ஐபோன் வாங்கும் ஆசை இருக்காது? ஆப்பிள் ஐபோன் ஒன்றை கையில் வைத்துக்கொண்டு சும்மா கெத்து காட்ட வேண்டும் என்றும் நினைப்பவர்கள் தொடங்கி உண்மையிலேயே ஐபோனின் அம்சங்களால் ஈர்க்கப்பட்டவர்கள் வரை எல்லோருக்குமே ஐபோன் வாங்கும் ஆசை உள்ளது. ஒருவேளை லேட்டஸ்ட் ஐபோன் மாடல் ஒன்றை வாங்குவதில் உங்களுக்கு ஏதாவது பட்ஜெட் பிரச்சினை உள்ளதென்றால்.. உங்களுக்கான ஒரு குட் நியூஸ் தான் - ஆப்பிள் ஐபோன் எஸ்இ 2022 மீது அறிவிக்கப்பட்டுள்ள ஆஃபர்கள்!

கடந்த மாதம் ஆப்பிள் நிறுவனம் அதன் ஐபோன் எஸ்இ 3 (அல்லது ஐபோன் எஸ்இ 2022) மாடலை அறிமுக செய்தது. எஸ்இ சீரிஸின் கீழ் வருவதால் இந்த மாடல் நிறுவனத்தின் லேட்டஸ்ட் என்ட்ரி லெவல் ஐபோன் என்பதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம். நினைவூட்டும் வண்ணம், இந்த புதிய ஐபோன் எஸ்இ 3 அல்லது ஐபோன் எஸ்இ 2022 மாடலுடன் ஆப்பிள் ஐபேட் ஏர் (ஐந்தாம் தலைமுறை) மற்றும் ஆப்பிள் மேக் ஸ்டுடியோ ஆகியவைகளும் அறிமுகம் செய்யப்பட்டது.

புதிய ஐபோன் மாடலை பொறுத்தவரை, இது அப்டேட் செய்யப்பட்ட கேமராவுடன், ஆனால் முன்னதாக வெளியான ஐபோன் எஸ்இ (2020) மாடலின் அதே வடிவமைப்புடன் வருகிறது மற்றும் இது சமீபத்திய ஆப்பிள் ஏ15 பயோனிக் சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது.



ஐபோன் எஸ்இ 3 மாடலின் விலை விவரங்கள்:

இந்தியாவில் ஐபோன் எஸ்இ 2022 மாடலின் விலை ரூ.43,900 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், வாடிக்கையாளர்கள் இந்த புதிய ஐபோனின் விலையை ரூ.28,900 ஆக குறைக்க முடியும். இதற்காக அவர்கள் அறிவிக்கப்பட்டுள்ள பேங்க் மற்றும் எக்ஸ்சேன்ஜ் ஆஃபரை பயன்படுத்த வேண்டும்.

also read : அமேசான், பிளிப்கார்டில் ஐபோன் 13 மீது கிடைக்கும் "அடேங்கப்பா" ஆபர்கள்!

அசல் விலை விவரங்களை பொறுத்தவரை, ஐபோன் எஸ்இ 3 மாடலின் பேஸிக் 64ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விலை ரூ.43,900 ஆகும். மறுகையில் உள்ள 128ஜிபி மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன்களின் விலைகள் முறையே ரூ.48,900 மற்றும் ரூ.58,900 ஆகும். இது ஆப்பிளின் அதிகாரப்பூர்வ ஸ்டோர்கள் (ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் ஆகிய இரண்டும்), அமேசான், விஜய் சேல்ஸ், ரிலையன்ஸ் டிஜிட்டல் மற்றும் பல சில்லறை விற்பனையாளர்கள் வழியாக வாங்க கிடைக்கும்.



ஐபோன் எஸ்இ 3 மீதான சலுகைகள்:

ஆப்பிள் ரீசெல்லர் ஆன இந்தியா ஐஸ்டோர் வழியாக ஐசிஐசிஐ வங்கி டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள், கோடக் வங்கி டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் மற்றும் எஸ்பிஐ கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி இந்த மாடலை வாங்கினால் ரூ.2,000 என்கிற கேஷ்பேக் சலுகை அணுக கிடைக்கும். இதன் மூலம் குறிப்பிட்ட மாடலின் பேஸிக் ஸ்டோரேஜின் விலையை ரூ.41,900 ஆக குறைக்க முடியும்.

also read : டிரையல் உற்பத்தி நிலையை எட்டியுள்ள ஐபோன் 14...



மேலும், வாடிக்கையாளர்கள் தங்கள் பழைய ஸ்மார்ட்போனை கேஷிப்ஃபை (Cashify) அல்லது சர்விஃபை (Servify) வழியாக விற்கக்கூடிய எக்ஸ்சேன்ஜ் சலுகையும் அணுக கிடைக்கிறது. ஐஸ்டோர் இணையதளதத்தின்படி, ஐபோன் 8 மாடலின் 64ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனின் எக்ஸ்சேன்ஜ் வேல்யூ ரூ.13,000 ஆகும். இது ஐபோன் எஸ்இ 2022 மாடலின் விலையை மேலும் குறைத்து, ரூ.28,900 ஆக மாற்றுகிறது.

ஆப்பிள் ஐபோன் எஸ்இ 3 ஆனது 4.7 இன்ச் எல்சிடி டிஸ்ப்ளேவுடன் வருகிறது. இது 6-கோர் ஆப்பிள் ஏ15 பயோனிக் சிப் மூலம் இயக்கப்படுகிறது மற்றும் 16-கோர் நியூரல் எஞ்சினையும் கொண்டுள்ளது. மேலும் இது சென்சார்-ஷிப்ட் இமேஜ் ஸ்டேபிலைசேஷனை உள்ளடக்கிய சிங்கிள் 12 மெகாபிக்சல் வைட் ஆங்கிள் கேமராவையும், 7 மெகாபிக்சல் செல்பீ கேமராவையும் பேக் செய்கிறது.

 
Published by:Tamilmalar Natarajan
First published:

Tags: Apple iphone

அடுத்த செய்தி